உங்கள் பார்வையில்… தமிழ்த் திரை உலகின் 70s – 80s சிறந்த காதல் ஜோடி யார்?

உங்கள் பார்வையில்… தமிழ்த் திரை உலகின் 70s – 80s சிறந்த காதல் ஜோடி யார்?
Published on

முகநூல் வாசகியர்களின் கருத்துகள்!

80′s ன் சிறந்த காதல் இணை கமல்-ஸ்ரீதேவி. இருவருமே பொருத்தமான அழகுடன் திகழ்ந்தார்கள். ஸ்ரீதேவியின் குழந்தைத் தனமான அப்பாவி முகமும், கமலின் ஆண்மை ததும்பும் கம்பீரமும் அவ்வளவு பொருத்தம். அதற்கடுத்த இணையர் சுரேஷ் – நதியா தான். துறுதுறுவெனத் துள்ளலானவர்கள். இளமை ததும்பும் சிறு வயது ஜோடிக்கு இவர்கள் வெகு பொருத்தம்.
-தேஜஸ் சுப்பு

70s to 80s சிறந்த காதல் ஜோடி ரஜினி – ராதிகாதான்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் 'நல்லவனுக்கு நல்லவனில்' ஒரு காட்சி. காதலித்து திருமணம் செய்த ஜோடியின் மகள், பெற்றோரை எதிர்த்து அவமானப்படுத்தி கல்யாணம் செய்து கொள்கிறான். அன்று, வீட்டில் சோகமாக, ராதிகா அமர்ந்திருக்க, தேறுதல் சொல்லி பாடும்போது இடையே, கலங்கி நிற்கும் ராதிகாவின் கண்களைப் பார்த்து, ரஜினி விழிகளாலேயே வார்த்தையின்றி அழாதே என்ற இடம் கல் மனசையும் நெகிழவைக்கும்.
-என்.கோமதி, நெல்லை

ண்பதுகளில் நதியா – மோகன் ஜோடியாக நடிக்கும் போது மிகவும் ரசிக்க வைக்கும். நதியாவின் உடைகளை பார்ப்பதற்காகவும், அவங்க மேட்சிங் வளையல், காதணி போட்டுக் கொண்டு வருவதை பார்ப்பதற்காகவும் போவோம். மோகனுடன் இணைந்து நடித்த படங்களில் அவர்கள் இருவரும் மிக அருமையாக புரிந்துகொண்டு நடிப்பது போல இருப்பதால், என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஜோடி.
-உஷா முத்துராமன், திருநகர்

னக்கு மிகவும் பிடித்த ஜோடி கமல் மற்றும் ஸ்ரீதேவி தான். தனித்துவமான நடிப்பில் இருவருமே கைதேர்ந்தவர்கள். அவர்கள் ஜோடி திரையில் தோன்றும் போதே காதல் அலை திரையரங்குகளில் பாயும். வசனங்கள், புன்முருவல்கள், பாவங்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்துவமான பதிவுகளை வெளிப்படுத்துவதில் இந்த ஜோடி கில்லாடி.

மூன்று மூடிச்சில் ஆரம்பித்த
இந்த ஜோடி, ஒவ்வொரு
முறையும் ஜோடி சேர்ந்த திரைப்படங்கள் அனைத்தும் வெள்ளி விழா
மற்றும் அரசாங்க விருது
என பல விருதுகளை அள்ளி வெற்றி விழா கண்டவை. சம்பவத்தின் உச்சிக்கு அழைத்து செல்வதில் இந்த ஜோடிக்கு
நிகர் எவருமில்லை.
உண்மையில்
ரியல் ஆக மயக்கும் ரீல் ஜோடி.
-ஸ்ரீவித்யா பிரசாத், சென்னை

மலஹாசன் – ஸ்ரீதேவி. அவர்களுடைய இளமை, நடிப்பு, துள்ளல்,குதூகலம் என ஒவ்வொன்றும் போட்டிபோடும் அவர்கள் நடித்த எல்லா படங்களிலும் .
அந்த காலகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சிறந்த ஜோடியாக வலம் வருவார்கள் என ரசிகர்களின் கருத்து கணிப்பாகவே இருந்தது.

காதல் அதனுடனான ஊடல் என அனைத்திலும் என் மனம் கவர்ந்த ஜோடி இவர்கள் தான். இருவரின் கண்கள் வழியே பேசும் காதல் மொழிகளை பல பாடல்களிலும் ரசிக்கின்றேன்… இன்றும்! அதுவும் 'மீண்டும் கோகிலா' படத்தில் வரும் 'சின்னஞ் சிறு வயதில் எனக்கோர்…' பாடலுக்கு இருவரின் வெட்கம் கலந்த காதலை பார்க்கும் நமக்கும் முகத்தில் புன்னகை வரும்.
-பானு பெரியதம்பி, சேலம்

70-80 களின் சிறந்த ஜோடியாக நான் கருதுவது  கமல்-சுஜாதா ஜோடி. இருவரும் சேர்ந்து நடித்த அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், கடல் மீன்கள் போன்றவற்றில் நவரசம் கலந்த சிறந்த கதாபாத்திரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
-அனிதா, சேலம்

70s 80s களின் சிறந்த காதல் ஜோடி என்றால் ரஜினி- ஸ்ரீப்ரியா தான். இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். அவள் அப்படித்தான், பில்லா, பொல்லாதவன், தனிக்காட்டு ராஜா போன்ற பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார்கள். இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். இருவர் கண்களிலும் கவர்ச்சி இருக்கும். ஸ்ரீப்ரியா நடிப்பில் அழுத்தம் இருக்கும். இருவருக்குமே நிறைய ரசிகர்கள் உண்டு. நானும் அவர்களில் ஒருத்தி.
-ராதிகா ரவீந்திரன், சென்னை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com