வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.தொகுப்பு:- ஆர். செல்லமீனாள், மகாராஷ்டிரா.பல்லாங்குழி விளையாட்டு நமது பாரம்பரிய பண்பாட்டிற்கு அடையாளமாக விளங்கும் உள் அரங்க விளையாட்டாகும்..பக்கத்திற்கு ஏழு வீதம் இரு எதிர் எதிர்பக்கங்களில் 14 குழிகளைக் கொண்ட பெண்கள் விளையாடும் விளையாட்டாகும்..உலகின் மற்ற நாடுகளிலும் பரவியிருந்தது என்பதற்கு ஆங்காங்கே குகைகளிலும் மலைப்பாங்கான இடங்களிலும் 14 குழிகள் கொண்ட பல்லாங்குழி அமைப்புக்கள் சான்றாக உள்ளன..பல்லாங்குழி விளையாட்டைப் பாண்டி ஆட்டம் என்றும் சொல்வதுண்டு. பொதுவாக பெண்கள் விளையாட்டு என்ற போதிலும் குறிப்பாக பூப்பெய்திய நங்கையர் 16 நாட்களுக்கும், கருவுற்ற பெண்களும் அவசியம் விளையாட வேண்டும் எனச் சொல்வதுண்டு. திருநெல்வேலிப் பக்கம் திருமண தினத்தன்று மணப்பெண், மணமகனுக்கு பல்லாங்குழி ஆடிக் காட்ட வேண்டும் என்ற மரபும் இருந்ததாம்..சமூக வாழ்வோடு இல்லற வாழ்வையும் இணைத்துக் கற்றுத் தரும் ஒரு விளையாட்டு பல்லாங்குழி. இது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தரம் விளையாட்டு..இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு, குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம் கடைப்பிடித்தல், பொருள் ஈட்டல், நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் திறன், நிதிநிலைமையைச் சமாளிக்கும் சாமர்த்தியம், உடைமைகளைப் பங்கீடு செய்யும் ஆற்றல் போன்ற பல்வேறு அனுபவப் பாடங்களை எளிமையான முறையில் கற்றுத் தரும் விளையாட்டு..மேலும், இழப்பு தற்காலிகமானது. தொடர்ந்து மனந்தளராமல் முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். தோல்வி ஏற்பட்டால் வருந்தக் கூடாது என்பதை 'வெறுங்குழி' நிலை உணர்த்துவதையும், நான்கு சோழி பெருகி பசு எடுக்கும் நிலை கிட்டினால் கையில் கிடைப்பதைக் கொண்டு சிறுகச் சிறுகச் சேர்த்து பொருளாதார வசதியை மேம்படுத்தி குடும்பத்தாரை வளம் பெறச் செய்யலாம் என்பதையும் தெளிவுபடுத்திக் காட்டும் விளையாட்டு..ஒரு குழிக்குக் கூட காய் இல்லாத 'கஞ்சி காய்ச்சுதல்' என்ற நிலை வந்தாலும் கவலைப்படாமல் ஆட்டத்தைத் தொடர்வதன் மூலம் செல்வம் என்பது நிரந்தரமானதல்ல. எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் சென்றுவிடும் என்ற இயற்கை விதியையும் எடுத்துக் கூறும் விளையாட்டாகும்..குழிகளில் போட்டு விளையாடுவதற்கு கடலில் கிடைக்கும் சோழிகள், புளியங்கொட்டை ஆகியவற்றை உபயோகப்படுத்துவது உண்டு. இவைகளினால் விளையும் மருத்துவக் குணங்களையும் பலன்களையும் கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் இவற்றை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது கண்கூடு..சோழிகளை ஐவிரல்களைக் குவித்துக் குழிகளிலிருந்து சிந்தாமல் சிதறாமல் ஒரு மொத்தமாக அள்ளி எடுத்து விரல் இடுக்கில் கொண்டு சென்று குழிக்கு ஒன்றாக போடுவதால் ஏற்படும் அசைவுகள் கைவிரல்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது. மூட்டு சம்பந்தமான குறைபாடு வராமல் தவிர்க்கிறது..மேலும், மனதால் கணித அறிவை மேம்படுத்துதல், எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை என்னவாக இருக்கும், அந்த நிலையை எப்படி சமாளிக்கலாம் எனச் சிந்தித்தல், எதிராளி விளையாடுவதை உன்னிப்பாக கவனித்தல், சிந்தனையைச் சிதற விடாமல் மனதை ஒரு நிலைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அனைத்தையும் ஒரு சேரக் கற்றுத்தரும் பெருமை மிகு விளையாட்டு ஆகும் பல்லாங்குழி என்னும் நம் பண்டைய விளையாட்டு..தொல்பொருள் ஆராய்ச்சிகளால் 8000 ஆண்டுகள் பழைமையான தமிழர் விளையாட்டு இது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணிற்கு தாய்வீட்டு சீர்வரிசையில் தவறாமல் இடம் பெறுவது பல்லாங்குழிப் பலகை ஆகும். அவரவர் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப உயர்ந்த மரம், சாதா மரம், பித்தளை எனப் பல்வேறு மரங்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட பல்லாங்குழி பலகைகளை சீர்வரிசையில் காணலாம்.