
காதலர் தினம் என்றதும் பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். பலவேறு நினைவுகள் வந்து செல்லும். சினிமா மற்றும் பல்வேறு ஊடகங்களில் இருக்கும் பிரபலங்களுக்கு காதலர் தினத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் :
நாடு இருக்கும் நிலையில் காதலர்தின கொண்டாட்டம் தேவையா?
கண்டிப்பாக தேவை, காதல் என்றால் அன்பு என்று அர்த்தம். அன்பு என்பது ஆண் பெண் இருவர்க்கும் இடையில் உள்ள ஈர்ப்பு மட்டும் கிடையாது. நம் அன்பு வட்டத்தில் அம்மா, அப்பா நண்பர்கள் இப்படி பலர் இருக்கலாம். குறிப்பாக வலண்டைன் என்பவர் இந்த நாளை காதலர்களுக்கு என்று குறிப்பிடவில்லை. இது அன்பை கொண்டாடும் நாள். என் கணவருக்கு காதலர் தினத்தில் பரிசு எதுவும் அளிக்கவில்லை. எங்கள் காதலை கொண்டாட ஒரு நாள் போதாது.
காதலும், காதலர் தினமும் எந்த அளவிற்கு தற்போது இம்பாக்ட்டாக உள்ளது?
ஓரிரு நாட்களுக்கு முன்பு 'காதலர் தினம்' தொடர்பான ரேடியோவில் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது ஒரு போன் கால் வந்தது, முப்பது வயது மதிக்க தக்க திருமணமான பெண் ஒருத்தர் பேசினார். தனது இளம் வயதில் தனக்கு ஒருவர் மீது ஈர்ப்பு இருந்தது எனவும் அவருக்கும் தன் மீது ஈர்ப்பு இருந்தது என்றும், ஆனால் தாங்கள் இருவரும் காதலை சொல்லி கொள்ள வில்லை என்றும் சொன்னார்.
அந்த நபர் தற்சமயம் தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறார்,அவருக்கு தற்சமயம் எதோ பிரச்சனை என்று கேள்வி பட்டேன். முடிந்தால் வரும் காதலர் தினத்தன்று மயிலாப்பூர் கோவிலுக்கு வந்தால் அவரின் பிரச்சனைகளுக்கு பேசி ஒரு தீர்வு தர உதவுகிறேன் என்றார்.
இந்த தகவலை எஙகள் வானொலி நிகழ்ச்சி மூலம் தெரியபடுத்தி கொள்வதாக கேட்டு கொண்டார். காதலும், அது தரும் நினைவுகளும் அனைவர் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காதலர் தினம் ஒரு அடையாளம்.
கடந்த காதலர் தினத்தன்று கிடைத்த ரொமான்டிக் அனுபங்களை கூறுங்களேன்?
கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று நேரம் செலவு செய்தேன். மறக்க முடியாத அனுபவம் அது. காதல் என்றால் அன்பு. அன்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நான் அள்ளி கொடுத்தேன். கல்லூரி நாட்களில் காதலர் தினத்தன்று என்னிடம் சில மாணவர்கள் பல்வேறு விதமாக காதலை வெளிபடுத்தினார்கள். மறக்க முடியாத நாட்கள் அது.
காதலர் தினம் அன்று சேத்தன் சார் என்ன பரிசு தருவார்?
காதல் என்பது நாளில் இல்லை, மனதில் உள்ளது என்று நினைப்பவர். நான் கல்லூரி, பள்ளி படிக்கும் போது காதலர் தினம் பற்றி ஒரு பரபரப்பு இருக்கும். ஆனால் இப்போது அந்த பரபரப்பு இல்லை.
சமூக வலைத்தளங்கள்
கூட காரணமாக இருக்கலாம்.