
-மஞ்சுளா சுவாமிநாதன்
நம் நாட்டில், பொது மக்களுக்கு, குறிப்பா பெண்களுக்கு, இருக்கக்கூடிய பெரும் பிரச்சனையே பொது இடங்கள்ல சுத்தமான கழிப்பறை இல்லாதது தான். இதனை கண்டும் காணாமலும், மூக்கையும், வாயையும் மூடிக்கிட்டு, நாமும் பல தலைமுறைகள் சகித்துக் கொண்டு விட்டோம். ஆனால், இனி அது தேவையில்லை.
ஆம், அதற்குத் தீர்வாக, 'Toilet Mapathon,' எனும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி அரங்கேற்றியுள்ளது . இதில் சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலைமையை தன்னார்வலர்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரைக்கும் கணக்கிட்டு Kakkoos எனப்படும் அண்ட்ராய்டு செயலியில் பதிவிட்டுள்ளனர். நாம் இந்த செயலியின் மூலம் நமது ஏரியாவில் பொதுக் கழிப்பறை எங்கு உள்ளது என்று அறிந்து அதைப் பயன்படுத்த முடியும். மற்றும் அதன் நிலைமையை ரேட் செய்யவும் இயலும். இதன் மூலம் மாநகராட்சிக்கு நம்முடைய திருப்தி (அ) அதிருப்தியை உடனே பதிவு செய்ய இயலும்.
இந்த செயலை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த Recycle Bin எனும் நிறுவனம், கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்தப் பணி ஒரு மாபெரும் இயக்கமாக மாறி, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியுடனும் இணைந்துள்ளது.
சென்னையில், சர்வதேச கழிப்பறை திருவிழா 2022 ல் 'வளங்குன்றா துப்புரவு சேவைகள், நீர் சுகாதாரம், மாதவிடாய் மற்றும் தொடர்புடைய துறை' சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் கண்டுபிடிப்புகளின் கண்காட்சியும், கலந்துரையாடலும் சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இங்கே உலகளவில் பொது கழிப்பறைகளை சிறந்த முறையில் வைத்திருக்க எடுக்கப்படும் முயற்சிகளும், உபயோகப்படும் கருவிகளும், கையாளப்படும் யுக்திகளும் பன்னாட்டிலிருந்து வரும் வல்லுனர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, சென்னையில் பொது கழிவறைகளை சுத்தமாக வைக்க ஒரு திட்டம் வகுக்கப்படும் என கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வரின் மருமகள் கிருத்திகா உதயநிதி அதிக ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு www.toilettales.in என்ற இணையதளத்தை அணுகவும்.
பொது கழிப்பறை மேம்பாடு பற்றி பொதுவாக எழும் ஐயங்கள்
இதுபோல பல கேள்விகள் நம் மனதில் எழத்தான் செய்கின்றன. எப்படி குப்பையை பிரித்துப் போட, எந்த ஒரு விழிப்புணர்வோ, முன் அறிவிப்புமோ இன்றி மாநகராட்சி Urbaser Sumeet நிறுவனத்திற்கு
out source செய்ததோ, அதுபோல இந்த 'Toilet Mapathon' நிகழ்வு நீர்த்துப் போகாமல், நம் மக்களின் வாழ்வியலுக்கு ஒத்துப் போகிற ஒரு நல்ல திட்டத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.