ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on
ஓவியம்: பிரபுராம்

ஹலோ… செக்… செக்…

மைக் டெஸ்டிங்! ஒன்… டு …த்ரீ! செக்… இந்த வாரம் ஒரு ராஜா – மந்திரி கதை கேட்க உங்களை அன்புடன் அழைப்பது அனுஷா நடராஜன்… ஜன்… ஜன்…!

ஒரு ஊருல ஒரு ராஜா. அவரும் அவரோட மந்திரியும் எப்பவும் நகர்வலம் வருவாங்க. பொதுவா, அரண்மனையோட கிழக்கு வாசலைத்தான் உபயோகிப்பாங்க. ஒருமுறை அங்க ஏதோ சீரமைப்பு வேலை நடக்கவே, தெற்கு வாசல் வழியாவும் போக ஆரம்பிச்சாங்க.

கிழக்கு வாசல் வழியா போகும்போதும் வரும்போதும் ராஜா, 'ஜம்'முன்னு இருப்பாரு. அதுவே தெற்கு வாசல் வழியா போகும்போது, ராஜாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடும். தலைவலி, உடம்பு வலி, ஜுரம்னு எதுன்னா படுத்தும்.

ரண்மனை வைத்தியரும் என்னென்னவோ பரிசோதனை செஞ்சு பார்த்தாரு. உடம்புல ஒரு கோளாறும் இல்ல… அப்புறம் ஏன் இப்படி?
ராஜா கிட்டத்தட்ட படுத்த படுக்கையாவே ஆயிட்டாரு. மந்திரிக்கு கவலை ஆயிடுச்சு! உடனே, காரணம் தேடி மாறுவேஷத்துல புறப்பட்டாரு.

இந்த முறை தெற்கு வாசல் வழியா போறப்போ, மந்திரி கூர்மையா கவனிக்க ஆரம்பிச்சாரு. எதுவும் வித்யாசமா படலை. ஆனா, சந்தனக் கடைக்காரன் ஒருத்தன் மட்டும் கொஞ்சம் பதற்றமா இருந்தா மாதிரி தோணுச்சு. உடனே அந்தக் கடைக்குப் போயி, பேச்சு கொடுத்தாரு. வந்தவரு மந்திரின்னு அந்தக் கடைக்காரனுக்குத் தெரியாது.

"என்னப்பா, வியாபாரம் எல்லாம் எப்படிப் போகுது?"

"ரொம்ப டல்லா இருக்குது… நீங்க யாரு சாமி?"

"நான் அரண்மனை சேவகன்!"

"அப்படியா? ராஜாவுக்கு உடம்பு சரியில்லையாமே?"

"இல்ல, கொஞ்சம் அசதி அவ்வளவுதான்!"

"அவ்வளவுதானா…?"ன்னு இழுத்தான்.

"ஏம்பா… உனக்கு என்னப்பா சோகம்?"

"இல்ல… ராஜா செத்துப்போனா, சந்தனக் கட்டையில எரிப்பாங்க! என்கிட்ட இருக்குற எல்லா சந்தனக் கட்டையும் நல்ல விலைக்குப் போகும். ஆனா, அவரோ இழுத்துக்கிட்டு கிடக்குறாரு!"

'ஓஹோ! கதை இப்படிப் போகுதா?'ன்னு மந்திரிக்கு உடனே பளிச்! பளிச்!

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்

"அப்பா, நான் சந்தனக்கட்டை வாங்கத்தான் வந்தேன். இதை மூலிகையோட இழைச்சு, ராஜா உடம்புல பூசினா அசதி போயிடுமாம். இந்தா பணம்! நாலு கட்டை கொடு!"ன்னு சொல்லி, தினமும் தானே வந்து சந்தனக் கட்டைகளை ஓவர் விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

ஒரே வாரம்தான்!

சந்தன வியாபாரி தெம்பா பேச ஆரம்பிச்சுட்டான்.

"எப்படி இருக்காரு ராஜா? இப்ப தேவலையா? நம்ப கடை சந்தனம், வைத்தியத்துக்கு உதவியா இருக்கா?"ன்னு பரிவா இவன் கேட்கக் கேட்க, அங்கே அரண்மனையில ராஜா 'ஜம்'முன்னு உடல் தேறி, 'ஜிம் பாடி' ஆயிட்டாரு!

விஷயம் இதுதான் மை டியர் மங்கைஸ்!

தெற்கு வாசல் வீதிகளில் ராஜாவின் பரிவாரத்தைப் பார்க்கும்போதெல்லாம் சந்தன வியாபாரிக்கு தன்னையும் அறியாமல் ஒரு நெகடிவ் சிந்தனை.

'இந்த ராஜா மண்டைய போட்டா, நமக்கு வியாபாரம் ஆகுமே! இவன் சாகாம இருக்கானே!'ன்னு ஆழ்மனசுல ஓர் எதிர்மறை சிந்தனை.
அதை அவன் தீவிரமா ஃபோகஸ் செய்யச் செய்ய, ராஜாவுக்கும் ஏதோ ஒரு பாதிப்பு.

மதியூகி மந்திரியின் சாதுர்யமான யோசனையால், வியாபாரியின் தீய சிந்தனை, நேர்வளமாக்கப்பட்டது.

ராஜாவும் குணமானார். ஹேப்பி!

வியாபாரிக்கும் வருமானம் வந்தது… ஹேப்பி… ஹேப்பி!

டு புட் இட் ஷார்ட் கண்மணீஸ்…

ண்ணங்கள் உயிருள்ளவை… சக்தி வாய்ந்தவை…
ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு விளைவை ஏற்படுத்தும்.
எப்போதும் பாசிடிவ்வாகப் பேசவும், நினைக்கவும் செய்தால் நமக்கும் நல்லது நடக்கும்; பிறருக்கும் நல்லது நடக்கும்!

வண்ணங்கள் மலர்களுக்கு அழகு;
நல் எண்ணங்கள் நமக்குப் பேரழகு!
அப்படித்தானே?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com