முன்குறிப்பு:- நான் சர்வநிச்சயமாக, 'ஊபர், 'ஓலா', 'ஸ்விக்கி', 'ஸோமேடோ' போன்ற எந்தவிதமான சேவை நிறுவனங்களின் பங்குதாரரோ, ப்ரமோட்டரோ இல்லை; இது சமூக, தார்மிக, மனிதநேய, தரும, etc, etc, விழிப்புணர்வு சிந்தனைக் குவியலில் ஏற்பட்ட சின்னப் பொறி மட்டுமே!.எங்கள் அபார்ட்மென்டின் இரண்டாம் மாடியில் ஐ.டி. இளைஞன் இருக்கிறான். வயது 25! அவனுடைய பெற்றோர் வெளியூர் சென்றிருப்பதால், சில வாரங்களாக வெளி உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறான்; காஃபி முதல் பிரெட் ஆம்லெட் வரை!.சமீபத்தில் சென்னையில் இரண்டொரு தூறல் விழுந்த அதிசய இரவு, என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. உணவு டெலிவரி ஊழியர் நனைந்தபடி நின்றார்.."மாடி வீடுப்பா!" என்று வழி காட்டினேன். சலித்துக் கொண்டபடி மாடி ஏறினார். அங்கே ஏதோ சிறு வாக்குவாதம் நடந்தது; கீழே வரும்போது ஊழியரின் முகத்தில் கடுகு வெடித்தது.."அட்ரஸ் சரியா கொடுக்காம, டென்ஷன் செய்றாங்க! நாங்க மட்டும் மனுஷங்க இல்லியா?" என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டே போனார்!.——————.எனக்கு பல விஷயங்களில் எனது மகன் கண்டிப்பான குரு!அவன் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்போது, என் கைப்பக்குவத்தை ரசித்துச் சாப்பிடுவான் என்றாலும், சில பிரத்யேக உணவு வகையை ஸ்பெஷல் ஆர்டர் செய்துவிடுவான். நானும் அவன் விருப்பத்தில் தலையிடுவதில்லை. (எங்களுக்கும் சேர்த்து இல்ல ஆர்டர் செய்றான்?!")."எஸ்… சொல்லுங்க ஜி! நீங்க மெயின் ரோட்ல மெட்பிளஸ்கிட்ட வந்து 'கால்' பண்ணுங்க. நானே வந்து வாங்கிக்கறேன்!" என்று ஒரு நடை நடப்பான். அல்லது "நான் கீழே வர்றேன் பாஸ்! 'gate'க்கிட்டே நில்லுங்க!" என்று படியிறங்கிப் போவான்..நான் அவனை அர்த்தபுஷ்டியாக (அதாவது முறைக்கிறேனாம்!) பார்த்தால், "அம்மா, இது சோழிங்கநல்லூர்ல இருக்குற ஒரு ரெஸ்டாரன்ட்ல இருந்து வருது. ட்ராஃபிக்ல வண்டி ஓட்டிக்கிட்டு பத்து கிலோமீட்டர் ட்ராவல் பண்ணிட்டு வர்றாங்க. நான் பத்தடி நடந்து போய் வாங்கினா என்ன?" என்பான்.."நோயாளிகளோ, முதியவர்களோ, டோர்டெலிவரி கேட்பதில் அர்த்தமிருக்கு. நாம்ப கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணினா அவங்களுக்கு அலைச்சல் மிச்சம்!" என்பது அவனது பாயின்ட்!.அதேபோல வாடகைக் கார்களை அமர்த்தும்போதே, உலர்ந்த குரலில் எனக்கான 'டிஸிப்ளின் கோட்' வந்துவிடும்.."அம்மா, அவங்க ஜி.பி.எஸ். போட்டு வண்டி ஓட்டுவாங்க. போற இடத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னா போதும். நீ வண்டியில உட்கார்ந்துகிட்டு, "அப்படிப் போ… இது சுத்து"னு ரூட்டெல்லாம் கொடுக்காதே!" என்பான். அதாவது "உன் திருவாயைத் திறக்காதே"ன்னு அர்த்தம். எனக்கென்ன? வேடிக்கை பார்த்தபடி போனால் போச்சு! யாரோ வண்டி! யாரோ பெட்ரோல்! யாரோ வேலட்!."சார்… இது பெரிய வண்டி. இந்தத் தெருவுக்குப் போகாது. இங்கியே இறங்கி, கிராஸ் பண்ணிக்கிறீங்களா?"னு டிரைவர் சொன்னால், "ஒ.கே… நோ ப்ராப்ளம்… தாங்க்யூ பாஸ்" என்று இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்து, என்னை இரண்டு தெரு நடக்க வைப்பான்.."அம்மா, நாம்ப வேற ஒரு பெரிய விஷயத்துக்குப் போயிட்டு இருக்கோம்… இப்ப, அவனோட தகராறு பண்றதுல உன்னோட எனர்ஜி வேஸ்ட் ஆயிடும்; ஃபோகஸ் மிஸ் ஆயிடும்… புரிஞ்சுக்க!" என்பான்..——————.சமீபத்தில், உமேந்தர் என்ற 33 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கும், வாடகைக் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், உமேந்தர் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியை நீங்களும் டீ.வி.யில் பார்த்திருப்பீர்கள். சாதாரண வாய்த்தகராறு ஒரு கொலையில் முடிந்தது… எத்தனை அதிர்ச்சி!.ஒ.டி.பி. எண்ணை டிரைவர் கேட்டுள்ளார். மனைவி, குழந்தைகளை காரில் ஏற்றுவதில் கவனமாக இருந்த உமேந்தர், காரில் உட்கார்ந்ததும் சொல்கிறேன் என்றாராம். யார், யாரால் உரசப்பட்டு உஷ்ணம் அடைந்தார்கள் எனத் தெரியவில்லை.."நான் ட்ரிப்பை கான்ஸல் செய்கிறேன். நீங்க வேறு வண்டியை 'புக்' செய்து கொள்ளுங்க!" என்றிருக்கிறார் டிரைவர்..கோபமடைந்த பயணி, திட்டிக்கொண்டே காரின் கதவை ஓங்கிச் சாத்தியிருக்கிறார்..டிரைவருக்கு ஆத்திரம் வந்து, சரமாரியாகத் தாக்கியதில், மனைவி, குழந்தைகள் கண் எதிரே, உமேந்தர் அநியாயமாக இறந்தே போனார். டிரைவர் கைதாகியுள்ளார்..ஒரு விநாடி ஏற்பட்ட கோபம், இரண்டு குடும்பங்களைப் பழி(லி) வாங்கிவிட்டது..நாம் எல்லாருமே மனிதர்கள்தான். விதவிதமான மனம், உடல், பொருளாதாரப் பிரச்னைகள் உள்ளவர்கள் என்பதால் நாம் ஒவ்வொருவரும் வேறு வேறு டிகிரியில் கொதிநிலையை அடைகிறோம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் மீது தவறே இல்லாவிட்டாலும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. விட்டுக் கொடுத்து, வீண் தகராறு செய்யாமல், நகர்ந்துவிடுவது நல்லது..வெளியிடங்களில் ஆண்கள் ஏடாகூடமாகக் கோபப்பட்டு நடந்தால், கூட இருக்கும் பெண்கள் உடனடியாக "ஸாரிப்பா…தம்பி…. கிளம்புப்பா!" என்று சூழ்நிலையைத் தணித்துவிடணும். நாமும் சேர்த்து முடுக்கி விடக் கூடாது. ஏன்னா 'கோபத்தோடு எழுந்து நிற்பவன் நஷ்டத்தோடு உட்காருவான்!" என்பது பழமொழி!