
-ஆர் சுந்தரராஜன், சிதம்பரம்
படங்கள்: பிள்ளை
" தலைவரே உங்க பேரு கின்னஸில் வருதாம்..! "
" எதுக்கு? "
" ஆதாரம், தடையம் இல்லாமல், ஊழல் செய்வதில் , நீங்கள் கில்லாடியாம்..!
…………………………………………………………..
"நிறைய பேசினா கழுத்து வலிக்குது டாக்டர்.."
" வாய் தானே வலிக்கனும் , அதெப்டி கழுத்து வலிக்குது? "
" என் பொண்டாட்டி பேசிட்டே இருக்கா… நான் தலைய ஆட்டிட்டே இருக்கவேண்டியதா இருக்கே…!!!
…………………………………………………………..
"என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு.."
"அட போய்யா… என் செல் ஃபோன்ல கூடத்தான் நானே படிக்காத மெசேஜ் 58 இருக்கு…"
…………………………………………………………..
-வி. ரேவதி தஞ்சை
"என் தோள்கள் தினவெடுக்கின்றன தளபதியாரே!"
" எதிரி அனுப்பிய போர் ஓலையை எடுத்து படித்துப் பாருங்கள் மன்னா, சரியாகிவிடும்."
…………………………………………………………..
"சாமி கிட்ட அடுத்த பிறவியில யார் உங்க மனைவியா வரணும்னு வேண்டிக்கிட்டீங்க?"
"நாமளே மறுபடியும் கணவன் மனைவியா வரணும்னுதான் வேண்டிக்கிட்டேன். ஆனா, நான் மனைவியாவும், நீ கணவனாவும் இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்!"
…………………………………………………………..
"எனக்கும் உங்களுக்கும் சண்டைனு எதிர் வீட்டுக்காரர் கிட்ட சொன்னீங்களா?"
"அவருக்கும் அவரோட மனைவிக்கும் நடந்த பிரச்னைகளை அவர் சொல்லும் போது, நான் ஒண்ணு கூட சொல்லாட்டி நல்லா இருக்காதே சரசு?"
…………………………………………………………..
"உங்க மனைவி உங்களை அடிப்பாங்களா சார்?"
"அவுங்க நினைக்கிற மாதிரி நாம நடந்துக்கிட்டா நம்பளை எதுக்கு அடிக்கப் போறாங்க?"