
வெளியூர், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போது நாம் தங்குவதற்கு வசதியாக ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவோம். பல ஹோட்டல்களில் சோப், சாப்பாடு, டீ, ப்ரஷ், பேஸ்ட், ஷாம்பு என தேவையான வசதிகளை நமக்கு செய்து கொடுத்துவிடுவார்கள். சில ஹோட்டல்களில் இந்த வசதிகள் செய்து தரப்படமாட்டாது.
இங்கே கொடுக்கப்படும் சோப்புகளை அனைவரையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்று இல்லை. தேவையானவர்கள் பயன்படுத்துவார்கள். சிலர் அதை அப்படியே வைத்துவிடுவார்கள். இதை ஹோட்டல் ஊழியர்கள் மற்ற விருந்தினர்களுக்கு நிச்சயம் வைக்க மாட்டார்கள். எத்தனை வாடிக்கையாளர்கள் வந்தாலும், அவர்களுக்காக புதியதாக தான் சோப், ஷாம்பு என அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படுகின்றன.
ஏற்கனவே ஒரு விருந்தினருக்கு கொடுக்கப்பட்ட சோப்புகள் எங்கே செல்லும் என்று யாருக்காவது தெரியுமா? மேலும் அவர்கள் பயன்படுத்திவிட்டு வைக்கப்பட்டிருக்க சோப்புகளை என்ன செய்வார்கள்? நிச்சயம் நம் மனதிற்கு வருவது குப்பையில் எறிவதாக தான் இருக்கும். ஆனால் நிச்சயம் இல்லை. இங்கு எஞ்சியிருக்கும் சோப்புகள் ஒரு கூட்டத்தையே வாழ வைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், இங்கு மிஞ்சியிருக்கும் சோப்பு உள்ளிட்ட இதர பொருட்களை ஹோட்டல் உரிமையாளர்கள் ஏழை மக்களுக்கு மொத்தமாக கொடுத்துவிடுவதாக அறிக்கை கூறுகிறது. அனைத்து ஹோட்டல்களிலும் இது செய்யப்படாவிட்டாலும், பல ஹோட்டல்களில் இது செய்யப்படுகிறது. 2009ஆம் ஆண்டில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றை நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதற்கு எதிராக பிரச்சாரம் செய்தன. ஏனென்றால் உபயோகப்படுத்திய சோப்புகளை ஏழைகளுக்கு கொடுப்பது தவறு என கண்டனம் எழுந்தது.
ஆனால் இந்த சோப்புகள் மறுசுழற்சி செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அறிக்கைகளின்படி, இந்தியாவில், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பொருட்களை ஹோட்டல் அறைகளில் விட்டுச் செல்கிறார்கள். 'ஏழைகளுக்கான உலகத்தை சுத்தம் செய்தல்' போன்ற சேவைகளில் உள்ள அமைப்புகளால் இவை பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் ஹோட்டல்களில் இருந்து இந்தப் பொருட்களை எடுத்து, குளோபல் சோப் திட்டத்துடன் இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறார்கள். சிறிதளவு பயன்படுத்தப்பட்ட சோப்புகள் மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய சோப்பாக தயாரிக்கப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. தண்ணீர் மற்றும் சுகாதாரம் இல்லாத நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு அவை இலவசமாக வழங்கப்படுகின்றன. க்ளீன் தி வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் 2009 முதல் 90 மில்லியனுக்கும் அதிகமான சோப்புக் கட்டிகளை மறுசுழற்சி செய்து 127 நாடுகளில் தேவைப்படுபவர்களுக்கு விநியோகித்துள்ளன. இந்தச் செயல்பாட்டில், சோப்புக் கட்டிகள் சேகரிக்கப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புதிய சோப்புகளாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன.