சாதிக்கப் பிறந்தவளா? இல்லை சகித்துக்கொள்ளப் பிறந்தவளா? பெண்ணின் விஸ்வரூபம்!

மாாச் 8: மகளிர் தினம்!
Women's Day | Mom with child
Women's Day | Mom with childAI Image
Updated on
Mangayar malar strip
Mangayar malar strip

பெண் எனும் இரண்டெழுத்து, ஆம் அது ஒரு மந்திரச்சொல்!

அந்த மந்திரம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அனைத்தையும் வெல்லுமே!

அவள்தான் அனைத்து நிலைகளுக்குமான சூத்ரதாாி!

அவளுள் தான் எத்தனை எத்தனை அவதாரங்களின் மூலாதாரம்!

தாயாய், சகோதரியாய், தமக்கையாய், துணையாய், அத்தனை அத்தனை பரிணாமங்கள் கொண்டவள்!

அவள் ஒரு தெய்வாம்சம், அதுவே அவளின் சிறப்பம்சம்!

அவளை சீண்டினால் அவளே செய்திடுவாள் துவம்சம்!

பத்துமாதம் சுமந்தவள் எத்தனை வலிகளை சுமந்தாளோ!!

கருவில் நாம் வளர அவளின் தியாகம் கணக்கிலாமல் வருமே!

நம்மை பெற்றெடுக்க அவள் பட்ட வலிகள் சொல்லி மாளுமா சொல்லில்தான் அடங்குமா!

அவள் கருணையின் வடிவம் கண்கண்டதொரு தெய்வம்!

தியாகமல்லவா செய்கிறாள், தாய்மையின் தனி ஒரு அவதாரமாய்!

அவளில் தான் எத்தனை எத்தனை அவதாரம்!

அன்ன லெட்சுமியாய்!

தான்ய லெட்சுமியாய்!

சந்தான லெட்சுமியாய்!

தனதான்ய லெட்சுமியாய்!

வீர லெட்சுமியாய்!

மகா லெட்சுமியாய்!

யோக லெட்சுமியாய்!

பத்ரகாளியாய்!

ஆதிபராசக்தியாய்!

மகாமாாியாய் !

அகிலாண்ட நாயகியாய்!

அங்காள பரமேஸ்வரியாய்!

பொருத்தருளும் பூமாதேவியாய்!

பூதேவி ஶ்ரீதேவியாய்!

நம் குலம் தழைக்கவந்த குலமகளாய்!

காஞ்சி காமாட்சியாய்!

காசி விசாலாட்சியாய்!

புவனேஸ்வரியாய்!

மதுரகாளியாய்!

சமயபுரத்தாளாய்!

அவளது அவதாரங்களை பட்டியல் போடலாமே!

அவதார ரூபிணியின் அருள் பெறவேண்டாமா!

பெண்மையை போற்றுங்கள் மாறாக பலிகடா ஆக்கவேண்டாம் பாலியலால்!

எத்தனை வலிகள், எத்தனை சுமைகள், எத்தனை ரணங்கள், அத்தனையும் தாங்கிய தங்கமகளல்லவா!

அவள் சாதிக்கப்பிறந்தவள்!

அனைத்தையும் சகித்துக்கொள்ளப் பிறந்தவவள் அல்லவே?

அவளை போற்றி வணங்குவோம், அவள் ஒரு மகாசக்தி என போற்றிபாடுவோம்!

logo
Kalki Online
kalkionline.com