கருப்பையில் 2 - 3 கிலோ கட்டியையும் லேப்ராஸ்கோபி மூலம் அகற்றிவிடலாம்... மருத்துவர் விளக்கம்!
Uterine fibroids என்பது கருப்பை நார்த்திசுக்கட்டிகள் ஆகும். இது 7 வகைகளில் உண்டு என்றாலும் அதிகமாக பார்க்க கூடிய பொதுவான கட்டிகளாக நாம் மூன்று பற்றி சொல்லலாம். ஒன்று கர்ப்பப்பை தசைகளில் வருவது, இரண்டாவது கர்ப்பப்பை உள்ளே வருவது, மூன்றாவது கர்ப்பப்பை வெளியே வருவது. இந்த ஃபைபராய்டு கட்டிகள் குறித்து நாம் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்? இது குறித்து விளக்குகிறார் Dr. MALA RAJ, FIRM HOSPITALS, Chennai.
ஃபைப்ராய்டு கட்டிகள் ஆபத்தானதா?
ஃபைப்ராய்டு கட்டிகள் எந்த வயதில் வருகிறதோ அதை பொறுத்து பாதிப்புகள் உண்டாகும். திருமணம் முடிந்து குழந்தை பெறுவதற்கு முன்பு இந்த கட்டி வந்தால் அது குழந்தை பெறுவதற்கே சிக்கலாக இருக்கலாம்.
Submucosal fibroids:
கர்ப்பப்பையின் உள்ளே உள் புறணியில் இருக்கும் கட்டி சப்மியூகோசல் கட்டி என்று அழைக்கப்படுகிறது.
Intramural fibroids:
கர்ப்பப்பையில் தசை சுவரில் வரக்கூடிய நார்த்திசுக்கட்டிகள் உட்புற நார்த்திசுக்கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.
Subserosal fibroids:
இந்த சப்சீரோசல் நார்த்திசுக்கட்டிகள் என்பது கர்ப்பப்பையின் வெளியே வரக்கூடிய கட்டிகள் ஆகும்.
இந்த 3 வகைகளில் Submucosal fibroids என்பது தான் கருத்தரிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
Submucosal fibroids இருந்தால் கருத்தரிக்க வாய்ப்பில்லையா?
இந்நிலையில் கருப்பையின் உள் புறணியில் நார்த்திசுக்கட்டிகள் வளர்கிறது. இந்த இடம் கரு உள்ளே வந்து தங்கும் இடம் என்பதால் இந்த இடத்தில் நார்த்திசுக்கட்டிகள் வளரும் போது அது கருவை தங்கவிடாது. இந்த கட்டியில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதால் கருவந்து தங்கினாலும் கருவை அப்புறப்படுத்திகொண்டே அல்லது அதை தொல்லை செய்துகொண்டே இருப்பதால் கரு வளர்வது சவாலாக இருக்கும். அப்படியே கரு வந்து தங்கினாலும் கருச்சிதைவு ஏற்பட அதிக ஆபத்துண்டு. அதையும் தாண்டி கரு வளர்ந்தாலும் அவர்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிலையில், hysteroscopy என்னும் முறையில், கர்ப்பப்பை உள்ளே இருக்கும் இந்த நார்த்திசுக்கட்டியை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்.
Intramural fibroids என்னும் கருப்பை தசையில் வரக்கூடிய நார்த்திசுக்கட்டிகள் என்ன பாதிப்பை உண்டு செய்யும்?
இந்த இடத்தில் வரக்கூடிய நார்த்திசுக்கட்டிகளுக்கு அளவு உண்டு. உதாரணத்துக்கு 3 செமீ அளவில் கட்டி இருந்தால் அவை பிரச்சனையில்லை. ஆனால் இது கருப்பைக்கு எந்த இடத்தில் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் இவை கருப்பை சவ்வுக்கு அருகில் இருந்தால் அந்த இடத்தை தொல்லை செய்து கொண்டே இருக்கும். கருவை தங்கவிடாது என்பதால் இந்த வகை கட்டிகளை அப்புறப்படுத்துவதே சரியான சிகிச்சையாக இருக்கும். அதற்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை சிறந்த சிகிச்சையாக இருக்கும். சில நேரங்களில் 2 அல்லது 3 கிலோ வரை கூட கட்டி வளரலாம். இந்த நிலையில் லேப்ராஸ்கோபி மூலம் கட்டியை அகற்றி கர்ப்பப்பையை பழைய நிலைக்கு மாற்றிவிடலாம்.
கீஹோல் சர்ஜரி மூலம் பெரிய கட்டியை அகற்ற முடியுமா?
5 mm கொண்ட கட்டிகளை லேப்ராஸ்கோபி மூலம் அகற்றலாம். 2 அல்லது 3 கிலோ எடைகொண்ட கட்டியையும் கூட இந்த லேப்ராஸ்கோபி மூலம் அகற்றிவிடலாம். ஆனால் இதற்கு தனியாக நவீன மருத்துவ உபகரணங்கள் உண்டு என்று கூறுகிறார். அதற்கேற்ப FIRM மருத்துவமனையில் அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உண்டு. நவீன மருத்துவ அறுவை சிகிச்சைகள் பலவும் இங்கு வெற்றிகரமாக செய்யப்படுகின்றன. ( டாக்டர் மாலா ராஜ் அவர்கள் இந்த லேப்ராஸ்கோபி துறையில் 25 வருடங்களாக வெற்றிகரமாக சிகிச்சை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.)
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் பெரியதாக இருந்தால் எப்படி அகற்றப்படுகிறது?
morcellator instrument மூலம் இந்த கட்டிகள் அகற்றப்படுகின்றன. லேப்ராஸ்கோபி சிகிச்சையில் இந்த morcellator என்னும் பையை கருப்பையில் வைத்து கட்டிகளை சிறிது சிறிதாக உடைத்து அந்த பையினுள் வைத்து பிறகு அப்புறப்படுத்திவிடுவோம். இதனால் கட்டிகள் வெளியே தெரிக்காது. இம்முறையில் கட்டிகளில் நச்சுத்தன்மை வெளியே பரவாது. வயிற்றுப்பகுதி சுத்தமாகும். தொற்று எங்கும் பரவாது. இம்முறையே in-bag morcellation என்கிறார் இந்த நவீன சிகிச்சை முதன் முதலில் யுஎஸ் -ல் தான் செய்யப்பட்டது. (சென்னையில் 6 வருடங்களுக்கு முன்பு இவர்கள் தான் அறிமுகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
Subserosal fibroids:
இந்த நார்த்திசுக்கட்டிகள் கருப்பைக்கு வெளியே வரும் என்றாலும் இந்த கட்டிகளும் பெரிதாக மாறலாம். இவற்றையும் லேப்ராஸ்கோபி மூலம் அகற்றலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்த கட்டிகள் பயாப்ஸி பரிசோதனைக்கும் அனுப்பப்படும். இதன் மூலம் அவை புற்றுநோய் கட்டிகளாக என்று பரிசோதிக்கப்படும்.
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அகற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்?
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அப்புறப்படுத்திய பிறகு கருத்தரித்தல் எளிதாக இருக்கும்.
மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சிகிச்சைக்கு பிறகு அவை கட்டுப்படும்.
குழந்தை பெற்றவர்களாக இருந்தாலும் கருப்பை அகற்ற விருப்பமில்லையெனில் நார்த்திசுக்கட்டிகளை அப்புறப்படுத்தலாம்.
மெனோபாஸ் காலத்துக்கு பிறகும் இந்த நார்த்திசுக்கட்டி சுருங்காது. மேலும் சிலருக்கு அரிதாக இவை புற்றுநோய் கட்டிகளாகவும் மாறலாம் என்பதால் இதை அப்புறப்படுத்துவதே நல்லது. 45 வயதுக்கு மேல் விரும்பினால் கர்ப்பப்பை அகற்றிவிடலாம்.
மெனோபாஸ் காலத்துக்கு பிறகு வருடம் ஒரு முறை ஸ்கேன் செய்வது கர்ப்பப்பை செயல்பாட்டை கண்டறிந்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.