
-உஷா ராம்கி
அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து செல்ல (வெல்ல) வேண்டுமென்றால், மிக கவனமாக சமநிலையில் செல்ல வேண்டும்.
15 வருடங்கள் சர்வதேச வங்கியும் வேலை செய்தும், 2003 முதல் வாழ்வியல் பயிற்சியாளராகப் பணி புரிந்தும், இரண்டு பிள்ளைகளை ஒருவாராக வளர்த்துவிட்டோம் என்ற அனுபவத்தோடும் work-life balance பற்றி நான் பகிர்ந்து கொள்ளும் பதிவு இது:
பெண்களின் வாழ்க்கையும் சமுதாயத்தில் நமக்குக் கிடைக்கும் மதிப்பும் நம்மை மேம்படுத்தும். அதில் சவால்கள் இருக்கத்தான் செய்யும். நம்மைச் சுற்றி தினம் தினம் பல பெண்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு ஊக்கம். அதே நேரத்தில் நம் ஓட்டப்பந்தயம் மற்றவர்களோடு இல்லை. யாரோடும் ஒப்பிடாமல் தனிப்பட்ட முறையில் நம்மால் ஜெயிக்க முடியும். அந்த வகையில் நாம் நம் குழந்தைகளுக்கு ரோல்–மாடலாக இருப்போம். இருப்போமா?
அன்பு வாசகீஸ்,