புகைப்படக் கவிதை!

புகைப்படக் கவிதை!
Published on
மங்கையர் மலர் வாசகீஸ் FB  பகிர்வு!
பாடம் ..! 

யமறியா  பருவத்திலேயே
பாசம், நேசமென போதித்தது
இயற்கையா? இறைவனாயென
இன்றளவும் யோசிக்கிறேன்…!!
-பானு பெரியதம்பி, சேலம்

பழைய தத்துவம் புதிய படத்திற்கு…

நால்வரோடு சேர்ந்து
ஐவரான உண்மை நண்பர்கள்
ரசிக்கும் இயற்கை காட்சி
-உஷாமுத்துராமன், திருநகர்  

ன்னப்பா  பார்க்கறீங்க
நல்லா இருக்கற நம்ம
நட்பை பிரிச்சுடப் போறாங்க
இந்த மனுஷப் பசங்க .
-மகாலட்சுமி  சுப்பிரமணியன்  காரைக்கால்.

ல்லோரும் பார்க்கும் காட்சி என்னவென்று தெரியவில்லை
எம்பி பார்க்கலாமென்றால்
எள்ளளவும் இடமில்லை.
-வீ. கணேஷ், மதுரை.

ந்தறிவும் ஆறறிவும் ஒன்றிணைந்தால்
எட்டாக்கனியும் எட்டி விடும்
முயற்சி மட்டுமே மூலதனம் என்பதற்கு
இதுவல்லவோ எடுத்துக்காட்டு
-நளினி ராமச்சந்திரன், கோவை.

சுண்டைக்காய் சைஸ்
வாண்டுக்கு பாதுகாப்பா
சுற்றிலும் நாலு
நாய்ப்  படை!
-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

ள்ளே நடப்பது
அறுசுவை விருந்தா
அரசியல் கூட்டமா
அதிரடி ஆட்டமா
அனல் பறக்கும் பட்டிமன்றமா
ஆர்வம் தாங்காமல்
எட்டிப் பார்க்கும
ஜூஜூக்களும் பப்புவும்….
-ப்ரஸன்னா வெங்கடேஷ், நவிமும்பை

ங்களுக்குள் சாதியில்லை, மதமுமில்லை!
ஏழையென்ற பேதமில்லை!
நாங்கள் வாயில்லா ஜீவன் எனினும்
நன்றி ஒன்றே எங்கள் மொழி!

செல்ல நாய்ப்போட்டியிலே
செயித்தது யாரென பார்க்க
நண்பனுடன் காத்திருக்கும்
நன்றி மிக்க ஜீவன் நாங்கள்.
-ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்

ர்வம்
எட்டிப் பார்ப்பதில்
போட்டா போட்டி…
கோலமிட்டது என்
எட்டு வயசு பேத்தியாச்சே…
-என்.கோமதி,  நெல்லை-7

ந்தறிவு
ஆறறிவு பேதமில்லை
இது நேசக் கூட்டணி
ஒற்றை தலைமை
இரட்டை தலைமை
சண்டையில்லை
இது அன்பின் அரசாங்கம்.
-நிலா, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com