-உஷா ராம்கி.பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, வளர்ந்துவரும் கர்நாடக இசைக் கலைஞர் நந்திதா கண்ணனுடன் இந்த சந்திப்பு-.சமீபத்தில் Live 4 You என்ற நடை மேடை, தங்களது ஹால் ஆஃப் ஃபேமிற்குள் நந்திதாவைச் சேர்த்திருக்கிறது. இதன் மூலம் வளர்ந்து வரும் 27 இசைக் கலைஞர்களில் ஒருவர் என்ற பெருமையைப் பெறுகிறார் நந்திதா..தேனொழுகும் குரலில் பேசத் தொடங்கினாள் நந்திதா, "ஒரு முழுநேர இசைக் கலைஞர் ஆகணும்னு ஆசை. என்னுடைய முதல் குரு என் அம்மா. இப்போ வித்வான் ஸ்ரீராம்குமார் அவர்களிடம் கற்றுக்கொள்கிறேன்.".ஒரு ஆண் குருவிடம் கற்றுக்கொள்ளும்போது வேறவேற pitchஇல் பாடுவது கடினமாக இருக்கா?."சில பேருக்கு அது இருக்கும். ஸ்ரீராம்குமார் அண்ணா, யாருக்குக் கற்றுத் தராரோ அவங்களுக்குத் தகுந்தாற்போல பாடுவார். எனக்கு ஐந்தரை கட்டையில் சொல்லித் தருவார்; ஆண்பாடகர் என்றால் ஸ்ருதி இறக்கிப் பாடுவார். அதனால் எனக்கு சிரமம் இருந்ததில்லை".தனிப்பட்ட முறையில் கச்சேரிகள் பண்றீங்க. பள்ளி மூலமாகவும் பாடுவதுண்டா?."ஓ… அது மிக அழகான ஒரு அனுபவம். நாங்க குழுவா பஜன் பாடப்போகும்போது சேர்ந்து நிறைய பயிற்சி செய்திருப்போம். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்துல, பத்தாவது பரிசிலிருந்து தொடங்கி முடிவுகள் அறிவிப்பாங்க. அந்த சஸ்பென்ஸ் த்ரில்லிங்கா இருக்கும். இந்தத்தடவை இரண்டாவது பரிசு வாங்கினோம். ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஒரு குழுவா சேர்ந்து பாடிப் பரிசு வாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும்..உன்னுடைய இசைப் பயணம் இப்போதான் சூடு பிடிக்கிறது, இன்னும் நிறைய சாதிக்கணும், அதுவே எங்கள் பிரார்த்தனையும்கூட. இதுவரை என்னென்ன விருதுகள் வாங்கியிருக்க?."குருகுஹ அம்ருதாவில் முதல் பரிசு வாங்கியது பெருமை. ரவிகிரன் அண்ணா நடத்தும் இந்தப் போட்டில நல்லா பாடி முடிச்சேன். முதல் பரிசு வென்றதுல எனக்கு தம்பூரா பரிசாக் கிடைச்சுது, அதனால் இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். சமீபத்துல கிடைச்சதுதான் இந்த ஹால் ஆஃப்ஃபேம் அங்கீகாரம்.."இசையை இவ்வளவு தீவிரமா கத்துக்கும்போது, படிப்பு என்பது எவ்வளவு முக்கியம்? நல்லா படிப்பியா".இந்தக் கேள்விக்கு அவளிடமிருந்து பெரிய விளக்கம் வரவில்லை. ஆனால், படிப்பில் படுசுட்டி, வகுப்பின் டாப் ரேங்க் வாங்குபவர்களில் ஒருவர், என்பது தெரியவந்தது. பள்ளியில் ஆல்-ரவுண்டர் விருதுகள் வாங்கி அடுக்கியிருக்கிறார்..உன் தினசரி அட்டவணை என்ன?."காலை 6 மணிக்கு எழுந்து சாதகம் செய்வேன். மாலை பள்ளியிலேருந்து வந்தப்புறம், படிச்சுட்டு, ஒரு 15 நிமிடம் எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஃப்ரெண்ட்ஸோடு நடந்து ஜாலியா பேசிட்டு வருவேன். வந்து ஒரு மணி நேரம் பாடுவேன்.".இப்படி பிஸியா வேலை செய்யும்போது மனஅழுத்தம் வருமா? ரொம்ப சுமை ஏத்திக்கற மாதிரி இல்லையா?."கச்சேரியும், பள்ளித் தேர்வும் ஒண்ணா வரும்போது ஸ்ட்ரெஸ் இருக்கும். ஆனால், பிடித்து செய்யறதுனால எப்படியும் முடிக்கணும் என்ற வைராக்கியம் இருக்கு. மிக ஆசையோடு இசை கத்துக்கறேன். அது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயம், அதனால அது எனக்குச் சுமையில்லை, சுகம்தான். படிப்பும் படிச்சுதான் ஆகணும், பட்டம் பெறணும். அதனால் அதிலும் முழு மனதை செலுத்திடுவேன்..இசையும் படிப்பும்தான் எல்லாமா? வேற எதாவது ஆர்வங்கள் இருக்கா?."எனக்குக் கதைகள் எழுதப் பிடிக்கும், நான் ஒரு ப்ளாகர் (blogger). ஓவியம் வரைவேன். என் கதை, கட்டுரைகளுக்குச் சித்திரமும் தீட்டுவேன். நேரம்கிடைக்கும்போது பாட்மின்டன் விளையாடுவேன்.".(நேரம் கிடைக்கும்போதா… ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானே?! என் மைன்ட் வாய்ஸ்)..முதல் முதலில் கச்சேரி செய்தபோது பயமா இருந்துதா? மேடை அனுபவம் எப்படி இருந்திருக்கு?.கட்டாயம் பயமெல்லாம் இருந்தது, இப்பவும் இருக்கு. ஆனால், நான் கேட்டிருக்குற எல்லா வகை இசையிலும் என்னை ஈர்த்தது கர்நாடக சங்கீதம்தான். அதனால் அதீத ஆசையோடு பாடுகிறேன். எம்.எஸ் அம்மா பாட்டைக் கேக்காத நாளே கிடையாது. நான் முதன்முதல்ல பங்கு கொண்ட பள்ளி சங்கீதப் போட்டியின்போது, எனக்கு மூன்று வயசு இருக்கும். அந்த முதல் போட்டியில எனக்கு முதல் பரிசு கிடைச்சுது. அதிலிருந்தே அப்பா, அம்மா, ஆசிரியர்கள் எல்லாரும் என்னை ஊக்குவிக்கத் தொடங்கினாங்க..நிறைய வருடங்களுக்குப் போட்டின்னாலே பயமா இருக்கும். ஒரு கட்டத்தில் எனக்கு ஒரு உணருதல் கிடைச்சுது, 'போட்டிகள் பயிற்சி செய்யவும், தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் உதவும் அற்புதமான வாய்ப்பு' என்பது. அதோடு நிறைய புதுப்பாடல்களையும் போட்டிகளுக்காக கத்துக்கமுடியுது. எனக்கு என்ன பெரிய இலட்சியம் என்றால், நிறைய கச்சேரிகள் பாடணும், அதை நிறைய பேர் கேட்டு ரசித்து, இசையின் அழகை அனுபவிக்கணும்..திரைப்படப் பாடல்கள் பாடுவியா?."நிச்சயமா. பழைய ஹிந்தி பாடல்கள், கஜல் கேட்பேன். ரெஹ்மான் அவர்களின் இசைப் பாடல்கள் எனக்கு உயிர். அவர் ஆல்பம் வந்தவுடனே முதல்ல கேட்பவர்களில் நான் ஒருத்தி. அவர் இசையை யோசிக்கும் விதமே அழகாக இருக்கும்..இவ்வளவு ஆர்வங்கள் இருக்கும்போது, எப்படி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறாய்? சோஷியல் மீடியாவுக்கு நேரம் உண்டா?."ஒரு விஷயம் என்னிடம் என்னன்னா, நான் எதாவது வேலை செய்ய வேண்டியிருந்தால், அது என் மனது முழுக்க ஆக்கிரமிச்சுடும். அதனால மனது வேறு எதுலேயும் போகாது. முக்கியமா செய்யவேண்டிய விஷயங்கள் இருந்தா, மொபைல், தொலைக்காட்சிகிட்ட போகவே மாட்டேன்..("ஆஹா… இந்தப் பெண் இப்படி ஒரு வரம் வாங்கி வைத்திருக்கிறாளே?!)இசைப்பணியில் வெற்றி காண வாழ்த்துகள் நந்திதா!