ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
படங்கள்: பிள்ளை

குடும்பப் பிரச்னைகளை தீர்க்க 100 – வழிகள்னு ஒரு புத்தகம் வெளியிடப்போறதா சொன்னீங்களே…?

மேட்டர் எல்லாம் ரெடி சார்… குடும்பத்துல ஒரு சின்ன பிரச்னையால தள்ளிப் போகுது!
-விரேவதி, தஞ்சை

************************************

"என்னங்க ஆபீஸ்க்கு மூணு நாள் லீவு போடுங்க."

"சொன்னா கேளு மொட்டை மாடியில என்னால வடகம் பிழிய முடியாது."
-பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

************************************

மகாராணியைக் காணவில்லைன்னு தெரிஞ்ச உடனே பேப்பர்ல விளம்பரம் கொடுத்துடீங்களே மன்னா, மகாராணி மீது அவ்வளவு பாசமா?

சரிதான் போங்க… நான் கொடுத்தது மணமகள் தேவை விளம்பரம் அமைச்சரே!
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா

************************************

"வேல வெட்டி இல்லாம இருந்தானே, உன் பையன். இப்ப என்ன பண்றான்?"

"வெட்டி வேல பண்றான், கசாப்புக் கடையில".
-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை.

************************************

மனைவி: அப்பாவும் பையனும் எதப்பத்தி வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

கணவர்: நான் ஊர்ப்பக்கம் போய் செட்டில் ஆகலாம்கறேன், அவன் ஊரப்பாக்கத்துல செட்டில் ஆகலாம்கறான்.
-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை.

************************************

" எதிரிக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டோம் மன்னா "

 " என்ன செய்தீர் தளபதியாரே,,,?"

 "அந்நாட்டு   செயலிகளையெல்லாம் துண்டித்து விட்டோம் மன்னா! "
-விரேவதி, தஞ்சை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com