ஆண்கள் குங்குமம் இட்டுக் கொள்ளலாமா?

சுமங்கலிப் பெண்கள் இட்டுக் கொள்ளும் குங்குமம் மங்கலத்தை குறிக்கும் ஒரு பொருளாகக் கருதப்படுகிறது.
குங்குமம்
குங்குமம்
Published on
mangayar malar strip

குங்குமம் பெண்களின் மங்கலச் சின்னம்.‌ பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் மகாலக்ஷ்மியின் அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இட வேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலை வகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களில் இட்டுக்கொள்வதே உத்தமமானது. கோவிலில் குங்குமத்தை வாங்கி இடது கையில் மாற்றலாகாது. வலது கையிலிருந்து விரலை வளைத்து குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் குங்குமத்தில் பரிபூரண சக்தியைப் பெறலாம்.

இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால் படிகாரம் சுண்ணாம்பு, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்ந்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும்.

படிகாரம் கிருமினி நாசினி என்பதால் சரும நோய்கள் வராது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதைக் கட்டுப்படுத்தக் கூடியது நெற்றிப் பகுதி. நெற்றியில் குங்குமம் இடுவதால் சூடு தணிகிறது.

இதையும் படியுங்கள்:
நெற்றியில் விபூதி, குங்குமம் அணிவதன் நன்மைகளும் காரணங்களும்!
குங்குமம்

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால் தருபவர், பெறுபவர் இருவருக்கும் மாங்கல்ய பலம் பெருகும்.

மூளைக்குச் செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதி வழியாகச் செல்வதால் இவைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. குங்குமம் இடும் எவரையும் வசீகரம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

பெண்கள் முதலில் தான் இட்டுக் கொண்ட பின் தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒருசேர குறிப்பதாகும். திருமணப் புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத் தன்மை உள்ள குங்குமம் வைப்பதால் முகம், உடல், மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மை உண்டாகும்.

ஆண்கள் இரு புருவங்களையும் இணைந்தாற் போல் குங்குமம் வைப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

குங்குமம் இரு புருவங்களுக்கிடையே இடுவது தெய்வீகத் தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக்கட்டுப்பாட்டிற்கு நல்லது. குங்குமத்தினால் முகம் களை பெறும்.

பெண்களின் நெற்றியின் முன் வகிட்டில் லட்சுமிதேவி உறைவதாக கூறுவர். நடு வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால் பெண்கள் பிற ஆடவனின் மனதைத் தூண்டாதவாறு தடுக்க முடியும். குங்குமம் வைத்தவர்களை பிற ஆண்களால் அடைய முடியாது. அதனால் பெண்கள் கற்பு நிலை பெறும். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், பிறர் சக்தி தம் மேல் ஏவுதல் போன்றவற்றை குங்குமம் இடுவதால் தடுக்க முடியும்.

மனித உடலில் சக்தி வாய்பாடு நெற்றிக்கண். அதனாலேயே தியானத்தில் நெற்றிப் பகுதி தூண்டப்படுகிறது. நெற்றியில் குங்குமம் இடுவதால் புதிய சிந்தனைகளும் உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகின்றன. பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இயங்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தின் தாழம்பூ குங்குமம் உலகப் பிரசித்திப் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com