கோடை Special – ஐவகை வற்றல்கள்!

கோடை Special – ஐவகை வற்றல்கள்!
Published on
-இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்
பிரண்டை வற்றல் 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி அரிசி  -150 கிராம்
ஜவ்வரிசி          –  150 கிராம்
பிரண்டை        – மூன்று துண்டுகள் கொத்தமல்லித்தழை – கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு -இரண்டு கரண்டி,  பெருங்காயம்  சிறிதளவு, பச்சை மிளகாய் – 2  எலுமிச்சம் பழம்  -1, தண்ணீர் -அரை லிட்டர்.

செய்முறை:

ச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் கலந்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். நன்றாக ஊறியவுடன் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி உலர விடவும்.

நன்றாக உலர்ந்தவுடன் மாவு மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பிரண்டைகளை பொடியாக நறுக்கி சுட்டெடுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை , பெருங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டு உப்பு கலந்து கிளறவும். அதனுடன் அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறவும்.

சிறிது நேரம் கழித்து இறக்கி எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கிளறவும். வெள்ளைத் துணியை விரித்து சிறிய கரண்டியால் எடுத்து வட்ட வடிவில் ஊற்றி காயவிடவும்.

காய்ந்தவுடன் துணியைத் திருப்பி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து வற்றலை எடுத்து தட்டில் பரப்பி சில நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.

தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். இந்த வற்றலில் பிரண்டை சேர்ப்பதால் தலைவலி, காய்ச்சல், கபத்திற்கு நல்லது.

……………………………..

பலாக்காய் வற்றல் 

தேவையான பொருட்கள் :

சிறிய பலாக்காய் –  1,  தண்ணீர்  – அரை லிட்டர், கல்லுப்பு  – ஒரு கரண்டி மஞ்சள் பொடி – 2 டீஸ்பூன்.

செய்முறை:

லாக்காய் சுளைகளை தனியே எடுத்துக்கொள்ளவும். கொட்டைகளை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் .பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். சுளைகளை கொதிக்கும் நீரில் போட்டு, மஞ்சள்பொடி கல்லுப்பு கலக்கவும் .

பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து விட்டு வெந்த காய்களை எடுத்து துணியை விரித்து அதில் போட்டு சில நாட்கள் காய விடவும் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

……………………………..

தாமரைக் கிழங்கு வற்றல்

தேவையான பொருட்கள்:

தாமரைக்கிழங்கு – கால் கிலோ,  கல்உப்பு  – சிறிதளவு,  மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, வெற்றிலை சுண்ணாம்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

ரு பாத்திரத்தில் தண்ணீரையும் , சுண்ணாம்பையும் கலந்து கொள்ளவும். தாமரைக் கிழங்குகளை வாங்கி சுத்தம் செய்து கழுவி கொள்ளவும். வட்டமாக நறுக்கி சுண்ணாம்பு கலவையில் போட்டு அலசவும்.

அலசிய காய்களை எடுத்து தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வேகும்போது கல் உப்பு, மஞ்சள் பொடி கலந்து விடவும்.

நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு துணியில் பரப்பி உலர விடவும். வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.

தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

……………………………..

காராமணி வற்றல் 

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி  – 100 கிராம்,  உளுந்து  – 100 கிராம்,  மிளகாய் வற்றல் – 4  பெருங்காயம்  – சிறிதளவு, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ரண்டு மணி நேரம் காராமணியுடன், உளுந்து சேர்த்து தண்ணீரில் ஊறவிடவும்.

நன்றாக ஊறியவுடன் தண்ணீரை வடித்து விட்டு பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய் வற்றல், சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையை ஒரு துணியில் சிறிது சிறிதாக கிள்ளி வைக்கவும். உலர்ந்தவுடன் வெயிலில் காயவிடவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடலாம். கூழ் வகைகளுக்கு சரியான காம்பினேஷன் இது.

……………………………..

கோதுமை மாவு வற்றல்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு  – கால் கிலோ, ஜவ்வரிசி – 50 கிராம்,  ஓமம் – ஒரு கரண்டி  பச்சைமிளகாய் – 5,  கல்லுப்பு- 3 கரண்டி,  எலுமிச்சைப்பழம் – அரை மூடி

செய்முறை:

வ்வரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவை கலக்கவும்.

ஓமம், பச்சை மிளகாய், கல்லுப்பு ஆகியவற்றை அரைக்கவும்.  நன்றாக அரைபட்டவுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டி எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

அரைத்த மாவை சிறிது சிறிதாக கலக்கவும். வடிகட்டிய விழுதை கலந்து சிறிது நேரம் கிளறவும். கூழ் போல் வந்தவுடன் எடுத்து சுத்தமான துணியை விரித்து அச்சில் போட்டு பிழிந்து ஒரு நாள் முழுவதும் காயவிடவும்.

மறுநாள் துணியை திருப்பிப் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வற்றலை எடுத்து ஒரு தட்டில் போட்டு திரும்பவும் காயவிடவும். காய்ந்தவுடன் எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்து தேவையான போது பயன்படுத்தவும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com