Sweet எடு கொண்டாடு!

Sweet எடு கொண்டாடு!
Published on
ஆதிரை வேணுகோபால்.

வணக்கம். அடிக்கிற வெயில்ல ஸ்வீட்டா! அப்படீன்னு உங்க மைண்ட் வாய்ஸ்ல பேசறது எனக்கு கேக்குது.  இல்லப்பா … ஸ்வீட் சாப்டீங்கன்னு வச்சுக்கோங்க, வெயில் ஜில்லுனு மாறிடும். இப்போ சீசன்ல கிடைக்கிற சில பொருட்கள் / நம்ம வீட்டில் இருக்கிற பொருட்களை கொண்டு சில வித்தியாசமான இனிப்புகளை செய்யலாம் வாங்க!

பலாப்பிஞ்சு கீர்

தேவையான பொருட்கள்:

லா பிஞ்சு – கால் பகுதி
கடலைப்பருப்பு – அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
கெட்டி தேங்காய்ப்பால் – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள் ஸபூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

லா பிஞ்சை சுத்தம் செய்து, தோல் மற்றும் நடுப் பகுதியை நீக்கி விட்டு மீதமுள்ளதை  நன்கு பொடியாக நறுக்கி, சிறிதளவு நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, நீரை வடித்து விட்டு வைக்கவும்.

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இந்த வெல்லக்கரைசலில் பலா துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும். பிறகு வெந்த பருப்புகளை சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும் தேங்காய்ப்பால் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். நெய்யை சூடாக்கி அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை நன்கு சிவக்க வறுத்து கீரில் போட்டு பரிமாறவும்.

……………………………………………..

வீட் க்ரம்பள் (Wheat crumble)

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு  – ஒரு கப்
பொடித்த சர்க்கரை – அரைகப்
பாம்பே ரவை – 1டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம் – தலா10 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்)
ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன்
நெய் – 4  டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கோதுமை மாவு, ரவை, மற்றும் நெய்யை நன்கு கலக்கவும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மொத்த கலவையையும் மாவாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஒரே அளவிலான 8 உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இப்பொழுது அடி கனமான வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் உருட்டி வைத்த மாவை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

(இதை அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்) அப்பொழுதுதான் உருண்டையின் உட்புறமும் நன்றாக வறுபடும். இப்படி பொன்னிறமாக வறுத்து எடுத்த உருண்டைகளை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். சூடு ஆறியதும் உருண்டைகளை மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ளவும். இத்துடன் பொடித்த சர்க்கரை ஒன்றிரண்டாக பொடித்த பாதாம் + முந்திரி மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். இதை ஒரு குட்டிக் பௌலில் போட்டு ஸ்பூன் வைத்து அப்படியே சாப்பிடலாம்.சுவையில் அசத்தும் இந்த 'வீட் க்ரம்பள்'. அல்லது லட்டுகளாக அழுத்திப்பிடித்தும் சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.

……………………………………………..

ஆப்கான் ஃபாக்

தேவையான பொருட்கள்

வெள்ளரி விதை -100 கிராம்
பூசணி விதை – 100 கிராம்
சாரப்பருப்பு -100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பாதாம்-100 கிராம்
கசகசா ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை ஒரு கிலோ
நெய்- கால் கிலோ
ஏலக்காய்த்தூள் -அரை டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
பால் அரை லிட்டர்.

செய்முறை:

ரை லிட்டர் பால் கால் லிட்டர் ஆகும் வரை நன்றாக சுண்டக் காய்ச்சவும். காய்ச்சிய பாலில் வெள்ளரி விதை, சாரைப் பருப்பு, பூசணி விதை ,கசகசா, முந்திரி, பாதாம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறிய பருப்புகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும் . அடி கனமான வாணலியில் தண்ணீரை ஊற்றி சர்க்கரை சேர்த்து கம்பி பதம் வரும் வரை நன்கு கிளறவும். இதில் அரைத்த பருப்புகளையும், நெய்யையும் சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும். இந்த கலவை வாணலியில் ஒட்டாமல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி பிடித்த வடிவில் வெட்டிக் கொள்ளவும்  வாயில் போட்டவுடன் கரையும் சுவைமிகுந்த 'ஆப்ஃகான் பாக்'தயார். (இதற்காக எல்லா பருப்புகளும் வீட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை உங்களிடம் என்ன பருப்பு இருந்தாலும் அதைக் கொண்டே இந்த இனிப்பை செய்யலாம்) சுவையில் அசத்தும் இந்த இனிப்பு.

……………………………………………..

பைவ் ஸ்டார் மிட்டாய்!

தேவையான பொருட்கள்:

கேரட், பீட்ரூட், முள்ளங்கி இவை மூன்றின் துருவலும் சேர்ந்த கலவை  1கப்
தேங்காய் துருவல் – 1/4கப்
முந்திரி தூள் – 1/4கப்
சர்க்கரை இல்லாத கோவா – 1/4கப்
நெய் – 1/2கப்
ஏலக்காய்த்தூள் – 1டீஸ்பூன்
சர்க்கரை – 4கப்

செய்முறை:

டி கனமான வாணலியில் 5 டீஸ்பூன் நெய் விட்டு காய்கறி துருவலைப் போட்டு, மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும். சர்க்கரை ,தேங்காய் துருவல் முந்திரி  தூள், கோவா எல்லாவற்றையும் கலந்து மேலும் நன்கு கிளறவும் . மீதமுள்ள நெய்யை விட்டு , ஏலக்காய்த்தூள் தூவி மேலும் நன்கு கிளறி வாணலியில் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும் . மேலும் இரண்டு கிளறு கிளறி தட்டில் கொட்டி சமப்படுத்தி வில்லைகள் போடவும். சத்தும் சுவையும் நிரம்பிய டூ இன் ஒன் பர்பி இது. (என் மகன் / மகள் எந்த காய்களும் சாப்பிடுவதில்லை என்று புலம்பும் தாய்மார்களுக்கு இந்த இனிப்பு ஒரு வரப்பிரசாதம்.)

……………………………………………..

அஞ்சீர் மிட்டாய்!

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் – அரை கிலோ
சர்க்கரை – 300 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா -100 கிராம்
நெய் – 150 கிராம்
ஆரஞ்சு ரெட் ஃபுட் கலர் – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய முந்திரி பிஸ்தா – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் அத்திப் பழத்தை தோல் உரித்து நன்றாக மசித்து தனியே வைத்துக் கொள்ளவும். பிறகு அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதோடு மசித்த அத்திப்பழத்தை  சேர்த்துக் கிளறவும். பிறகு சர்க்கரை இல்லாத கோவாவையும் ஃபுட் கலரையும்  சிறிது ஆறிய தண்ணீரோடு கட்டியில்லாமல் கலந்து கொதிக்கும் சர்க்கரைக் கலவையோடு சேர்த்து நன்றாக கிளறவும். இவ்வாறு கிளறும்பொழுது  நெய்யை அவ்வப்போது ஊற்றி நன்கு கிளறவும். கலவை நன்றாக திக்காக வந்தவுடன்  நெய் தடவிய தட்டில் மொத்த கலவையையும் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பிஸ்தா துண்டுகளைத் தூவி(சற்று ஆறியதும்) துண்டுகள் போடவும். சுவையான ஆஞ்சீர் மிட்டாய் ரெடி.

(பி.கு. ஃப்ரெஷ் அத்திப்பழம்  கிடைக்காத பட்சத்தில் உலர்ந்த அத்திப் பழங்களை வாங்கித் தண்ணீரில் ஊறவைத்து பிறகு மிக்ஸியில் அடித்தும் உபயோகிக்கலாம்.)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com