தமிழைக் கொல்கிறோம்!

கவிதை
தமிழைக் கொல்கிறோம்!

னைவியை ஒய்ஃப் என்கிறோம்!

வாழ்க்கையை லைஃப் என்கிறோம்!

கத்தியை நைஃப் என்கிறோம்!

புத்தியை புதைத்தே நிற்கிறோம்!

த்தையை ஆன்ட்டி என்கிறோம்!

அவள் மகளை ஸ்வீட்டி என்கிறோம்!

கடமையை டுயூட்டி என்கிறோம்!

காதலியை பியூட்டி என்கிறோம்

காதலை லவ் என்கிறோம்!

பசுவை கவ் என்கிறோம்!

ரசிப்பதை வாவ் என்கிறோம்!

இதைத் தானே தமிழாய் சொல்கிறோம்!

முத்தத்தை கிஸ் என்கிறோம்!

பேருந்தை பஸ் என்கிறோம்!

அளவை சைஸ் என்கிறோம்!

அழகை நைஸ் என்கிறோம்!

ன்னிப்பை சாரி என்கிறோம்!

புடைவையை சேரி என்கிறோம்!

ஆறுதலாய் டோன்ட் வொர்ரி என்கிறோம்

தமிழ் வாயால் ஆங்கிலம் தின்கிறோம்!

மைதியை சைலன்ஸ் என்கிறோம்!

சண்டையை வயலன்ஸ் என்கிறோம்!

படுத்தலை நியூஸன்ஸ் என்கிறோம்

முட்டாள்தனத்தை நான்ஸன்ஸ் என்கிறோம்

மிழை அறவே மறக்கிறோம்!

தாய்மொழியை முழுதும் கொல்கிறோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com