
உன்
இதழோ புன்னகையை
என் உள்மனம் உள்வாங்கியதால்…
மூச்சுக்காற்று சுவாசத்தில்
இடையூராகி ஒருகணம்.
நெஞ்சினில் இடி இடித்து
மின்னல் போல்
விருட்டென்று அழுத்தியதால்
மாரடைத்துப் போயின.
ஆனால்,
பிழைத்துக் கொண்டேன்
ஏனெனில்,
உனது இதயம்
என்னிடத்தில் அல்லவா
சங்கமித்து உள்ளது.
உன்
கண்களின் ஔிக்கீற்று
என்னை "சுளீர்'' என்று
மின்சாரம் போல் தாக்கியதால்
ஒருகணம், கண்ணிரண்டும் குருடாகி
விட்டதோ வென்று
ஸ்தம்பித்து விட்டேன்.
ஆனால்,
கண்ணுக்குள் ஔிந்திருக்கும்
பாவைகள் ஔிர்ந்தன
ஏனெனில்,
உன் கண்மணிகள்
என்றைக்கோ
என் பார்வை திரையில்
பதிவாகி விட்டன.
இப்போது சொல்லன்பே
உன் பார்வையால்
என்னிதழ்கள் புன்னகையை
என்னையும் அறியாமல்
உதிர்க்கின்றன.