வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

Published on
விநாயகரின்  மனதை குளிர வைக்கும் அபிஷேகங்கள்! 

-மரகதம் சிம்மன், சென்னை

ரசமரத்தடியில் கிழக்கு திசை நோக்கி இருக்கும் விநாயகரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில்  அபிஷேகம் செய்து, பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால்  மனதுக்கு விரும்பியபடி திருமணம் நடைபெறும்.

புன்னை  மரத்தடி விநாயகரை ஆயில்ய நட்சத்திரத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால்  தம்பதியர் ஒற்றுமை  ஓங்கும்.

மகிழமரத்தடி விநாயகருக்கு அனுஷம் நட்சத்திரத்தன்று மாதுளம்பழம் அபிஷேகம் செய்தால் பில்லி , சூனியம் , தீயவினைகள் திருஷ்டி அகன்றுவிடும்.

ஆலமரத்தடியில் வடக்குநோக்கி இருக்கும் விநாயகருக்கு மகம் நட்சத்திரத்தன்று  அபிஷேகம் செய்து வழிபட்டால் நோய்கள் நீங்கும்.

மாமரத்தடி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால்  எதிரிகள் தொல்லை நீங்கும்.

வன்னி மரத்தடியில் உள்ள பிள்ளையாருக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று நெல்பொரி அபிஷேகம் செய்தால்  தடைபடும் திருமணங்கள் கைகூடும் . பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.

பொதுவாக உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மிக நல்லது .

பரணி, ரோகிணி, புனர்பூசம், ஹஸ்தம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்தன அபிஷேகமும் , ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் அபிஷேகம்  செய்வது நல்லது . மகம், உத்திரம், ஸ்வாதி, விசாகம், கேட்டை , பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்தால்  நல்லது நடக்கும் .

அபிஷேகத்தினால் இறைவன் குளிர்ந்து ஆசீர்வதிப்பான் என்பது புராணங்களின் கருத்து.

………………………………………..

விளக்கேற்றும் திரிகளின் வகைகளும் அவற்றின் பயன்களும்! 

பஞ்சுத்திரி:  பொதுவாகவே தூய்மையான பஞ்சில் திரியிடுவது மிகவும் நல்லது .

தாமரைத்தண்டு திரி :  இதனை திரித்து விளக்கேற்றினால் நமது முன் வினைப் பாவத்தைப் போக்கும். நமது வீட்டில் செல்வம் நிறைந்து நிற்கும்.

வாழைத்தண்டு திரி: இதனை நூற்பாகமாக பக்குவப்படுத்தி விளக்கேற்றினால்  குழந்தை செல்வம்  உண்டாகும்.  தெரியாமல் செய்த தெய்வ குற்றம் ,பிறரை ஏமாற்றிய குடும்ப சாபம் நீங்கி குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

வெள்ளை எருக்கன் திரி: இதன் பட்டையை திரியாகச்செய்து விளக்கு ஏற்றினால் பெருத்த செல்வம் தரும். பேய்,பிசாசுகள் பிடித்ததால் உண்டாகும் அச்சமும் , தொல்லையும் தீரும்.

புது மஞ்சள் சேலை துணி: இதிலிருந்து திரி செய்து  விளக்கு ஏற்றினால், அம்மன் அருள் கிட்டி தீராத வினைகள் தீரும். காத்து ,கருப்பு தீண்டாது.

சிவப்பு கரை சேலை துணி:    இதிலிருந்து திரி செய்து விளக்கேற்றினால் , திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை, செய்வினை தோஷங்கள் விலகிடும்.

மேற்கண்ட திரிகளும் பலன்களும் சாஸ்திரத்தில் பல்லாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளதால் இதனை பரிகாரமாக ஏற்றுக்கொண்டு அந்தந்த திரிகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.

தீபம் ஏற்றும் நேரம்: அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்றுவது வீட்டில் சர்வ மங்கள யோகத்தையும் உண்டாக்கும். அந்தி சாயும் மாலை வேளையில் தீபம் ஏற்றி மஹாலக்ஷ்மியை வழிபட உத்தியோக பிராப்தம், நல்ல கணவன் அமைதல், குடும்ப சுகம், புத்திர சுகம் கிட்டும் .

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com