குளிரூட்டும் கானகத்தின் கொடை – கொடைக்கானல்! 

குளிரூட்டும் கானகத்தின் கொடை – கொடைக்கானல்! 
Published on
வாசகர்களின் சுற்றுலாப் பயண அனுபவம்.
-கலைமதி சிவகுரு,  நாகர்கோயில்.

சிலுசிலுவென பூங்காற்றுடன், எங்களை திக்குமுக்காட வைத்தது கொடைக்கானல் பயணம். மார்ச் 10, 2022 அன்று நாங்கள் வேன் பிடித்து மூன்று நாட்கள் சுற்றுலாப் பயணமாக  கொடைக்கானல் சென்றோம்.

'காடுகளின் பரிசு' தந்த சுற்றுலாத் தலங்கள்

கொடைக்கானல் ஏரி

ந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகு பயணம் செய்ய படகுகள் உள்ளன. ஏரியின் அருகே மிதிவண்டிகள் (அ) குதிரைகளை சுற்றிப் பார்க்க வாடகைக்கு எடுத்தும் செல்லலாம். இங்கு  வீசும் மிதமான காற்று உடலுக்கு சிலிர்ப்பாகவும், ஏரியின் அழகு கண்ணுக்கு விருந்தாகவும் நன்றாகவே இருந்தது.

பிரையண்ட் பூங்கா 

1908  ஆம் ஆண்டு இந்த பூங்காவை உருவாக்கியவர் எச்.டி.பிரையண்ட்  என்பவர். இங்கு சுமார் 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன. 150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இருப்பது இந்த பூங்காவின் சிறப்பு ஆகும்.

டால்பின் மூக்கு

பாம்பர்  பாலத்தின் அருகே இருந்து பார்த்தால் பெரிய பாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழ் 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் 'லிரில் சோப்' விளம்பரம் எடுக்கப்பட்டதால் இதை 'லிரில் அருவி' என்றும் அழைக்கின்றனர். இங்கு தான் ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டோம். இங்கு விளையாட்டுகளும் நிறைய இருந்தன.

தலையார் நீர்வீழ்ச்சி 

இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இதனை எலிவால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர்.

குணா குகைகள்

மல் ஹாசன் நடித்த 'குணா' படத்தில் இந்த குகை இடம் பெற்றதால் இதனை 'குணா குகை' என்கின்றனர். அதற்கு முன்னர் 'பிசாசின் சமையலறை' என்று அழைக்கப்பட்டதாம். இங்கு இரண்டு குரங்குகள் என் மருமகளின் அக்கா மேல் தொங்கிக் கொண்டது. மிகவும் கூச்சலிட்டு அதன் பிடியில் இருந்து தப்பித்தோம். இது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும்.

பைன் காடுகள்

கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் 1906 ஆம் ஆண்டு பிரையண்ட் என்பவர் மலைப்பகுதிகளில் 'pine'  எனப்படும் ஊசியிலை மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். இந்த பகுதி மிகவும் ஆனந்தமாக இருந்தது.

மேலும், இங்குள்ள கோக்கர்ஸ் வாக், பியர் சோழா அருவி இவற்றையும் கண்டு களித்தோம். மேல்மலை மன்னவனூர் கிராமபகுதி 'புல்வெளி ஏரியில்' பரிசல் சவாரி சென்றோம். அங்குள்ள விவசாய  நிலங்களை பார்த்து மிகவும் ரசித்தோம். காரட், பீட்ரூட், பூண்டு ஆகியவை இங்குள்ள ஸ்பெஷல் என்பதால் வாங்கிக் கொண்டோம். நாங்கள்  சென்ற நேரத்தில் பகலில் வெயில் இருந்ததால் குளிர் தெரியவில்லை. இருந்தாலும் இரவில் குளிர் நன்றாக இருந்தது. மலை இறங்கி வரும்போது இயற்கையை ரசித்துக் கொண்டே வந்தோம்.

………………………….

– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,  லால்குடி

டந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நானும் என் குடும்பத்தாரும் காரில் சுற்றுலா சென்றோம். கானகத்தின் கொடை அல்லது காடுகளின் பரிசு என்பது கொடைக்கானல் என்பதின் தமிழ் அர்த்தம் ஆகும்!

கொடைக்கானலுக்கு 7 கி.மீ. முன்பே வெள்ளி நீர்வீழ்ச்சி நம்மை முதலில் அன்புடன் வரவேற்கிறது. அப்போது நீர் ஆர்ப்பரித்து கொட்ட வில்லையென்றாலும் வருகின்ற நீரைப் பார்க்கும்  போதே  அழகோ அழகு. கொடைக்கானலில் கொரோனா டயம் என்பதால் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை செண்பகனூர் அருங்காட்சியகம் போன்ற சில இடங்களை பார்க்க அனுமதியில்லை. இருந்தபோதும் மனம் தளராமல் அனுமதியுள்ள சில இடங்களை மட்டும் பார்க்கப் புறப்பட்டோம்.

குறிஞ்சி ஆண்டவர் கோவில்

முதலாவதாக 4 கி.மீ. தூரத்தில்லுள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவிலை தரிசிக்கச் சென்றோம். புதுமை மாறாத மிக அழகான, படு சுத்தமான கோவில்! 1936 ஆம் ஆண்டில் லீலாவதி என்ற ஐரோப்பிய அம்மையாரால் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் குறிஞ்சி மலர்கள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. சாமியை வெளியே நின்றுதான் கும்பிட முடிந்தது. குறிஞ்சி ஆண்டவரை வேண்டினால் நினைத்தக் காரியம் நடக்கும் என்கிறார்கள். அங்கிருந்தபடியே கிழக்கு திசையில் பார்த்தால் பழனி முருகன் கோவில் தெரிகிறது, பார்க்க அற்புதமாக இருக்கிறது.

பூம்பாறை 

ரண்டாம் நாள் காலை கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள பூம்பாறை என்ற சுற்றுலாத் தலத்திற்குச் சென்றோம். போகும் வழியில் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம்  வரை பசுமை மாறா மலைக்காடுகள். இயற்கை தன் அழகையெல்லாம் வாரி வழங்கியிருக்கிறது. பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சி. பூம்பாறையிலுள்ள குழந்தை வேலப்பர் கோவிலைப் பார்க்க வெளியூரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தனர். பல குடும்பங்களுக்கு அது குல தெய்வமாம்.

அங்கே விற்கப்படும் மலைப்பூண்டு மிகவும் பேமஸ்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நாங்கள் 2 கிலோ பூண்டு வாங்கினோம். கிலோ ரூபாய் 200-லிருந்து 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பேரம் பேச முடியாது.

பள்ளங்கி 

நாங்கள் கண்டு ரசித்த அடுத்த இடம் பள்ளங்கி. கொடைக்கானலிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரம்தான். போகும் வழியெல்லாம் நெடு நெடுவென உயர்ந்த மரங்கள் இருந்தன. 'மூன்றாம் பிறை' படத்தில் கமலஹாசன் பேசும் வசனம்போல் வானத்தை துடைக்கும் ஒட்டடை குச்சிகளாக மரங்கள் காட்சியளிக்கின்றன. அங்கேயிருந்து கீழேப் பார்த்தால் தலை சுற்ற வைக்கும் படுபயங்கரமான பள்ளத்தாக்குகளும் உள்ளன. சினிமா ஷூட்டிங் எடுப்பதற்கு சரியான லொகேஷன்!

காலை வேளை என்பதால் சில்லென குளிர்ந்த காற்று நம்மேனியைத் தழுவிச்  சென்றது. அந்த பரவச உணர்வை நேரில் உணர்ந்தவர் களுக்குத்தான் தெரியும். பள்ளங்கி போன்ற அருமையான, அழகான சுற்றுலாத் தலத்தை சாதாரண நாட்களில், கொரோனா கட்டுப்பாடு இல்லாத நேரத்தில் காணச் செல்பவர்கள் எண்ணிக்கை குறைவுதான்! எங்களுக்கு கொடைக்கானலில் சில இடங்களை மட்டுமே பார்க்க முடியாத காரணத்தால், இங்கே செல்லும் நிலை ஏற்பட்டது. அதுவே  அரியதொரு நல்வாய்ப்பாகவும் அமைந்தது. அதோடு எங்களை மிகவும் கவர்ந்த இடமாகவும்  பள்ளங்கி அமைந்துவிட்டது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com