
- நாபா.மீரா
சக்தி
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
ஆம் ஆணும் பெண்ணும் சரிநிகர்
சமானமாய் இணைந்திட்டதொரு ஆனந்த வாழ்வு
கண்டிடவே எங்கெங்கு காணினும் சக்தியடா...
சொன்னான் முண்டாசுக் கவி அன்று...
திசை எட்டும் பரவட்டும் மாதர் புகழ்
வாகன உரிமம் கிடைத்திடப் போடும்
எட்டு உணர்த்திடும் உண்மை அறிவீர்!
சக்திகளாம் நம் பயணமதில் தடைகள்
யாவும் தகர்த்திட்டே அச்சம் தவிர்ப்போம்!
கரைகள் கடந்தே உச்சம் தொடுவோம்!
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.