
"கல்யாணத்துக்கு மொய் வைக்க வர்றவங்க
பணம் வைக்க வேண்டாம். வேற என்ன வேண்டுமாம்… மொய்யா?"
"தக்காளிப் பழம் கொடுத்தா போதுமாம்."
"மாலா வீட்ல திருட்டுல என்ன போச்சுடி?"
"ப்ரிஜ்ஜில இருந்த தக்காளி பழம்மான்டி!"
"என்னப்பா ராத்திரி பூராவும் தூங்காம
வீட்டு தோட்டத்துக்கு காவல் இருந்தாயா…. ஏன்?"
"தக்காளி செடியில பழம் இருக்கு.
திருட்டுப் போகாம பாருங்கனுட்டா மனைவி!"
"என்ன கேட்டேன்னு இப்படி காளி மாதிரி ஆடறே?"
"நீங்க கேட்டது தக்காளி சட்னியாச்சே!"
"தலைவர் மேடையில பேசாதபோது அவர் மேல
மக்கள் என்னத்த வீசினாங்க? நன்றி! நன்றிங்கிறாரே!"
"தக்காளிப் பழமாம்!"
"உன் மாமியார் ஊர்லேயிருந்து
வரப் போறாங்கன்னு சந்தோஷமா சொல்றியே ஏன்டி?"
"ஒரு கிலோ தக்காளிப் பழம் கொண்டு வர்றாங்க!"