
" படத்துல ஏன் வில்லன் கோஷ்டியை ஹீரோ ஒரு டெம்போவுல
துரத்திட்டுப் போய் சண்டை போடறாரு?"
"படத்துல 'டெம்போ' இல்லைனு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க!"
-வி. ரேவதி, தஞ்சை
…………………………………………
"எதிர் வீட்டு பாட்டி அடிச்சதுல அந்த தாத்தாவோட
32- பல்லும் கொட்டிப் போச்சா! எப்படிங்க?"
"தாத்தா பல் செட் தானே கட்டிருந்தாரு"
-வி. ரேவதி, தஞ்சை
…………………………………………
"குறிப்பிட்ட வயசுக்கு மேல ஹோட்டல்ல சாப்பிடறதை
அறவே நிறுத்திடறதுதான் நல்லது."
"செரிமானம் ஆகாதுன்னா?"
"இல்ல… வயசாயிட்டதால, மாவாட்றது கஷ்டமா இருக்கு!"
-வி. ரேவதி, தஞ்சை
…………………………………………
"எதிர் வீட்டுப் பொண்ணு ஒரு ஐஸ் கம்பெனி அதிபரோட மகனை உருகி, உருகி காதலிச்சா… அவன், அல்வா கொடுத்துட்டு வேற ஒருத்தியை கட்டிக்கிட்டு போயிட்டான்!"
"அடடா… அப்புறம்?"
"இப்ப, உறைஞ்சு போய் உட்கார்ந்திருக்கா….!"
-வி. ரேவதி, தஞ்சை
…………………………………………
"ரொம்ப நேரமா கதவை தட்டியும் ஏன் சார் திறக்கலை?"
"கடன்காரப் பசங்கதான் வந்துட்டாங்கன்னு நினைச்சுட்டேன் சார்!
-வி. ரேவதி, தஞ்சை
…………………………………………
…………………………………………
"போருக்கு எதற்கு சானிடைஸர் மன்னா?"
"எதிரி, சுகாதாரப் பிரியன்… கைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டால்தான், அவன், கால்களைத் தொடவே அனுமதிப்பான் அமைச்சரே!"
-வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
…………………………………………
…………………………………………
"நாம மெகா சீரியலை ரொம்ப இழுத்துட்டோமோ?"
"ஏன் சார்?"
"இல்லே, ஹுரோயின் தனக்கு அறுபதாம் கல்யாணம்னு சொல்லி இன்விடேஷன் குடுத்துட்டுப் போறாங்களே!"
–எஸ். ஸ்ருதி, சென்னை
…………………………………………
"என்னங்க! உங்க உடம்பெல்லாம் காயம்?"
"ஒருத்தர் ஜோக் ஒண்ணு சொன்னாரு. அதைக் கேட்டிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்."
–ஜி. பாபு, திருச்சி
……………………………………
எதற்கு நம்ம பையனை இப்படி போட்டு அடிக்கிறீங்களே… ஏன்?"
"கடிதத்தை அவனிடம் கொடுத்து தபால்பெட்டியில் போட்டுட்டு வாடான்னு சொன்னா, 'தபால் பெட்டி பூட்டி இருக்குது'ன்னு கடிதத்தை போடாமல் திரும்பி வந்திட்டான்."
-ஜி. பாபு, திருச்சி