– ராஜ்மோகன்.இறுக்கமான மனநிலையில் இருக்கும்போது எல்லோரும் விரும்பும் பொதுவான கொண்டாட்டம் திரைப்படங்கள். கொரோனா தாக்குதலில் இருந்து உலகம் மீண்டு கொண்டிருக்கும் சூழலில், உலகின் பல பகுதிகளில் திரைப்பட விழாக்கள் கொரோனா இறுக்கத்தை மாற்றி வருகிறது..அவ்வகையில் சமீபத்தில் கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற 52வது சர்வதேச திரைப்பட விழா, இறுக்கத்தை மாற்றி ஒரு தன்னம்பிக்கையை விதைத்தது எனலாம். ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் சுற்றுச்சூழலும், பெண்ணீயமும் ஜொலித்தன. 150க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்படங்கள், பிரபலமானவர்களின் சிறப்புப் பயிற்சி வகுப்புகள், திரை வல்லுனர்களுடன் உரையாடல்கள் என கடந்த ஆண்டு கொரோனாவால் இழந்த அனைத்து உற்சாகத்தையும் திரும்பப் பெற்றது கோவா திரைப்பட விழா!.தொடக்க விழாவின் முதல் நாளே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகை சமந்தா ரூத். நாக சைதன்யாவுடன் வாழ்க்கையில், 'டூ' விட்டுக்கொண்ட பின்னர் அவரது முதல் பொதுவெளி நிகழ்வு இது என்பதால் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்கிற பல்ஸ் பலரிடம் எகிறியதை உணர முடிந்தது. சில செய்தியாளர்கள் குறிப்பாக இதைக் கேட்க, அழகான புன்முறுவலுடன் அதனைத் தவிர்த்தார், 'சமர்த்து' சமந்தா..ஒவ்வொரு ஆண்டும் ஒரு பாலிவுட் நட்சத்திரம் விழாவின் காந்தமாக வந்து செல்வார்கள். இவ்வாண்டு இரண்டு பேர். ரவீணா டாண்டன் மற்றும் மாதுரி தீட்ஷித். 90 கிட்ஸுகளின் கனவு நாயகிகளான இவர்கள், இன்றைய இளம் நாயகிகளுடம் போட்டி போடும் அதே இளமை புதுமையுடன் அசத்தினார்கள்..நீண்ட நாட்களுக்குப் பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், 'ஆர்னாயிக்' எனும் சீரிஸில் தோன்றுகிறார் ரவீணா டாண்டன். இதுகுறித்து நிகழ்ந்த மாஸ்டர் கிளாசில் அதே, 'பளிச்' இளமைத் துள்ளலுடன் வகுப்பெடுத்தார். இந்த நிகழ்வில் மோனிகா ஷெரில், ரோஹன் சிப்பி, வித்யா பாலனின் கணவரும் தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். ரவீணாவின் பிரபலமான பாடல், 'மஸ்த் மஸ்த்' பற்றி இளசுகள் குரலெழுப்ப, புன்னகையுடன் தொடர்ந்தார். ''பாலிவுட்டில் எனது முதல் படமான, 'பதே கே பூல்' சிப்பி பிலிம்ஸில் இருந்துதான் வெளியானது. அதே ரோஹன் சிப்பியின் இயக்கத்தில் இப்பொழுது ஓடிடியில் கால் பதிப்பதில் மகிழ்ச்சி" என்றவர், ''தொலைக்காட்சி தொடர் போன்று இல்லாமல், நல்ல சுதந்திரத்துடன் இயங்கக்கூடிய தளமாக ஓடிடி இருப்பதால் தரமான படைப்புகளை எந்தவிதமான கட்டுப்பாடுகளின்றி படைப்பாளிகளால் வழங்க முடியும்" என்றார்..திரைப்பட விழாவின் இன்னொரு ஹைலைட் இந்தியாவின் முதல் டெக்னிஷியன் மற்றும் மூத்த பாலிவுட் இயக்குனர் அருணா ராஜி அவர்களின் மாஸ்டர் கிளாஸ். ''படைப்பாளிகளில் ஆண், பெண் என்று வேறுபடுத்திப் பார்க்கத் தேவையில்லை. ஒரு படைப்பின் தன்மைதான் அதன் தரத்தை உறுதி செய்கிறது" என்றவர், ''இந்திய சினிமாவில் பெண்கள் இயங்குவது கடினம் என்ற கட்டுப்பாடுகள் தளர்ந்து வருகிறது. பெருகிவரும் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கையும், இங்கே குழுமியிருக்கும் மாணவர்களில் இருக்கும் அதிகமான பெண்களின் எண்ணிக்கையையும் பார்த்தாலே இதனைப் புரிந்துகொள்ள முடியும்" என்று பாராட்டிப் பேசினார்..சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி, சக்கை போடு போடும், 'செரோலி' திரைப்படம் பிரம்மாண்டமான திரையில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. அமானுஷ்யமான வீட்டில் சிக்கிக்கொள்ளும் ஒரு கர்ப்பிணிப் பெண் எப்படி கருவில் உள்ள தன் குழந்தையையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்கிறாள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் கதை, பெண்களுக்கு எதிராக சமூகம் முன்வைக்கும் முட்டாள்தனமான சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் சாடுகிறது. படத்தின் திரையிடலுக்குப் பின்னர் இப்படத்தின் நாயகி நுஷரத் பரூச்சாவும் இயக்குனர் விஷால் பியுரியாவும் பார்வையாளர்களுடன் உரையாடினார்கள். ''ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள். ஆனால், அதிமோசமான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் பெண்கள் மீது திணிப்பது தொடர்கிறது. இது வெறும் திரில்லர் படமாக இல்லாமல், சமூக பாடமாகவும் இருப்பதால் இப்படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தேன்'' என்றார் நாயகி நுஷரத்..சுற்றுச்சூழல் குறித்த படங்களும் இந்த விழாவில் அணிவகுத்து அனைவரையும் யோசிக்க வைத்தன. இதிலும் பெண் படைப்பாளிகளே முன்னிலை வகித்தனர்..'செம்கோர்' என்ற அசாமிய மொழி படத்தின் இயக்குனர் அயிமி பரூவா இயல்பான கதை சொல்லல் யுக்தி மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தார். ''இன்று நமது தேசத்தின் முக்கியமான பிரச்னை பெருகிவரும் மக்கள் தொகை அல்ல; சுற்றுச்சூழல் மட்டுமே. அசாம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை சரி செய்வதின் மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்க முடியும். இதனை எளிய கதையில் சொல்ல விரும்பினேன். அதுதான், செம்கோர்" என்று விளக்கமளித்தார்..இந்திய திரைப்பட விழாவின் உயரிய விருதான, 'தங்கமயில்' விருதை இவ்வாண்டு இரண்டு படங்கள் பகிர்ந்து கொண்டன. ஒன்று ஆப்பிரிக்காவில் இருந்து வந்த, 'பரகத்' என்ற படம். இன்னொன்று, ரஷ்யாவில் இருந்து பங்குபெற்ற, 'த சன் எபவ் மீ நெவர் செட்.'.இதில் பரகத் முழுக்க முழுக்க பெண்ணுரிமையை நகைச்சுவையுடன் பேசியது. கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி. பிள்ளைகள் எல்லாம் செட்டில் ஆகிவிட்டார்கள். தனிமையில் இருக்கும் பாட்டிக்கு ஒரு காதல் பிறக்கிறது. (நம்ம ஊரில் ஓடிடியில் இதே போன்றொரு உட்டாலக்கடி காபி ஓடிக்கொண்டிருக்கிறது.) அந்தக் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதைச் சொல்கிறது பரகத். சமூகத்தில் ஆண்கள் எந்தவொரு வயதிலும் இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள முடியும். ஆனால், பெண்களுக்குத்தான் ஆயிரம் கட்டுப்பாடுகள்..இளம் வயதில் விதவையாகி கடைசி வரை கைம்பெண்ணாகக் கழித்த பெண்கள் பலர். இவர்களுக்கான தடைகளை உடைக்கிறது 'பரகத்' படம்.".பேரன்புதான் உலகம். உலகை வெல்லக்கூடிய பேராயுதமும் அன்புதான் என்பதை சொல்லும் பரகத் படத்தின் முக்கியாம்சம். நாம் இந்தியாவில் கொஞ்ச கொஞ்சமாக மறந்துவருகிறது கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து பாட்டியாக அசத்திய பாட்டி வினிதா இப்ராகிம் சிறந்த நடிகையாகவும் தேர்வு பெற்றார். இப்படத்தின் இயக்குனர் ஏமி ஜெப்தா..''அன்புக்கு மதம் தடையில்லை என்பதை உணர்த்தவே ஒரு இசுலாமியப் பெண்ணை கிறித்துவ பெரியவர் காதலிப்பதாக வைத்திருந்தேன். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று நினைத்தேன். ஆனால், இதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு அனைவரும் வரவேற்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார். (நல்லவேளை! நீங்கள் தமிழ்நாட்டில் வந்து படம் எடுக்கவில்லை. இல்லையெனில் பெண் பிள்ளையான உங்களை பற்றி பல மீம்ஸ்கள் போட்டு டிரெண்ட் ஆக்கியிருப்பார்கள்.).தமிழ்நாட்டில் இருந்து, 'கூழாங்கல்' திரைப்படம் கலந்துகொண்டது. சாமானிய கிராமத்து மனிதர்களின் அக வாழ்க்கையை இயல்பாகப் பேசியது. சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்ட மனைவியை கூப்பிடச் செல்லும் கணவன். அங்கு என்ன செய்தான்? அவன் முயற்சி வென்றதா? என்ற ஒற்றை வரியை கலை வெளிப்பாடுடன் கையாண்டு இருந்தார் கோணங்கி மற்றும் முருகபூபதியின் நாடகப் பள்ளி மாணவரான இயக்குனர் வினோத்குமார். இப்படத்தைப் பார்த்து வியந்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இதனை வாங்கி உலகப்பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறார்கள். நயனும் விக்னேஷும் வருவார்கள் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்தார்கள். இருப்பினும் வினோத் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். அந்த பிரம்மாண்டமான அரங்கில் பெருத்த கரவொலியுடன் தன் மகன் படம் திரையிடப்படுவதை பெருமிதமுடன் பார்த்து மகிழ்ந்தார் வினோத்தின் அம்மா. இப்படம் இந்திய சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம்..பெண்ணுரிமையும் சுற்றுச்சூழலும் பூமியின் இரண்டு கண்கள். வீடு நலம் பெற பெண்களை போற்றுதல் வேண்டும். உலகம் வளம் பெற சுற்றுச்சூழல் அவசியம். இவ்விரண்டையும் சக்தி மிக்க ஊடகமான திரைப்படம் முன்னிறுத்துவதும் அதனை திரைப்பட விழாக்கள் இடம்பெறச் செய்வதும் ஒரு ஆரோக்கியமான கலையின் வெளிப்பாடாக அமைகிறது. இது மேலும் தொடர வாழ்த்துவோம்.