
அது ஒரு காலேஜ் ஹாஸ்டல். அங்கே நூறு மாணவியர் தங்கிப் படித்து வந்தனர். அந்த விடுதியில், காலை உணவு என்னத் தெரியுமோ? ரவை உப்புமா! வாரத்துக்கு இரண்டு நாளோ, மூணு நாளோ இல்லை… தினமுமே ரவை உப்புமா… ரவை உப்புமா! தவிர வேறு ஒண்ணுமில்லை!
சரி, ஒரு தேர்தல் போல வெச்சு, எந்தச் சிற்றுண்டிச் செய்யலாம்னு, வோட்டு போட்டு முடிவெடுக்கலாம்னு தீர்மானிச்சாங்க.
உப்புமா பிடிச்சுருக்குன்னு சொன்ன 20 பேரைத் தவிர மிச்சம் 80 பேர் இருக்காங்களே! ஆளுக்கொரு டேஸ்ட் இருக்குமில்லையா? அதன்படி வாக்கு போட்டாங்க.
மசால் தோசை – 18
ஆலு பராத்தா – 16
ரோட்டி, சப்ஜி – 14
பிரட், பட்டர், ஜாம்- 12
நூடுல்ஸ் – 10,
இட்லி, சாம்பார் – 10
அப்ப சரி 20 வாக்குகள் வாங்கிய 'உப்புமாதான் டிபன்'ன்னு மறுபடி முடிவாயிடுச்சாம்!
நீதி:- நம்மிடையே பல நல்ல மாற்றங்களை, புதுமைகளை விரும்பும் மக்கள் 80 சதவிகிதம் இருந்தாலும், நமக்குள்ளே சுயநலமும் வேற்றுமையும் காணப்படும்வரை, அந்த 'உப்புமா பார்ட்டி'கள் நம்மை ஆளத்தான் செய்வார்கள்.
நம் போன்ற பெண்களின் அரசியல் கண்ணோட்டமும் மன நிலையும், ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்களும், செம்மையாக, வலிமையாக, ஒன்றாக, நன்றாக இருந்தால், தரமாக வாழலாம்.
விலைவாசி விஷம் போல ஏறும் இக்காலத்திலும் யோசிக்கா விட்டால் எப்படி கண்மணிஸ்?
சேர்ந்தே சிந்திப்போமா?