சிங்கப் பெண் காவலர்கள்குற்றம் – வழக்கு – விசாரைண – 4. – பெ.மாடசாமிஓவியம் : தமிழ்.திருநின்றவூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பாரதிகண்ணம்மா, இரவு ரோந்து முடிந்து, அதிகாலை சுமார் நான்கு மணிக்கு காவல் நிலையம் திரும்பியபோது, ஒரு இளம் தம்பதி அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார்..'இவ்வளவு அதிகாலையில் என்ன பிரச்னை?' என்று கேட்க…."மேடம், என்னுடைய பெயர் அஸ்வின். இவள் என்னுடைய மனைவி யஷ்வந்தினி. எங்களுக்குத் திருமணம் ஆகி சுமார் எட்டு மாதமாகிறது. திருமணத்திற்குப் பிறகு அவள் விருப்பப்பட்டதால் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தாள். நேற்று இரவு நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக ஊருக்குக் கிளம்பும்போது, நகைகளை எடுத்துக்கொள்ளச் சொன்னேன். பீரோவில் நகைகள் எதுவுமே இல்லை என்பது தெரிந்தது. 'என்னாச்சு' என்று கேட்டபோது, 'நண்பர் ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று நகைகளைக் கொடுத்து உதவியதாகவும் திருப்பித் தராமல் அவர் ஏமாற்றுவதாகவும்' கூறுகிறாள். நகைகளைத் திருப்பி வாங்கிக் கொடுங்கள் மேடம். அதுதான் வந்திருக்கிறோம்" என்று சொன்னார். இளம் வயதாக இருந்தாலும், மிகுந்த பொறுமை உடையவராக இருந்தார் அஸ்வின். யஷ்வந்தினி அழுததால் முகம் பார்க்க கஷ்டமாக இருந்தது..தேர்தலை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக வந்தவர் ஆய்வாளர் பாரதிகண்ணம்மா. பகல் முழுவதும் பணி செய்துவிட்டு, இரவிலும் தொடர்ந்து பணியில் இருப்பதால் அதிக சோர்வாக இருக்கவே, இந்தப் பிரச்னையை உடனடியாக விசாரித்துத் தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதாலும், குற்றப்பிரிவில் விசாரணை செய்வதற்கு பொறுப்பான நபர்கள் வேறு யாரும் இல்லாததாலும், ''மதியம் இரண்டு மணிக்கு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்..ஜீப்பில் வீட்டிற்குச் செல்லும்போது, முன்பு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இதேபோல் இரவு ரோந்து நேரத்தில் ஒரு நாள் நடந்த நிகழ்வை எண்ணிப்பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார்..அன்று… இரவு ஒரு மணிக்கு ரோந்து புறப்படும்போது, 25 வயதான இளைஞர் ஒருவர் தன்னிடம் வந்து, 'நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளை நாளைக்குப் பெண் பார்க்க வருகிறார்கள். அவளை அவளுடைய பெற்றோர்கள் கொடுமைப்படுத்துவதாக மெசேஜ் வந்துள்ளது. அவளைக் காப்பாத்துங்க மேடம்' என்று சொல்லி ஒரு மெசேஜைக் காட்டினான். அவன் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை. நள்ளிரவில் திடீரென்று ஒரு வீட்டிற்கு போலீஸ் போனால் அதனுடைய விளைவு நன்றாய் இருக்காது என்பதால், சாமர்த்தியமாக அப்பெண்ணின் பெற்றோரிடம் தங்கள் வீட்டில் பிரச்னை என்று கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்துள்ளது' என்பதாகப் பேசி, 'உங்கள் வீட்டுக்கு வரலாமா?' என்று அனுமதி கேட்டு அங்கு சென்றபோது, பிரச்னை ஏதும் இல்லை என்று தெரியவந்தது..அந்த வீட்டில் இரண்டு பெண்கள். இளைஞன் கூறிய பெண் மற்றும் அவளுடைய தங்கை ஒருத்தி. அக்காவை மறுநாள் பெண் பார்க்க வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் மெசேஜ் பற்றி எதுவும் சொல்லாமல், 'காலையில் கொஞ்சம் காவல் நிலையம் வர முடியுமா?' என்று கேட்க, எவ்வித மறுப்புமின்றி, ஏன் என்றுகூடக் கேட்காமல், 'வருகிறோம்' என்று பெற்றோர்கள் சொன்னார்கள்..மறுநாள் விசாரணை முடித்ததில், அக்காளுக்கும் அவள் விரும்புகிறவருக்கும் சீக்கிரமாகத் திருமணம் நடந்தால்தான், தான் விரும்புகிறவரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று எண்ணிய தங்கை, அக்காவைப் பெண் பார்க்க வருவதை தடுக்கும் பொருட்டு, அக்காவின் போனிலிருந்து அக்கா அனுப்புவது போன்று அவள் விரும்புகிறவருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறாள் என்பது தெரிந்தது..தங்கள் பிள்ளைகளைப் பற்றி எதுவுமே தெரியாமல், ஆய்வாளர் சொன்ன செய்தியைக் கேட்டு விக்கித்துப் போனார்கள் பெற்றோர்கள். அதன் பின்பு பெண் பார்க்கும் படலம் நிறுத்தப்பட்டு, அப்பெண் விரும்பிய இளைஞனின் பெற்றோரை வரவழைத்து திருமணத்தை நடத்தி வைத்ததை நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் செல்ல, "என்னம்மா சிரிச்சிக்கிட்டே வர்ரீங்க…" என்று மகள் கேட்டபோது "ஒன்றுமில்லையம்மா…" என்று மறுபடியும் சிரித்துக் கொண்டார்..மதியம் இரண்டு மணிக்கு ஆய்வாளர் காவல் நிலையத்தில் நுழையும்போதே கணவன், மனைவி இருவரும் பெஞ்சில் காத்திருப்பது தெரிந்தது. இருவரையும் அமரச் சொல்லி, "உங்க பிரச்னையைப் பொறுத்தமட்டில், உங்களை ஏமாற்றியவர் யார் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நடந்ததை மறைக்காம சொல்லுங்க. உங்களுடைய ஒத்துழைப்பில்தான் நகையை மீட்க முடியும்" என்று சொன்னதுமே,.யஷ்வந்தினி கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது. அவளோடிருந்த கணவரையும் யஷ்வந்தினியின் அம்மாவையும் கொஞ்சம் வெளியே இருக்கும்படி சொல்லிவிட்டு யஷ்வந்தினியை விசாரித்ததில்….யஷ்வந்தினிக்கு அப்பா இல்லை. அம்மாவும் ஒரு தங்கையும் மட்டுமே. அவளுடைய அம்மா, தன் மகளுக்குப் போதுமான நகை போட்டு திருமணத்தை நடத்தியிருக்கிறார். அவளது கணவர் திருமணத்திற்குப் பிறகு, அவளுடைய விருப்பப்படி படிக்கக் கல்லூரிக்கு அனுப்பியதிலிருந்து அவர் மனைவியை நன்றாக வைத்திருந்தது தெரிந்தது. உடன் படித்தவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, அவருடைய கஷ்டத்தைப் போக்க, தன்னுடைய நகைகளை ஒவ்வொன்றாக வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளார் யஷ்வந்தினி. ஒருகட்டத்தில், 'நகைகள் திரும்பி வராதோ' என்று சந்தேகம் வர, மிகவும் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கிறார். அதே தெருவில் குடியிருக்கும் மகேஸ்வரி, யஷ்வந்தினியின் பிரச்னையை கேள்விப்பட்டு தன்னுடைய கணவர் ஆனந்தனிடம் சொல்லி, நகைகளை வாங்க உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். ஆனந்தனிடம் நடந்த விவரத்தைச் சொன்ன பின்பும் நகை கிடைக்கவில்லை. இரவு ஊருக்குப் புறப்படும்போதுதான் நகை பற்றிய விவரம் கணவருக்குத் தெரிந்தது என்ற செய்திகளை யஷ்வந்தினி கூறினார்..நகையை யாரிடம் கொடுத்தாரோ, அவரைப் பற்றிய முழுமையான விவரம் மட்டுமல்ல; எவ்வளவு நகை என்பது பற்றியும் யஷ்வந்தினிக்குத் தெரியவில்லை..இப்புகார் சம்பந்தமாக தேடியதில் ஆனந்தன் மட்டுமே கிடைத்தார். அவரை விசாரணை செய்ததில், தன்னுடைய மனைவி மகேஸ்வரி தன்னிடம் அனைத்து விவரங்களையும் சொன்னது உண்மைதான் என்றும், ஆனால் தான் எதுவும் செய்யவில்லை எனவும் மறுத்தார்..ஆய்வாளருக்கு தன்னுடைய காவல்துறை அனுபவத்தின் காரணமாக, 'ஆனந்தன் ஏதோ செய்திருக்கிறான். ஆனால், மறைக்கிறான்' என்பது மட்டும் தெரிந்தது. தேர்தல் பணிக்கு இடையிடையே அவனை பலமுறை தொடர்ச்சியாக விசாரித்ததில்… மூன்றாவது நாள்…."மேடம், இங்கு இருக்கிற எல்லோரையும் கொஞ்சம் வெளியே போகச் சொல்லுங்க. உங்களிடம் கொஞ்சம் பேசணும்" என்றான். அங்கிருந்தவர்கள் வெளியே செல்ல, ஆனந்தன் ஆய்வாளரிடம், "மேடம்… போலீஸ்ல இப்படியும் இருப்பார்களா?" என்று கேட்டான்.."என்னய்யா, சொல்ற…?"."மேடம் மூணு நாளா உங்களைப் பார்க்கிறேன். நியாயமான, நேர்மையான அதிகாரியா இருக்கீங்க. மனிதாபிமானமா பேசுறீங்க, உங்களைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு மேடம். உங்க நல்ல குணத்திற்காகவே நான் உண்மையைச் சொல்கிறேன் மேடம்…" என்றான் ஆனந்தன்..அவனுடைய வாக்குமூலத்தில் யஷ்வந்தினி சொன்ன நபரைக் கண்டுபிடித்து அவனிடம் பேசி, நாற்பது சவரன் நகையை வாங்கியதாகவும், வாங்கிய நகைகளை பைனான்ஸ் கம்பெனியில் அடகு வைத்து செலவு செய்துவிட்டதாகவும், நகையைக் கொடுத்தவர் வெளிநாடு போய்விட்டதாகவும் சொன்னான்..ஏமாற்றிய சட்டப்பிரிவில், ஆனந்தன் மற்றும் நகையை வாங்கிய நபர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பைனான்ஸ் கம்பெனியிலிருந்து நகையைக் கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது..இப்பிரச்னையால் யஷ்வந்தினிக்கும் அஸ்வின் குடும்பத்திற்கும் அதிக பிரச்னை ஏற்பட்டுவிட்டது. யஷ்வந்தினியின் நடவடிக்கை அவளுடைய அம்மாவிற்கே பிடிக்கவில்லை. 'அப்பா இல்லாத நிலையில் திருமணத்தை நடத்தி வைத்தும், அவளது நல்ல வாழ்க்கையை அவளே கெடுத்துக்கொண்டாளே' என்று அவளால் எதுவும் பேச முடியவில்லை..ஆய்வாளர் தம்பதியினர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் செய்தார். அஸ்வினைப் பொறுத்தமட்டில் சமாதானம் அடைந்தாலும், அவனுடைய குடும்பத்தினருக்கு யஷ்வந்தினியின் நடவடிக்கை பிடிக்கவில்லை.தேர்தல் முடிந்த நிலையில் ஆய்வாளருக்கு மாறுதல் வந்துவிட்டது. புதிய இடத்திற்கு வந்த பின்பு, தம்பதியினர் பற்றி விசாரித்ததில், 'இருவரும் நீதிமன்றம் மூலம் பிரிந்து விட்டார்கள்' என்று தெரிய வந்தது..'காவல்துறை பணியை நிறைவாகச் செய்தாலும், இருவரையும் சேர்த்து வைக்க முடியவில்லையே' என்கிற ஏக்கம் ஆய்வாளர் பாரதிகண்ணம்மாவுக்கு இருந்துகொண்டே இருக்கிறது.(அடுத்தது…)(உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனைப் பெயர்களுடன் எழுதப்பட்டது.)