
"எல்லாத்துக்கும் பொறாமைப்படுற உன் மாமியார் இப்போ எப்படி இருக்காங்கடீ?"
"எங்க எதிர்வீட்டு மாமியோட மருமகளுக்கு வந்திருக்கிற கொரோனா, இவங்க மருகளான எனக்கு வரலையேன்னு பொறாமைப்படுறாங்கடீ!"
-கிரிஜா நந்தகோபால், திருச்சி
……………………………………………………………………………….
"வளவளன்னு மந்திரம் சொல்லி நேரத்தைக் கடத்தாம, சீக்கிரம் தாலி கட்ட வையுங்க புரோகிதரே!"
"ஏம்மா?"
"நாங்க சம்பந்தி சண்டை ஆரம்பிக்க டயம் ஆகுதுல்ல!"
-கிரிஜா நந்தகோபால், திருச்சி
……………………………………………………………………………….
"ஏங்க, கல்யாணத்துக்கு முன்பு என்னை ஓவியம்னு வர்ணிப்பீங்களே இப்போ ஏன் வர்ணிப்பதில்லை?"
"அப்போ நீ பேசாம இல்ல இருந்த!"
– எஸ். மாரிமுத்து, சென்னை
……………………………………………………………………………….
"இந்த வங்கியில் உள்நாடு, வெளிநாடுன்னு இரண்டு இடத்திலும் வாடிக்கையாளர்கள் இருக்காங்களாமே?"
"ஆமாம், டெபாசிட் செய்தவர்கள் உள்நாட்டிலும், கடன் வாங்கினவங்க வெளிநாட்டிலும் இருக்காங்களாம்!"
– எஸ். மாரிமுத்து, சென்னை
……………………………………………………………………………….
"கொத்தனாரை கல்யாணம் செய்தது தப்பா போச்சு."
"ஏன்?"
~எல்லாத்தையும் பூசி மறைத்து விடுகிறார்."
– வெ. விஜயகுமாரி, திண்டுக்கல்
……………………………………………………………………………….
"என்னப்பா ஆறு மாசமாக உன்ன காணோம்?"
"ஆன்லைன் திருட்டு கிளாஸ்க்கு பயிற்சிக்கு போய் இருந்தேன் சார்."
–விஜயகுமாரி, திண்டுக்கல்.
……………………………………………………………………………….
"என் மனைவியை ரெண்டு மாசமாக காணோம் சார்…"
""அதுக்கு?"
"காவல்துறை தேடக்கூடாதுன்னு சொல்ல வந்தேன்."
– வெ. விஜயகுமாரி, திண்டுக்கல்
……………………………………………………………………………….
நம்ம தலைவரை நடந்தே நாலு பேர் கூட்டிட்டு போறாங்க…?"
"அவுங்கதான் கட்சியோட வழிகாட்டு குழு."
– வெ. விஜயகுமாரி, திண்டுக்கல்