
– ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
————————————
கோடை வந்து விட்டாலே உடல்சூடு, வேர்க்குரு, கட்டி என அவதியுறுவோம். அதற்கு நன்னாரி சிறந்த பலனைத் தரும். இது கொடி வகையைச் சேர்ந்தது. இலை நீண்டு இருக்கும். இலையின் நடுவில் வெண்மை கலந்த பச்சையும், ஓரங்களில் அடர்ந்த பச்சையும் இருக்கும். இரண்டு வகையான நன்னாரி உள்ளது.
சுருள் சுருளாக இருந்தால் சீமை நன்னாரி, மாகாளிக்கிழங்கு வேர் தான் நாட்டு நன்னாரி. இது பானங்கள் தயாரிக்கவும், நோயை குணப்படுத்தவும் பயன்படும். இதன் வேரை தண்ணீரில் ஊற வைத்து கஷாயமாகவோ, சர்பத்தாகவோ அருந்தலாம்.
நன்னாரிப் பொடியை ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்த சிறுநீர் மஞ்சளாக போவது நிற்கும். வயிற்றுப்போக்கு, இருமலைக் குணப்படுத்தும். நன்னாரி வேரைச் சுட்டுக்கரியாக்கி பொடித்து, சீரகம், சர்க்கரை சேர்த்து நெய்யில் குழைத்து தினமும் இரண்டு வேளை பத்து நாட்கள் சாப்பிட சிறுநீர் எரிச்சல், கடுப்பு, சூடு குணமாகும்.
நன்னாரி பசியைத் தூண்டும். சூட்டைத் தணிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். இது வாதம், மூட்டுவலி, வேர்க்குரு, வேனல்கட்டி, தலைவலி, தலைசூடு போன்ற உபாதைகளை போக்கும்.
நன்னாரி வேரைக் காய்ச்சி, நீரில் பெருங்காயம், நெய் கலந்து குடிக்க வாந்தி நிற்கும். பொடித்து தேனில் குழைத்துச்சாப்பிட அல்சர் வராது.
-மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
————————————
————————————
தலைமுடி உதிரும் தொந்தரவு உள்ளவர்கள் இளம் சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் நன்றாக மசாஜ் செய்து ஊறிய பின் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
ஆலிவ் ஆயில், வைட்டமின் ஏ, சி, ஈ, போலிக் ஆசிட் ,செலினிய, துத்தநாக சத்துக்களின் செழுமை கொண்டதால் சருமம் மினுக்கும்; கூந்தலும் மிளிரும்!
ஆலிவ் எண்ணெயுடன் சிறிது பொடி உப்பை கலந்து சொரசொரப்பான கை மற்றும் காலில் பித்த வெடிப்பு உடையவர்கள் தேய்த்துக் கொண்டால் கை கால்கள் மென்மை பெறும்.
-இந்திராணி தங்கவேல், சென்னை