
மங்கையர் மலர் இதழில், 2015 ஆம் ஆண்டு, 'உன்னதம் தரும் யோகா’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் எந்த மாதிரியான ஆசனங்களைச் செய்யலாம்?
மாதவிலக்கு முற்றிலும் நின்றுபோவதையே மெனோபாஸ் என்கிறோம். பெண்களுக்குப் பொதுவாக 40-55 வயதுக்குள் மெனோபாஸ் வந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள். சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும். ரத்தப் போக்கு அதிகரிக்கும். முறையற்ற மாதவிலக்கும் சிலருக்கு ஏற்படலாம். எரிச்சல், கோபம், படபடப்பு என்று எப்போதும் சிலர் டென்ஷனாகவே இருப்பார்கள்.