
அது ஒரு கல்யாண மண்டபம்! விருந்தும் இசைக் கச்சேரியுமாக ரிசப்ஷன் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. மணமக்கள் தேர்ந்த அலங்காரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
அப்போது படித்த களையுள்ள டீசன்டான மூன்று இளைஞர்கள், மாடர்ன் ஆன ஓர் இளம் பெண்ணுடன் மேடை ஏறி, மணமகனுடன் சண்டை போடுகிறார்கள். அந்த இளம்பெண் மணமகனின் சட்டையைப் பிடித்து உலுக்கி கோபமாகக் கத்துகிறாள்.
"என்னை லவ் பண்ணிட்டு, எப்படிடா, எவளையோ கல்யாணம் பண்ணலாம்?"
"அஞ்சு வருஷம் காதலிச்சோமே? இப்ப கழட்டிவிட்டா… பதில் சொல்லு!" என திட்டுகிறாள்.
மணமகன் அப்படியே 'ஷாக்' அடித்ததுபோல திகைச்சு நிற்க, அவனது வருங்கால மனைவிக்கும் ஒரே அதிர்ச்சி… நடுவில் புகுந்து என்னவோ அறிய முற்படுகிறாள்.
சற்று நேரத்தில் பெரியவர்கள் சூழ, ஒரே குழப்பம், கூச்சல்… மணப்பெண் கண் கலங்கித் தவிக்கிறார்.
சில நிமிடங்களில், அந்த இளைஞர்கள் மாப்பிள்ளையின் தோளைத் தட்டி, "கூல் ப்ரோ! ஜஸ்ட் எ ப்ரான்க்" என்கிறார்கள். காதலியாக நடித்த அந்த இளம் பெண்ணும் சிரித்தபடி, கையை அசைக்கிறாள்!
இவன்ட் ஆர்கனைஸரும், நண்பர்களும் சேர்ந்து செய்த ஜாலி கலாட்டாவாம்!
(இந்த வீடியோவை நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.)
………………………………
இன்னொரு கல்யாணம். மணமேடையில் மணமக்கள் நிற்கிறார்கள்.
ஓர் இளம் ஃபோட்டோகிராஃபர், மணப்பெண்ணை மட்டுமே
வளைச்சு வளைச்சு, மிக நெருக்கமாக நின்றபடி புகைப்படங்கள் எடுக்கிறார்.
"இப்படி போஸ் கொடுங்க!" என்றபடி மணமகளை தோள், கன்னம் என தொட்டுப் பேசுகிறார்.
இது தொடர்ந்து நடக்கவே, மாப்பிள்ளைக்கு வந்ததே கோபம்!
"ஏன்டா… அப்ப நாங்கல்லாம் யாரு?"ன்னு புகைப்படக்காரருக்கு ஓங்கி ஒரு குத்து விடுகிறார். அவர் ஓடியே போக, மணமகள் அதை ரசிச்சு, குலுங்கிக் குலுங்கி சிரிச்சு, தரையில் மண்டியிட்டு தட்டி மகிழ்கிறார். இதுவும் மணமகள் வீட்டார் ஏற்பாடு செய்த 'ப்ரான்காம்!' அதாவது மாப்பிள்ளை ரோஷக்காரர்தானா என்று டெஸ்டிங் செய்கிறார்களாம்!
………………………………
ஓர் அழகான, அருமையான தாம்பத்தியத்துக்குள் நுழையும்போது, ஒரு சீரியஸ்னெஸ் வேணாமோ?
குத்துப்பாட்டுக்கு மணமகள் ஆடிக்கொண்டே வருவது, ரேஸ் பைக்கில் ஸ்டைலாக வந்து இறங்குவது, சிலம்பம் சுற்றுவது… இதையெல்லாம்கூட ஓரளவுக்குப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டுவிடலாம்.
ஆனால் 'ப்ரான்க்' என்ற பெயரில் கலவரம், ரகளை செய்வது எல்லாம்
டூ மச்! த்ரி மச்!
இந்த செட்-அப் பற்றி ஒன்றும் தெரியாத மணமக்களின் வயதான தாத்தா, பாட்டி, அப்பா – அம்மா போன்றவர்கள், இது போன்ற 'ப்ரான்க்' செயல்களால் அதிர்ந்து போய், அதனால் அவர்களுக்கு சில சமயம் மாரடைப்பு கூட நேரலாம்! அல்லது ப்ரெயின் ஹெமரேஜ் நேரலாம்! பின்விளைவுகள் பற்றிக் கவலை இல்லாமல் அப்படி என்ன சிறுபிள்ளைத்தனம்?
இனிமையான பந்தத்துக்குள் இரு மனங்கள் நுழையும் புனித விழாவில், தோழியரே, தோழர்களே… கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்… மணநாளில்
ஓர் அவச் சொல்லைக்கூட, பேசாமல், கேட்காமல் கண்ணியம் பார்த்த சமுதாயத்தில் இந்தக் கேவலமான செயல்பாடு வருத்தம் தருகிறது. நீங்களும் உங்கள் பாழாய்ப் போன ப்ரான்க்கும்!
டீஸிங்குக்கும் புதுமை எல்லாம் ஓர் அளவுக்குத்தான்! அளவுக்கு மீறினால் கம்பி எண்ண வேண்டி வரும்!
வாழ்நாள் முழுதும் நினைத்து மகிழ வேண்டிய நல்லதொரு நிகழ்வு அது! ப்ளீஸ் நோ யுவர் லிமிட்ஸ்! கீப் டிஸ்டென்ஸ்!
……………………………………………………………………………………………………………….
சென்ற இதழில் இடம் பெற்ற மகளிர் தின சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
வெற்றி பெற்ற அனைவருக்கும் ஒரு பரிசு வீடு தேடி வரும். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
விடைகள்:
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ்