திருத்தல உலா!  

திருத்தல உலா!  
Published on
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க… 
108 விநாயகர் திருக்கோயில் இந்த கோயில் எங்கு உள்ளது?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரக்கரை பகுதியில் அருள்மிகு 108 நன்மை தரும் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
தி
ண்டுக்கல்லில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கோபாலசமுத்திரக்கரை என்னும் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
க்கோயிலில் 32 அடி உயர விநாயகர் சிலை அமைந்துள்ளது. பக்தர்களே அபிஷேகம் செய்யும் பொருட்டு '108' விநாயகர் சிலைகள் இங்கு உள்ளன.16 அடி உயரத்தில் கஜமுக விநாயகர் மற்றும் ராஜகணபதி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் குளக்கரையை சுற்றிலும் நடைப்பயிற்சி மேடை அமைத்து விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப் பட்டுள்ளது.இக்குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 2 அடி உயர ஆதி விநாயகரை போன்று 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐயப்பனும், தட்சிணாமூர்த்தியும் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.இக்கோயிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கையை திருஓலை சீட்டு மூலம் இறைவனிடம் அனுமதி பெறுவது சிறப்புமிக்கதாக உள்ளது.சித்திரை முதல் தேதியில் சிவபெருமான் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு.இக்கோயிலில் அண்ணாமலை, உண்ணாமலை அம்மனும், சீனிவாசப்பெருமாள், சொர்ண ஆகர்ஷண பைரவரும் காட்சியளிக் கின்றனர்.மகாலட்சுமி, தேவி கருமாரியம்மன், ஆஞ்சநேயர், துர்க்கை, முருகன், மதுரை வீரன், சமயபுரம் மாரியம்மன், கருப்பண்ணசாமி ஆகியோர் சிலைகளும் இங்கு உள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வி
நாயகர் சதுர்த்தி, பிரதோஷம், மகாசங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.இக்கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
டன் பிரச்னையில் இருந்து தீர்வு காண்பதற்காக மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?ங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்து கின்றனர். விநாயகர் சதுர்த்தியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகர்வலம் வந்து விநாயகரை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
– ஏ.எஸ். கோவிந்தராஜன், சென்னை

***********************************

அருள்மிகு பசுவண்ணன் (சித்தி விநாயகர்) திருக்கோயில்…!!

இந்த கோயில் எங்கு உள்ளது?
கோ
யம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுக்கிரவாரப்பேட்டை என்னும் ஊரில் அருள்மிகு பசுவண்ணன் (சித்தி விநாயகர்) திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மருதமலை செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள சுக்கிரவாரப்பேட்டை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
ருவறையில் மூலவராக சித்தி விநாயகர் பசுவண்ணன் என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார். வலது கரங்களில் அங்குசம், தந்தம் மற்றும் இடது கரங்களில் பாசம், மோதகம் ஏந்தி சதுர்புஜ இடம்புரி நாயகனாகத் திகழ்கிறார். இடது காலை மடக்கி வலது காலை தாமரை பீடத்தின் மீது வைத்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். சிலையின் பின்புறம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்லினால் உருவாக்கப்பட்ட திருவாச்சி அமைந்துள்ளது.

ராவணனிடம் ஆத்ம லிங்கத்தைப் பறித்து பிரதிஷ்டை செய்ததால், இவரை வணங்கினால் சிவனையும் தொழுத பலனைப் பெறலாம்.

ஒரு வித்தியாசமான கோயில் இது. முகப்பில் விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாள், நந்தி மற்றும் வள்ளி, தெய்வானை, சமேத முருகன் என சுதை சிற்பங்களின் அணிவகுப்பு உள்ளது.

அர்த்த மண்டபத்தில் சிவலிங்கமும், வாகனமாகிய நந்தியம் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். முருகன், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகியோர் தனிச்சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்.

இச்சன்னதியின் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் விநாயகர், நாகம், சிவன் ஆகிய திருமேனிகள் உள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன?
த்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கோகுலாஷ்டமி, ராமநவமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்படுகின்றன.

இங்கு விநாயகர் சதுர்த்தி தலையாய பெருந்திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பு
திதாக தொடங்கும் எந்த செயலிலும் தடைகள் வராமல் இருக்க பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. ஆன்மபலம் பெறவும், இறைவழிபாடு அதிகரிக்கவும் பசுவண்ணனை வணங்கலாம்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும், அருகம்புல் மாலை சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
– ஏ.எஸ். கோவிந்தராஜன், சென்னை

***********************************

ஆடியில் அருள் காக்கும் சாமுண்டேஸ்வரி!

ர்நாடகத்தில் ஆடி மாதம் முன்பே பிறந்துவிடும். ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை கர்னாடாகவில் ரொம்பவே விசேஷம்!

காரணம் சாமுண்டேஸ்வரி அன்றுதான், மகிசாசுரனை கொல்வதற்காக அவதரித்தாள். மைசூரிலிருந்து 13 கிலோமீ்ட்டர் தொலைவில் சாமுண்டி மலை உள்ளது. 3486 அடி உயரம் கொண்ட இதனை 1008 படிகளாலும் ஏறலாம்! கார்களிலும் சுற்றி வரலாம்.

அரசர்… அரசியல்வாதி. பிரபலங்கள் – அப்பாவி மனிதர்கள் என அனைவருக்குமே சாமுண்டி நம்பிக்கை தெய்வம். அலங்கார கருங்கல் நந்தி, மலையில் கோயில் அருகில் உள்ள சந்திப்பில் மகிசாசுரன், இறுதியாக சாமுண்டேஸ்வரி அம்மன் என காளி பல உண்டு.

எட்டு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் ஆக்ரோஷம்… உக்கிரம் நிறைந்து காணப்படுகிறாள் என்று கூறப்பட்டாலும் கண்களில் கருணைக்கும் பஞ்சம் இல்லை. தங்க கவசம் சார்த்தி, விளக்கு வெளிச்சத்தில் ஜொலிப்பாள்!

செவ்வாய், வெள்ளியில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் மற்றும் மாலையில் சந்திர உதயம் ஆனபின்பும், விளக்கு ஏற்றி வழிபட்டால், நீங்கள் நினைத்தது நல்லதாக, எதிராளிக்கு தீங்கு விளைவிக்காததாக இருந்தால் நிச்சயம் நடக்கும். ஆடி மாதம் முழுவதும் பல லட்சம் மக்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர்.
– ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com