
"அம்மா பேய், தான் குடியிருந்த பாழடைந்த வீட்டை, மகள் பேய்க்கு எழுதிக் கொடுத்து விட்டதாம்!"
"அப்ப அது, 'பேய் வீட்டுச் சீதனம்'னு சொல்லு!"
– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
…………………………………………………………………..
"உங்க கண் நல்லாத்தான் இருக்கு! எந்தவித குறைபாடும் இல்லையே!"
"டாக்டர்! டி.வி.யில மெகா சீரியல் பார்க்கும்போது ஒரு சொட்டு கண்ணீர்
கூட வர மாட்டேங்குதே!"
– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி
…………………………………………………………………..
"தலைவர் வலியப்போய் சி.பி.ஐ. வலையில் சிக்கிவிட்டாரா?"
"ஆமா! பெருமைக்காக, 'ஊழல் செய்வது எப்படி?'ன்னு புத்தகம்
போட்டு மாட்டிக் கொண்டார்!"
– ஏ.ஆர்.லெட்சுமி, தென்காசி
…………………………………………………………………..
"பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டது தப்பாப் போச்சு!"
"ஏன்?"
"பக்கத்துக்குப் பக்கம் பில் போடுவேன்னு சொல்றாங்க!"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..
"டிராபிக் போலீஸை கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு!"
"ஏண்டி?"
"எதைக் கொடுத்தாலும் மறைத்து கொடுக்கச் சொல்லுறார்…"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..
"மசாலா டீ கேட்டது தப்பாப் போச்சு!"
"ஏன்?"
"மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டுக் கொடுத்துட்டாங்க!"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..
"சென்னை பக்கம் திருட போனது ரொம்ப தப்பாப் போச்சு!"
"ஏன்?"
"வெள்ளத்துக்குள்ளே ஓடி வர முடியல!"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..
"டாக்டர் ரொம்ப தெளிவுதான்…"
"எப்படி?"
"பாக்கெட்டையும் சேர்த்து ஸ்கேன் பண்ண சொல்லுறாரு…
பணம் எவ்வளவு இருக்குன்னு!"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………………………………………..
"தடுப்பூசி எப்போது கடுப்பூசியாக மாறுகிறது?"
"ஒரு நர்ஸ், அவளுக்குப் பிடிக்காத மாமியாருக்கு போடும்போது!"
– கிரிஜா மணாளன், திருச்சி
…………………………………………………………………..
"கடவுளே எனக்கு ரொம்பப் பணக்கஷ்டம்…"
"பிறகு ஏன் ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் எடுத்து வந்தாய்?"
– எஸ்.மோகன், கோவில்பட்டி