"பயணிகளுக்கு எச்சில் தொட்டு பஸ் டிக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது" என்று பஸ் கண்டக்டர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதே!– வாணி வெங்கடேஷ், சென்னை.எச்சில் மட்டுமா? எங்க ஊர் கண்டக்டர்களை வந்துப் பாருங்க வாணி! நெற்றி, கழுத்துல வடியிற வியர்வை எல்லாம் தொட்டு டிக்கெட் கிழிச்சுக் கொடுப்பாங்க! அதனால, எச்சில், வியர்வை போன்றவற்றைத் தொட்டுத் தரக் கூடாதுன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்குங்க அரசே! மறக்காம, தண்ணீர் உறிஞ்சும் பஞ்சுகளை 'ஹேண்டி'யாகத் தந்து, நடத்துநர்களுக்கு உதவுங்க ப்ளீஸ்!.***********************.நைட்டியுடன் பெண்கள் தெருவுக்கு வருவது சரியா?– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.சரியா, தவறாங்கிற பேச்சே தேவையற்றது! யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 'நைட்டி' என்பது பெண்களின் ஆடை குறித்த சுதந்திர அடையாளமாக எப்பவோ மாறிவிட்டது. ஆனாலும் பெண்கள் எதை அணிந்தாலும் விமர்சிக்கும் பொதுபுத்தி தொடர்வது வருத்தமே….நம்ப ஊர் சீதோஷ்தணத்துக்கு லாயக்கான ஆடை. அணிவதும் ஈஸி! விலையும் குறைவு! பின்னே? பாட்டி முதல் பியூட்டி வரை அனைவருக்கு மான விருப்ப உடையாக நைட்டி மாறிப் போனதில் நோ ஆச்சரியம்!."என் ஆடை என் உரிமை" என பெண்ணியம் பேசினாலும், "Dress is always a mirror of your inner character" என்பதைப் புரிந்துகொண்டவர்கள் நம் இந்தியப் பெண்கள்!.எங்கே எது மாதிரி அணிந்தால், அழகாகவும், கண்ணியமாகவும் இருக்கும் என்பதை பலரும் அறிந்தே இருக்கிறார்கள். சில சமயம் அவசரத்தி்ல், குழந்தையை 'ட்ராப்' செய்யவோ, மருந்து மாத்திரை வாங்கவோ, தெருவில் காய், பழம், வாங்கவோ நைட்டியின் மீது ஷாலைப் போர்த்திக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார்கள். அதுவும் சிறு கூச்சத்தோடே! அதை 'நைட்டி' என்று நினைக்காம, 'மேக்ஸி', 'கஃப்தான்'னு நெனைச்சுக்கோங்க. தப்பாகத் தெரியாது..மோர் ஓவர், குறை – பெண்ணின் உடையில் இல்லை; பார்க்கும் பார்வையில் உள்ளது!.***********************.பெரும்பாலும் காணாமல் போய்விட்ட சர்க்கஸ்கள் பற்றி…– வாசுதேவன், பெங்களூரு.நாங்கள் அப்போது சேலத்தில் இருந்தோம். இரவு நேரம் வானத்தில் ஒருவிதமான ஒளி, வட்டமாகத் தோன்றித் தோன்றி மறையும்.."நம்ப ஊருல சர்க்கஸ் வந்திருக்கு இல்லையா? அதனோட ஸர்ச் லைட்!" என்பார் அப்பா!.நேஷனல் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், ரஷ்யன் சர்க்கஸ், நியூ பாம்பே சர்க்கஸ் என ஆண்டுதோறும் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா சமயத்தில் சர்க்கஸ் கம்பெனிகள் உற்சாகமாக முகாமிடுவார்கள்..'பீட்டா'வோ, 'மிருகவதைச் சட்டங்களோ அவ்வளவு தீவிரமாக இல்லாத காலம்… அழகியுடன் நீர்யானை பந்து விளையாடுவது போன்ற போஸ்டர்கள் ஊரெங்கும் காணப்படும்! சிங்கங்கள், புலிகள், குதிரைகள், ஒட்டகங்கள், கரடிகள், யானைகள், நீர் யானை, மினி ரயிலில் அணிவகுக்கும் பறவைகள், கிளிகள்… என எல்லாவற்றையும் பார்ப்பதே ஆனந்தம்தான்! (இப்ப, டிஸ்கவரி சேனல்ல, எல்லாமே க்ளோசப்-ல பார்க்கலாம்னாலும், சர்க்கஸ் தந்தது தனி குஷி!).இளம் பெண்ணை யானை ஒய்யாரமாகத் தூக்கி வரும். பின் அவள் மீது ஒரு பலகையைத் தூக்கி வைக்க யானை அசராமல் நடக்கும். யானை குடும்பத்தோடு பூஜை செய்யும். டிஸ்கோ டான்ஸ்கூட ஆடும்!.சிங்கத்தின் வாயில் ஒருவர் தலையை விட்டு எடுப்பார்! நீர்யானை வாயைப் பிளந்து காட்டும்! இதையெல்லாம் வாய் பிளந்து பார்க்கும் மக்கள் கூட்டம்!.கரடிக்குட்டி சைக்கிள் விட்டதும், கோமாளியின் ட்ரவுஸரில் நெருப்புப் பற்றிக் கொள்ளும்… ஃபுல் யூனிஃபார்மில் விசில் ஊதிக்கொண்டே குரங்கு ஃபயர் இன்ஜின் ஓட்டி வந்து நெருப்பை அணைக்கும்..சர்க்கஸின் சிறப்பம்சமே பஃபூன்கள் செய்யும் ஸ்லாப் ஸ்டிக் காமெடியும், 'trapeze' எனப்படும் 'பார்' சாகசங்களும்தான்! என்னவொரு டைமிங்! கடுமையான பயிற்சி! 'கரணம் தப்பினால் மரணம்' என எல்லா நிகழ்ச்சிகளுமே மயிர்க்கூச்செரிய வைக்கும்!.அப்படிப்பட்ட அபூர்வக்கலை, கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. வருத்தத்துக்குரியதுதான்! என்ன பண்றது? 'சந்திரலேகா', 'பறக்கும் பாவை', 'குலமகள் ராதை', 'அபூர்வசகோதரர்கள்' போன்ற படங்களைப் பார்த்து 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!ன்னு மனசுக்குள்ள பாடிக்கலாம் வேற வழி?.***********************.இந்த வாரப் பூங்கொத்து யாருக்கு அனுஷா?– லக்ஷ்மி ஸ்ரீனிவாஸ், மதுரை.தேசத்தின் மீது பற்றும், ராக்கெட் தொழில்நுட்பத்தின் மீது தீராத காதலும் கொண்ட விஞ்ஞானியின் 'பயோபிக்'கை எவ்வித கமர்ஷியல் நோக்கமும் இன்றி, ஒரு மெல்லிய த்ரில்லர் போல காட்டிய, இயக்குநர் கம் நடிகர் மாதவனுக்குதான்! பல காட்சிகளில் மாதவனைப் பார்க்க முடியாமல், நாம் நம்பி நாராயணனையே காண்பதுதான், அவரது உழைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!."என்ன நிரபாரதின்னு சொல்லிட்டாங்க… அப்ப குற்றவாளின்னு ஒருத்தன் இருக்கணுமுல்ல? அவன் யாரு?" என்ற கதாநாயகனின் கேள்விக்கு தியேட்டரில் ஒருவித மெளனம் திடுக்கிட்டு, பின் 'கிளாப்ஸ்' விழுகிறது! முதல் பாதி ஏதோ ஃபிஸிக்ஸ் க்ளாஸ் மாதிரி இலேசாக போரடிக்கக் கூடும்! 'ராக்கெட்ரி – நம்பி விளைவு'- படத்தில் விஞ்ஞானக் காட்சிகள் தவிர்க்க இயலாது! வெளிநாட்டுப் பிரச்னைகளைச் சொன்னதுபோல, அப்போது இருந்த உள்நாட்டு அரசியல் பின்னணிகளையும் சொல்லியிருக்கலாம். இது போன்ற சில குறைகளையும் மீறி உன்னதத்தைத் தொட்டு விட்டதால், குட் லான்ச்சிங் டைரக்டர் மாதவன்!