'லியோ’ குறித்து சஞ்சய் தத் கூறுவதென்ன?

'லியோ’ குறித்து சஞ்சய் தத் கூறுவதென்ன?

பாலிவுட் பூமராங்!
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமான ‘லியோ’வில் விஜய்யும், திரிஷாவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். பாலிவுட் நடிகர்களாகிய சஞ்சய் தத், மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ மேனன் போன்ற பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஸெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசை அமைத்துக்கொண்டிருக்கிறார். இதன் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘லியோ’ படம் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் சஞ்சய் தத் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அற்புதமானது. லோகேஷ் கனகராஜ் எனது மகன் மாதிரி. ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் படக்குழுவினருடன் எனக்கு நல்ல புரிதல் இருந்தது” என்று மகிழ்வுடன் கூறியுள்ளார்.

 

எமர்ஜென்ஸி அறிவிப்பு கங்கனா!

றைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்ஸி’. இதில் முன்னணி நடிகையாகிய கங்கனா ரனவத் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைக்கதை வசனத்தை ரித்தேஷ் ஷா எழுத, இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ள ‘எமர்ஜென்ஸி’ படப்பிடிப்பு வேலைகளை கங்கனா ஜனவரி மாதம் நிறைவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீடு நவம்பர் 24ஆந் தேதியெனக் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை டிவிட்டரில் வெளியிட்ட கங்கனா, “பாதுகாவலரா? அல்லது சர்வாதிகாரியா?” நம் தேசத்தின் தலைவர், தன் மக்கள் மீதே போர் தொடுத்த நமது வரலாற்றின் இருண்ட காலகட்டத்தைக் காணுங்கள்” என்று கூறியிருப்பது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸின் பிரதிபலிப்பு!

“ஒருவரை உருவாக்கவும், உடைக்கவும் செய்வது பாக்ஸ் ஆபீஸ்தான்” என தெரிவிக்கும் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், தனது நேர்காணல் ஒன்றில், “வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளேன். ஒரு விஷயம் நன்றாக நடந்தால் பாராட்டுவதும், அவ்வாறு நடக்கவில்லையெனில் மோசமான விமர்சனங்களைக் கூறுவதும் பொதுவான விஷயம்தான். நல்லது நடக்கையில் மகிழ்ந்து கெட்டது நடக்கையில் வருந்தினாலும், உடனே அதனைக் கடந்துவிடும் திறன் படைத்தவன் நான். என்னைத் தொடர்ந்து வழி நடத்தும் வேலையை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது. நேர்மையான உழைப்பிற்கு என்றுமே பலன் உண்டு என்பதில் மாற்றம் கிடையாது.

பாக்ஸ் ஆபீசில் எனது படங்களின் தோல்வி பாதிக்கத்தான் செய்கிறது. இதைத்தான் ஹிட் ஃப்ளாப் என்கின்றனர். எப்போது நாம் சரியாக இருக்கிறோம்? எங்கே தவறு செய்கிறோம்? என்பதை பார்வையாளர்கள் உணர்த்த, அவைகள் பாக்ஸ் ஆபீஸ் எண்களில் பிரதிபலித்து விடுகிறது” என்று கூறியுள்ளார்.

நடிப்பு, குடும்பம் இரண்டுமே முக்கியம்!

டிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பிறகும் நடித்து வருகிறார். தற்சமயம் ‘இந்தியன் 2’, ‘பாரீஸ் – பாரீஸ்’, ‘கருங்காப்பியம்’ ஆகிய படங்களில் நடித்து வருகின்ற நேரத்தில், அவர் சினிமாவிலிருந்து விலக விருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இது குறித்து காஜல், “இதெல்லாம் வீண் வதந்தி. இவ்வாறு நான் கூறவோ, முடிவெடுக்கவோ இல்லை. குழந்தையை வளர்க்கும் பணிகளில் ஈடுபடுவதோடு, குடும்பத்திற் காகவும் சற்றே அதிக நேரம் ஒதுக்கும் காரணம், நடிப்பிற்கு முழுக்குப் போடுவதாக சொல்வதில் நியாயம் கிடையாது. எனது நடிப்புத் தொழிலும் குடும்பமும் வேறு – வேறு. ஆனாலும் இரண்டுமே எனக்கு முக்கியமானது. தற்சமயம் நடிப்பில் கவனம் செலுத்தியும், புதிய கதைகளைக் கேட்டும் வருகிறேன்” என்றார். நியாயமான பதில்.

logo
Kalki Online
kalkionline.com