
-எஸ்.பவானி, திருச்சி
சிறை
சிறையையே
பார்த்திராத
தலைவர்
சிலையாய் ஆனதும்
சிறை வைக்கிறார்கள்
சுற்றிலும்
இரும்புக் கம்பி
வேலி போட்டு.
வயதைக் குறிப்பிட்டு சொல்லப்படும்
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
பிடிப்பதில்லை
எவருக்கும்.
என் அருமை
தெரியாமல்
ஒதுக்கி விட்டார்களே
வீட்டிலுள்ளோரிடம்
கேட்கிறது
பரணியில் உறங்கும்
பாட்டி விளையாடிய
பல்லாங்குழி.
அறுபதாயிரம் பேரை
மணந்து கொண்ட
தசரதனுக்கு
மனைவியர் மீது
சந்தேகம் இல்லை
ஒரே ஒரு
சீதாவை மணந்த
ஸ்ரீராமனுக்கு
அவள் மீது
சந்தேகப் பார்வை
புராணம்
படைத்தவர்கள் மீது
வருகிறது கோபம்.