
மச்ச சாஸ்திரத்தில் நம் உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் மச்சம் இருப்பதின் மூலம் கோடீஸ்வரர் ஆகக்கூடிய யோகம் உண்டு என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பெண்களுக்கு பொட்டு வைக்கக்கூடிய இடத்தில் குறிப்பாக நெற்றிப்பொட்டில் மச்சம் இருந்தால், அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள். மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் பணக்கார கணவர்கள் அமைவார்கள். அதன் மூலமாக அவர்கள் வாழ்வில் செல்வமும், செல்வாக்கும் நிறைந்த கோடீஸ்வர நிலையை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
பெண்ணின் வலதுக்கையில் மச்சம் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். இவர்கள் புகுந்த வீட்டில் மிகவும் செல்வாக்காக இருப்பார்கள். சமுதாயத்தில் மதிக்கத்தக்க வேலையில் இருப்பார்கள். நல்ல வருமானம், செல்வம் நிறைந்திருக்கும். இவர்கள் செய்யும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருந்தால் நிச்சயம் கோடீஸ்வர நிலையை அடைவார்கள்.
பெண்களின் மூக்கின் மீது மச்சம் இருந்தால் கணவன் மூலமாக நிச்சயம் கோடீஸ்வர நிலையை அடைவார்கள்.பெண்களின் இடதுப்புற கன்னத்தில் மச்சம் இருந்தால், மிகவும் அழகாக இருப்பார்கள். அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பாற்றல் அதிகமாக இருக்கும். மிகவும் நேர்மை வாய்ந்தவராக இருப்பார்கள்.
பெண்ணின் வலதுக்காதில் மச்சமிருந்தால், செல்வத்தை சேர்க்கும் நபராக திகழ்வார்கள்.
பெண்களின் தொப்புளில் மச்சமிருந்தால், அவர்கள் செய்யும் தொழிலில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு கோடீஸ்வர நிலையை அடைவார்கள். இவர்கள் வாழ்வில் எந்த ஒரு சிக்கலும், பிரச்னையும் ஏற்படாது.
பெண்ணின் வலதுப் புருவதிற்கு மேல் மச்சம் இருந்தால் தன்னம்பிக்கை, தைரியம் கொண்டவராக இருப்பார். எதையும் சாதிக்கும் திறமைக்கொண்டவர் இவர்.
பெண்ணின் இடதுப் புருவத்திற்கு மேல் மச்சம் இருந்தால், ஒழுக்கம் நிறைந்த குணங்களை கொண்டவராக இருப்பார்.
உதட்டிற்கு மேல் மூக்குக்கு கீழ் மச்சம் இருந்தால், உயர்வான எண்ணம் கொண்டவர், அழகான நபர் இவருக்கு கணவராக அமையும் வாய்ப்புண்டு.