உலக தாய்ப்பால் வாரம் - 5: குளியல் சோப்புக்கு பதிலாக தாய்ப்பால் பயன்படுத்தலாமா?

Lactation Consultant டாக்டர். சோனாலி சந்தானம்
Baby bathing - World Breastfeeding Week
Baby bathing - World Breastfeeding Week
Updated on
mangayar malar strip

ம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து தொகுப்பு....

டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் சுரப்பதை உறுதிப்படுத்த கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு முன்பாகவே பம்ப் செய்யலாமா? அப்படியெனில் எத்தனை வாரங்களுக்கு முன்பு தொடங்கவேண்டும்?

குழந்தை பிறப்பதற்கு முன்பு தாய்ப்பால் பம்ப் செய்யும் முறை அனைத்து தாய்மார்களுக்கும் அறிவுறுத்தப்படுவதில்லை. கர்ப்பகால நீரிழிவு மற்றும் PCOS போன்ற பிரச்சனைகளால் குறைந்தளவு தாய்ப்பால் சுரக்கலாம் என்ற நிலை இருப்பின், அப்பெண்களுக்கு மட்டும் குழந்தை பிறப்புக்கு முன்பாகவே தாய்ப்பால் பம்ப் செய்யும் முறை அறிவுறுத்தப்படுகிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com