பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ்!

பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ்!
Published on
ஜி.எஸ்.எஸ்.

பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ்
6 போப்கள், 13 பிரதமர்கள், 70 ஆண்டுகள்.

ரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டனின் மணிமுடியையும் அரியணையையும் ஏற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பிரிட்டனின் சரித்திரத்திலேயே இவ்வளவு வருடங்கள் அரசாட்சி செய்தது இவர் ஒருவர்தான்.

அரசியை பற்றி மேலும் சில சுவாரசியமான தகவல்கள்.

  • வர் பிரிட்டனுக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, ஜமைக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பதினைந்து நாடுகளுக்கும் அரசியாக விளங்குகிறார். இவற்றை காமன்வெல்த் ராஜ்ஜியங்கள் என்கிறார்கள். இங்கெல்லாம் அரசி தனது சார்பாக ஓர் தலைமை ஆளுநரை நியமிக்கிறார். இவருக்கு அரசிக்குரிய அனைத்து அதிகாரங்களும் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் அனைத்துச் சட்டங்களுக்கும் ஒப்புதல் கையொப்பமிடுகிறார். மற்றபடி அரசி பொதுவாக அந்த நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடுவதில்லை.
  • வர் ஆட்சிக் காலத்தில் ஆறு முறை வாடிகனின் தலைவர் (போப்) மாறியிருக்கிறார். அரசியின் ஆட்சிக்காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலில் துவங்கி பதி மூன்று பிரதம மந்திரிகள் பிரிட்டனை ஆட்சி செய்தனர்.
  • விலங்குகளை விரும்புபவர் என்பதாலோ என்னவோ அவருக்கு விலங்குகளைப் பரிசாக அளிப்பவர்களும் உண்டு. அப்படித் தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஒரு யானை, இரண்டு கரடிகள், ஒரு சிறுத்தை, இரண்டு ஆமைகள் போன்றவற்றை அவர் லண்டன் விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பிவிட்டார்.
  • பிரிட்டிஷ் பாராளுமன்ற நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் அரசிதான் துவக்கி வைப்பது வழக்கம். 1959, 1963 ஆகிய வருடங்கள் மட்டும் விதிவிலக்கு. அப்போது இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் பிறந்திருந்தனர்.
  • ரசிக்கு மிகப் பிடித்த நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. 16 முறை அங்கு விஜயம் செய்திருக்கிறார்.
  • பிரிட்டனிலேயே அரசியின் காருக்கு மட்டும்தான் எந்த 'லைசன்ஸ் பிளேட் எண்'ணும் அவசியமில்லை.
  • பிரெஞ்சு மொழியை சரளமாக பேசக் கூடியவர். பிரான்ஸ் நாட்டில் இவர் பெயரில் ஒரு தெரு உண்டு.
  • ரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தின் மகளிர் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டவர் இவர்.
  • ண்டனுக்கு வரும் பல வி.ஐ.பி.களுக்கு பக்கிங்காம் அரண்மனையில் விருந்து அளிக்கப்படும். இப்படி ஆண்டுக்கு 50 ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
  • ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே தன் பர்ஸில் பணம் எடுத்துக் கொண்டு செல்வார். மாதா கோவிலுக்கு நன்கொடை கொடுப்பதற்காக..
  • நாய்களின் மீது கொள்ளை விருப்பம். இதுவரை 30 நாய்களை அவர் வளர்த்துள்ளார்.
  • ளவரசியாக இருந்த போது இளவரசர் பிலிப்பை மணந்து கொண்டவர். இரு வருடங்களுக்கு முன் இளவரசர் பிலிப் மறையும்வரை அவரோடு இணைந்திருந்தார்.
  • 2010ல் முகநூலில் இணைந்தார். பின்னர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் உறுப்பினரானார்.
  • ன் தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைந்தபோது எலிசபெத் ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு விஜயம் செய்திருந்தார். தந்தையின் மறைவு அவருக்குத் தெரிவிக்கப்பட அவசரமாக லண்டன் திரும்பினார். அரசியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
  • பொதுவாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது என்றால் அரசிக்கு ஒருவித கூச்சம் உண்டு. அவருடைய திருமண புகைப்படங்கள் கூட மிகக் குறைவுதான். அவர் முடிசூட்டிக் கொண்டபோது முதல்முறையாக அது போன்றதொரு நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதற்கு முதலில் ஒப்புதல் கொடுத்த கொடுக்க மறுத்தார்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமலேயே விஜயம் செய்திருக்கிறார்.
  • ட்டப்படி இவர் வரி செலுத்த வேண்டியதில்லை. என்றாலும் 1992லிருந்து தானாகவே முன்வந்து வருமான வரி, முதலீட்டு லாப வரி ஆகியவற்றை செலுத்தி வருகிறார்.
  • மூன்று முறை அரசி இந்தியாவுக்கு வந்திருக்கிறார். முதன்முறை 1961ல். அப்போது சென்னையில் தனது மகன் ஆன்ரூவின் முதலாம் ஆண்டு நிறைவுக்காக கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது அவர்களை வரவேற்ற அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு புலி வேட்டைக்கு இளவரசர் பிலிப்பை அழைத்துச் சென்றார்.
  • ரசியும் அவரது கணவரும் இந்தியாவின் 50 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 1997ல் இந்தியாவுக்கு விஜயம் செய்தனர். அப்போது பஞ்சாபிலுள்ள ஜாலியன் வாலாபாக் தோட்டத்துக்குச் சென்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அங்கு நடைபெற்ற படுகொலையில் இறந்த ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com