சொல்ல விரும்புகிறோம்!

சொல்ல விரும்புகிறோம்!
Published on

Excellent work. Appreciate your simple and clear language and presentation which a commoner can relate to and enjoy. Thanks for the wonderful work.
– Bhuvaneshwari Subramaniam

ராஜா, மந்திரி, வியாபாரி என்ற மூன்று கதாபாத்திரங்கள் மூலம் கதை சொல்லி, 'மனம்' நல்லன நினைத்தால் நன்மையான செயல்கள் அரங்கேறும்; அதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான பாஸிட்டிவ் அணுகுமுறையைப் பெற்றுத் தரும் என சூப்பராக, 'ஒரு வார்த்தை' தலையங்கத்தில் புத்தாண்டின் தலைநாளான முதல் நாளில் அரங்கேற்றிய அம்மா அனுஷாவை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை!
– து.சேரன், ஆலங்குளம்

ருமை… எண்ணங்களை மேம்படுத்தினால் வாழ்வும் மேம்படும்!
– மாடக்கண்ணு

ஸ்ரீ ஆஞ்சனேயர் சுவாமிகளைப் பற்றி மிக அருமையான தொகுப்பு!
– ஜி.ஸ்வேதாரண்யம்

wealth of information on anjaneyar and his temples.
– R.Jeyalakshmi

பிரதமரிடம் கேட்க விரும்பும் பா(ப)ஞ்சு கேள்விகள் பஹுத் அச்சா ஹை!
– மாடகண்ணு

நிறைந்த மனதுடன்… அருமையான கட்டுரை மேடம். புது வருடம் உங்களின் இந்தப் பொருள் பொதிந்த கட்டுரையுடன் இனிதே துவங்கி விட்டது.
– மஞ்சுளா சுவாமிநாதன்

னது புத்தாண்டு கவிதையை மங்கையர் மலரில் வெளியிட்டமைக்கு மனமுவந்து பல கோடி நன்றி.
– து.சேரன், ஆலங்குளம்

ஜோக்ஸ் அனைத்தும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தன. புத்தாண்டு தினத்தன்று முத்து முத்தான ஜோக்குகளின் அணிவகுப்பு, ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.
– ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்

சிரிப்புகள் மகிழ்ச்சியில் திணற வைத்து விட்டது. அனைத்தும் அட்டகாசம்.
நல்லது நடைபெற நல்லதை நினைப்போம். படமும் ஓவியமும் அருமை!
– து.சேரன், ஆலங்குளம்

'தொழிலுக்கு இல்லை தோல்வி' – புவனா அவர்களின் நேர்காணலைப் படித்தவுடன் புத்தாண்டில் ஒரு புதிய உற்சாக மலர் மனதில் மலர்ந்து மணம் வீசியது.
– பிரகதா நவநீதன், மதுரை

ன்பு வட்டத்தின் பதில்களை நான் மிகவும் ரசித்துப் படிக்கும் வாசகன். 'கேள்வி கேட்க விரும்பும் நபர் யார்?' என்ற கேள்விக்கு அனுஷா அவர்களின் பதில் மிகவும் அருமை. உண்மைதான் எல்லோருக்குமே மோடிஜி இடம் சில கேள்விகள் கேட்கத் தோன்றும்!
– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

ரண்டு சக்கர வாகனம் ஓட்டும் எனக்கு, தினம் தினம் பெட்ரோல் விலையை பார்க்கும்போது பகீரென்று இருக்கும். அப்போது இந்த மின் வாகனங்களைப் பற்றி கேள்விப்பட்டு, 'வாங்கலாமா?' என்ற ஒரு குழப்பமாகவே இருந்தது. 'இனி மின் வாகனங்கள்தான்' என்ற மங்கையர் மலர் பக்கங்களைப் படித்தவுடன் நிச்சயம் வாங்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. என்போன்று குழம்பும் பல வாசகிகளுக்கு அருமையான, தெளிவான பதிலைச் சொல்லி மின்சார ஸ்கூட்டர்களை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று அறிவுரை சொன்ன, 'மங்கையர் மலருக்கு' பாராட்டுக்கள்.
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

சிரியரின், 'ஒரு வார்த்தை' மிகவும் அருமை. புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் அழகான சிறுகதை மூலம் நம் எண்ணங்கள் உயிருள்ளவை, சக்தி வாய்ந்தவை என்று உணரச் செய்த அனுஷா அவர்களுக்குப் பாராட்டுக்கள். நாம் எதையுமே பாசிட்டிவாக பேசவும், நினைக்கவும் செய்தாலே நமக்கு நல்லது நடக்கும் என்று தெளிவான சிந்தனையுடன் எங்களை புத்தாண்டில் உற்சாகப்படுத்திய அனுஷா, எங்கள் நல்ல உயிர்த்தோழி.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை

'கடவுளின் குழந்தைகள் தாளமிடும் விரல்கள்' என்ற பக்கத்தைப் படித்ததும் கண்ணில் நீர் வழிந்தது. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான். அது சிறப்புப் பயிற்சி தர வேண்டிய குழந்தையாக இருந்தால் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து, ரமேஷ் பாபு என்ற மிருதங்கக் கலைஞர் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொடுப்பது சிலிர்க்க வைத்தது. அந்தக் குழந்தைகள் கொடுக்கும் பணத்தை தான் எதற்காக வாங்குகிறார் என்று அவர் மனம் திறந்து பேசியது மிகவும் பாராட்டுக்குரியது. 'மனநலம் குன்றிய அந்தச் சிறுவர்களின் அந்த ஒரு நாள் சந்தோஷமும் மகிழ்ச்சியும் எனக்குப் போதும்' என்று மனநிறைவுடன் குழந்தைகளுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுக்கும் ரமேஷ்பாபு அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
– உஷா முத்துராமன், திருநகர்

'ரு வார்த்தை'யில் அருமையான கதையைச் சொல்லி முத்தாய்ப்பாக, ராஜாவுக்கு கிரீடம் வைத்தாற்போல், 'வண்ணங்கள் மலர்களுக்கு அழகு; நம் எண்ணங்கள் நமக்குப் பேரழகு!' என்று முடித்தது பெரும் பேரழகு!
– இந்திராணி பொன்னுசாமி, சென்னை
புத்தாண்டு மங்கையர் மலர் அனைத்துப் பகுதிகளுமே அருமையாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருந்தன.
– நெசப்பாக்கம் சரஸாமாலி

அன்பு வாசகீஸ்,
நீங்கள் 'சொல்ல விரும்பும்' கருத்துக்களை இனி சுடச்சுட அந்தந்தக் கட்டுரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 'Comment' boxல் பதிவு செய்து விடுங்களேன்! அன்றன்று பதிவாகும் உங்கள் கருத்துகளை நூற்றுக்கணக்கான இதர வாசகர்கள் உடனுக்குடன் படித்து மகிழ்வார்கள். அவர்களும் தாங்கள், 'சொல்ல விரும்பு'வதைப் பதிவு செய்ய உற்சாகம் கொள்வார்கள்.
மேலும், உங்கள் பதிவுகள், அழியாப் பதிவுகளாக www.kalkionline.comல் மங்கையர் மலர் பகுதியில் என்றென்றும் மிளிரும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com