அட்டை டு அட்டை ஒரு புரட்டு புரட்டி விடுவேன்!

அட்டை டு அட்டை ஒரு புரட்டு புரட்டி விடுவேன்!

னக்கும் மங்கையர் மலருக்கும் 30  வருட பந்தம். அதற்கு முன்னரும் படித்திருக்கிறேன். அனால் எனக்குத் திருமணமான பிறகுதான், தொடர்ந்து வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.  முதலில் நான் வாங்கும்போது மாதாமாதம்  வந்து கொண்டிருந்த இதழ்,  பின்னர் 15  நாட்களுக்கு ஒருமுறை வர ஆரம்பித்தது. எப்படா  ஒன்றாம் தேதியும்,  16 ஆம் தேதியும்  வரும் என்று காத்துக்கிடப்பேன். அன்றைய தினம் இதழ் வரவில்லை என்றால் அப்செட் ஆகிவிடுவேன். இதழ் கிடைத்தவுடன்,  அட்டை டு அட்டை ஒரு புரட்டு புரட்டி விடுவேன்.

ராசிபலன் படிப்பேன்.   "சொல்லவிரும்புகிறோம்" பகுதியில் இதழ் பற்றிய என் விமர்சனம் வந்திருக்கிறதா என்று பார்ப்பேன். என் இதழ் பற்றிய விமர்சனம் நிறைய வந்திருக்கிறது. நிறைய compliment copy யாக இதழ் கிடைத்திருக்கிறது. Rs50, Rs100 என்று மணியார்டர் வந்திருக்கிறது.
ம. மலர் மூலம் நான்கு புடவைகள் பரிசாகப்  பெற்றிருக்கிறேன். இப்பொழுது ஆன்லைன்  என்றவுடன்தான் படிப்பது குறைந்து விட்டது.
இப்பொழுது கூட க்ரைம் மன்னன் ராஜேஷ் குமார் அவர்களின் "கதை இங்கே, முடிவு எங்கே?"   போட்டியிலும்  கலந்துகொள்கிறேன்.
வாழ்த்துக்கள் மங்கையர் மலரே!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com