உனக்கு என்ன காது செவிடா?

ஜோக்ஸ்
உனக்கு என்ன காது செவிடா?

"பதிலுக்கு பதில் பேசினாத்தான் பொண்டாட்டி சண்டைக்கு வரான்னு கம்முனு இருந்து பார்த்தேன்...!"

"அடடா, அப்புறம்..?"

"கேட்கக் கேட்க கம்முனு இருக்கியே, உனக்கு காது செவிடா?' ன்னு கேட்டு வம்பு வளர்க்கிறா!"

*****************

"எனக்கு கடன் வாங்கவும் பிடிக்காது, கொடுக்கவும் பிடிக்காது! உனக்கு...?"

"வாங்கினா, கொடுக்கப் பிடிக்காது!"

*****************

மானேஜர் : "இந்த ஃபைல்ல என்னப்பா மல்லிகைப்பூ வாடை வீசுது?"

பியூன் : "ஸ்டெனோ மேடம் தலைக்கு வச்சு படுத்திருந்தாங்க சார்!"

*****************

"வியாதி, முழுவதும் குணமான பிறகுதான் எங்க டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணுவார்.!"

"எங்க டாக்டர் அப்படி இல்லே ; கையில பணம் தீர்ந்ததுமே அனுப்பி விட்டுடுவார்!"

*****************

"புருசனுக்கு கட்டுப்பட்டு, மாமனார் - மாமியாரை மதிச்சு, வீட்டு வேலைகளை திறம்பட செய்யக் கூடிய அழகான, வசதியான பொண்ணா இருந்தா சொல்லுங்க தரகரே....?"

"ம்ம்ம்… இருந்தா சொல்றேன் சார்....!"

*****************

"ஆணுக்கு எதிரி ஆண் தான்னு சொல்றியே, எப்படி?"

"ஆண்களுக்கு பெரும்பாலும் தரகர் மூலம்தானே கல்யாணம் நடக்குது!"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com