ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள்: பிரபுராம்

டாக்டர்: "உங்க வீட்டுக்காரருக்கு வந்திருக்கிறது தக்காளி காய்ச்சல் மேடம்!"

மனைவி: …!!!!!!

********************************

"இந்த சென்டர்ல ஏது இவ்வளவு ஆண்கள் கூட்டம்?"

"பூரிக்கட்டையால மனைவி ஓங்கினா எப்படி தடுக்கிறதுன்னு சொல்லிக் கொடுக்கறாங்களாம்!

********************************

"நயன்தாரா இங்க வாம்மா… ஐயாவுக்கு ஒரு சீட்டு எடு!"

"ஜோசியரே கிளிக்கு லேட்டஸ்ட் நடிகை பெயர் வைக்கலையா?"

"இந்தப் பெயர் வைச்ச பிறகுதான் நிறைய சம்பாதிக்குது சார்."
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி

********************************

"இந்த பூசாரி என்ன பேய் பிடிச்சிருக்குன்னு கண்டுபிடிக்கிறதில கில்லாடியா… எப்படி?"

"நகை பேயா, புடைவை பேயா, பணப் பேயான்னு டக்குனு கண்டுபிடிச்சு விரட்டிடுவாரு."

********************************

"வாழ்க்கையில முன்னேற குறிக்கோள் வேணும் பசங்களா?"

"சார் அது எத்தனையாவது கோள்!"

********************************

"அமைச்சரே பழைய முறையில புறாகிட்ட ஓலை கொடுக்க வேண்டாம்…"

"ஏன் மன்னா?"

"லேட்டஸ்டா ட்ரோன் மூலமா ஓலை கொடுத்தா போதும்!"
-ஆர்.எம். ஸ்ரீ அக் ஷயராம், திருநெல்வேலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com