“கமல் சார் பாராட்டு உச்சக்கட்ட உற்சாக ஊற்று!”

“கமல் சார் பாராட்டு உச்சக்கட்ட உற்சாக ஊற்று!”
Published on

-ராகவ் குமார்

ஏஜென்ட் தினா (வசந்தி ) நேர்காணல்:

விக்ரம் படத்தில் கமல் என்ட்ரி தரும்போது எந்த அளவுக்கு விசில் சத்தமும் கைத்தட்டலும் இருந்ததோ அதே அளவுக்கு ஏஜென்ட் தினா வில்லனின் ஆட்களை அடித்து துவம்சம் செய்யும்போதும் கை தட்டலும் விசிலும் இருந்தது என்பது உண்மை.

யார் இந்த தினா?

"என் பெயர் வசந்தி. அடிப்படையில் தினேஷ் மாஸ்டர் நடன குழுவில்
நடனம் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
தம்பி லோகேஷ் கனகராஜ், வசந்தி
அக்கா நடிப்பாங்களா? என் படத்தில்
ஒரு நல்ல கேரக்டர் இருக்கு, என்று
தினேஷ் மாஸ்டரிடம் கேட்டு இருக்கிறார்.
மாஸ்டரும் என்னிடம்  'லோகேஷ் தம்பி வந்து கேட்கும்போது கண்டிப்பா
போய் நடி. அருமையான வாய்ப்பு'
என்று சொன்னார். அவர் சொன்னது நிதர்சனமான
உண்மை என்பது படம் ரிலீஸ்
ஆன பின்புதான் தெரிந்தது.

நடனத் துறைக்கு வந்தது எப்படி?

நான் டிப்பிகல் சென்னைவாசி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவல்லிக்கேணி. என் வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பேர்.  எனக்கு இரண்டு அக்காக்கள். இரண்டு சகோதரர்கள். எனது அக்காக்கள் விஜயா மற்றும் சாந்தி இருவரும் சினிமாவில் குரூப் டான்சில் ஆடிக் கொண்டிருந்தவர்கள். என்னையும் ஹிந்தி படங்களில் நடனம் ஆட வைக்க மும்பை  அழைத்து சென்றார்கள்.  பின்பு சென்னை வந்து ராஜு மாஸ்டர் குழுவில் டான்சராக இருந்தேன். பின்பு தினேஷ் மாஸ்டரிடம் சேர்ந்து இன்று வரை தொடர்கிறேன்.

பள்ளிப் படிப்பு…?

நான் ஆறாவது வரைதான் படித்து இருக்கிறேன். நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தினால் படிப்பை தொடரவில்லை.

சினிமாவில் நடிப்பு, இசை என்றால் கூட வீட்டில் ஓரளவு ஏற்று கொள்ளுவார்கள். நடனம் என்ற உடன் தயக்கம் காட்டவில்லையா?

ல்லை. நான் பள்ளி படிப்பை  விட நடனத்தில்தான் பிராகசிக்க முடியும் என்று பெற்றோர்கள் நினைத்ததுதான் காரணம்.

நடனத்தின் பயிற்சிகள் விக்ரம் படத்தின் சண்டை காட்சிக்கு எப்படி உதவியது?

டனம், சண்டை இரண்டுமே கை கால்களின் அசைவுகளில் செய்வதுதானே? இருந்தாலும் மூவ்மென்ட், பாவனைகள் அனைத்தும் வேறு வேறு. என் மனமும் உடலும் பழக்கப்பட்ட நடனத்தின் உடல் மொழியில் இருந்து சண்டைக்கான உடல் மொழிக்கு மாற சில பயிற்சிகள் எடுத்து கொண்டேன்.விக்ரம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இதற்கு பயிற்சி அளித்தார்.

கமல் சாருடன் நடித்த அனுபவம்….

மல் சாரும், பிரபு தேவா சாரும் இணைந்து நடித்த காதலா காதலா படத்தில் காசு மேல காசு வந்து பாடலின் நடனத்திற்கு முதல் வரிசையில் இருந்து நடனம் ஆடி உள்ளேன். விக்ரம் படத்தில் நடிக்கும் போது கமல் சார் சில டிப்ஸ் தந்தார். நல்லா நடிக்கிறீங்க என்று பாராட்டினார். இந்த பாராட்டு ஒன்றே போதும் என் வாழ்நாள் வரை.

ஒரு நாளும் இருந்தது இல்லை. நான் இந்த இருபது வருடங்களில் குரூப்பில் வலது அல்லது இடது பக்கம் ஆடியிருக்கிறேன். முன் வரிசையில் நின்று ஆடியிருக்கிறேன். பின்னாடி நின்று ஆடு என்று யாரும் சொன்னது இல்லை. இதனால் வருத்தமும் இல்லை.

இனி நடனமா? நடிப்பா?

டிப்பு பலரிடம் என்னை கொண்டு சேர்த்து உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து நடிப்பில் பயணம் செய்வேன்.

நடிக்க விரும்பும் கதாபாத்திரம்…?

நான் முடிவு செய்ய கூடிய இடத்தில் இல்லை. கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளும் நிலையில்தான் உள்ளேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com