கதைக்காகத்தான் ஆர்ட்டிஸ்ட்!

கதைக்காகத்தான் ஆர்ட்டிஸ்ட்!
Published on
இயக்குனர் பல்லவி கங்கி ரெட்டி நேர்காணல்:
-ராகவ்குமார்

மிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் வந்து கொண்டிருப்பதைப் போல தற்போது OTT தளங்களிலும் படம் இயக்கப் பெண்கள் வந்து கொண்டிருக் கிறார்கள். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக இருந்த பல்லவி கங்கி ரெட்டி, 'ஆர்கா மீடியா'வுக்காக, 'ஆன்யா'ஸ் டுட்டோரியல்' என்ற வெப் தொடரை ஆஹா தளத்திற்கு இயக்கி வருகிறார். பார்ப்பதற்கு கல்லூரி மாணவி போல இருக்கும் பல்லவியிடம் சில 'சுருக்' கேள்விகளும் அதற்கு அவர் தந்த 'நறுக்' பதில்களும்:

சென்னை வந்த கதை:

னது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள எரகுண்டா. என்னுடைய குடும்பம் எனது பன்னிரண்டாவது வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டது. அதன் பிறகு வந்தாரை வாழவைக்கும் சென்னைதான் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

படித்ததும் பிடித்ததும்:

RMK இன்ஜினியரிங் காலேஜில் படித்த பிறகு சினிமாவில் டைரக்டர் ஆக விரும்பினேன். அதற்காக மும்பையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அதற்கு எனது வீட்டில் தடை ஏதும் சொல்லவில்லை.

இயக்குனர் முருகதாஸை குருவாகத் தேர்ந்தெடுத்தது:

திரைப்படக் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் சாரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவரது இயக்கத்தில் ஒரு படம் தயாராகி வெளியானால், மறுநாள் படத்துக்கான ரிசல்ட் வந்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் டிஸ்கஷனில் உட்கார்ந்து விடுவார். இதுபோன்று, அடுத்தடுத்து தனது வேலைகளை நகர்த்திச் செல்லும் குணம் ஆவருடன் வேலை செய்பவர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.

'ஆன்யா'ஸ் டுடோரியல்' பற்றி…:

து லாக் டவுன் நேரத்தில் நடக்கும் ஒரு கதை. சைபர் ஹாரர் வகையைச் சேர்ந்தது. OTT தள வெப் தொடர்களுக்கு இந்த வகை நன்றாக இருக்கும்.

'செளமியா' குறித்து…:

செளமியா அனிமேஷன் துறையில் ஸ்கிரிப்ட் எழுத்தாளராகப் பணியாற்றி உள்ளார். எங்கள் இரண்டு பேரின் விஷனும் ஒன்றாக இருப்பதால் படம் இயக்குவது மிகவும் எளிதாக இருந்தது. இதுபோன்ற வெப் தொடர்களுக்கு திரைக்கதை எழுதுவது என்பது மிகவும் கடினமான பணி. இதில் ஐம்பது சதவீதம் நானும் மீதம் ஐம்பது சதவீதம் சௌமியாவும் திரைக்கதை அமைத்திருக்கிறோம்.

ரெஜினா கசண்ட்ரா தேர்வு எப்படி?:

ந்தக் கதையை எழுதி முடித்தவுடன் மது என்ற கதாபாத்திரத்திற்கு ரெஜினாதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து, அவரை அணுகினேன். இதுபோன்ற ஒரு கதைக்காகத்தான் தான் காத்திருந்ததாகச் சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார் ரெஜினா. வெப் தொடர்களைப் பொறுத்தவரை கதைக்காகத்தான் ஆர்ட்டிஸ்ட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

நிவேதிதா உள்ளே வந்தது…:

'ஆன்யா' எனும் கதை தலைப்புக்கு நிவேதிதா இயல்பாகப் பொருந்திப் போய்விட்டார். இவர் நடித்த, 'சில்லு கருப்பட்டி' உட்பட சில படங்களைப் பார்த்து இருக்கிறேன். வளர்ந்து வரும் இளம் நடிகை. இந்த வெப் தொடரைப் பார்த்தால் இவரை நான் இந்தக் கேரக்டருக்கு செலக்ட் செய்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பெண்கள் சாதனை கூட்டணி பற்றி…:

நான் உட்பட, நான்கு பெண்கள் இந்தத் தொடரை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றி இருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஒன்றாகச் சேர்ந்தால் ஈகோ பிரச்னை வரும் என்பது எல்லாம் பழங்கதை. இப்போது பெண்கள் ஒன்று சேர்ந்து பல சாதனைகளைச் செய்கிறார்கள். இந்த வெப் தொடரில் எங்களோடு கேமரா மேன், எடிட்டர் என பல ஆண்களும் இணைந்து பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவைற்ற கேள்வி என்றால்…:

'ஒரு பெண்ணால் டைரக்‌ஷன் துறையில் சாதிக்க முடியுமா? திருமணத்திற்குப் பின்பும் படத்தை இயக்க முடியுமா?' என்று பலரும் கேட்கிறார்கள். 2022ல் இந்த கேள்வியே தேவையற்றது என்றுதான் நான் கூறுவேன்' என 'நறுக்' கென முடிக்கிறார் பல்லவி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com