
– மாதவி எஸ்.சுப்ரமணியன், திருச்சி
ஓவியம் : சேகர்
துளி சந்தோஷம்
மகன் படிப்புக்காய் வாங்கிய
தலைக்குமேல் கடன்
பாக்கெட்டுக்கு மேல் வட்டி
ஒரு வேளை சாப்பாடு
உயிர் மட்டும் ஓட
மகன் அயல்நாட்டு
வேலைக்காய் விமானமேற…
வீடு வந்தால்
கட்ட முடியாத கடனுக்கு
அலைபேசி, இஸ்திரிப்பெட்டி,
இரு சக்கர வாகனம் முதல்
தொலைக்காட்சி பெட்டி வரை
தூக்கிச்செல்ல… நல்லவேளை
மகன் பார்க்கலை… பார்த்திருந்தால்
மானம் கப்பலேறியிருக்கும்!
கழுகுகள்
பாட்டி இறந்து கிடந்தாள்…
தோப்புக்காய் சண்டையிட்ட சித்தப்பா
திவசப் பாத்திரத்துக்காய் திட்டிய அக்கா
வீட்டு உயிலில் இடம்பெறாததால்
போர்க்கோலமிட்ட மருமகள்
தங்கச் செயினுக்காய் ஆத்திரமிட்ட பேத்தி
கிழவியின் முகத்தில் முழிக்க மாட்டேனென
முழக்கமிட்ட அண்ணன்
எதை நினைத்து ஓவென அழுதனர்?
கிழவியின் முகத்தில் மயான அமைதி!
வளர்ப்புப் பூனை பாட்டியை மொய்த்த
ஈயுடன் சண்டையிட,
காது தொங்கட்டானை கழட்டுங்க
பிணத்தோட போயிடும்
அப்பாவி்ன் ஆர்டர்!