வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Published on
வழிபாடு!

றைவனை நாம் வழிபடும் போது கற்பனை செய்து வழிபடுவதைவிட பாவனை செய்து வழிபட்டால் இறைவனை அதிகமாக நெருங்க முடியும். உதாரணமாக களிமண்ணை பிள்ளையாராய் பிடித்து வணங்கும் போது, களிமண் பூஜையறையில் சிம்மாசனம் இட்டுக்கொள்கிறது. அது மண்ணாய் இருக்கும் போது யாரும் திரும்பி பார்பார் கிடையாது. பிள்ளையாராய் அமர்ந்து இருக்கும்  அந்த  உருவ பாவனை நம்மை பக்தி நிலைக்கு கொண்டு செல்கிறது. இறைவனிடத்தில் நெருங்கச் செய்கிறது.

கற்பனையில்  மனச்சிதறல் இருக்கும் பாவனையில் மனம் ஒருமைப்படும்.  இறைவனை  வழிபடும்  போது மனம், மொழி, மெய்   என்ற  மூன்று  நிலையில்  வழிபடுவது  சிறப்பு.

இறைவனுக்கு பூ சூட்டி, கண்களை மூடியபடி, கைகுவித்து வணங்குதல்  இவையாவும்  மெய்வழி  வழிபாடு . இறைவன் நாமத்தை ஜெபித்தல், திருமுறை ஓதுதல், பக்தி பாமாலை பாடுதல் இவையாவும்  மொழிவழி வழிபாடு .

பாவனை வழிபாடே மனதின் வழிபாடு. சுவாமி படத்தை , சிவகாசி காலண்டர்  என்று நினைக்காமல்  சுவாமியாக பார்ப்பது தான் பாவனை. சிலைகளை இது வெள்ளியா? வெண்கலமா?  பித்தளையா?  என்று ஆராய்ச்சி செய்யாமல் சதையும் இரத்தமும் உள்ள தெய்வஙாகளாக பாவிக்கும் வழிபாடே மனவழிபாடு.

மனோ பாவமே உருவ வழிபாட்டின் ஆணிவேர் 

பாவனையே  உருவ வழிபாட்டின் ஜீவ சக்தி.

-ஜானகி பரந்தாமன், கோவை 

         ————-

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம்!

துபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் மணம் நம்மை சூழ்ந்துவிடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு.

ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள்.

-பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

       ————-

ராமனின் மகிமை 10!
  • இன்றுவரை ராமராஜ்யம் என்ற அவன் ஆட்சிமுறை புகழப்படுகின்றது.
  • ஸ்ரீராமனின் புகழ் உலகம் முழுக்க பரவியிருந்தது இன்னும் தாய்லாந்து முதல் இந்தோனேஷுயா கிழக்கு சைனா வரை அவனின் வரலாறு உண்டு,
  • அவன் செய்த ராஜநீதியே பின்னாளில் மனுநீதி சோழன் தன் மகனை பசுவுக்காய் கொல்லும் அளவு ஆட்சி கொடுத்தது,
  • அவனின் பொய் சொல்லா குணமே அரிச்சந்திர கதையின் நாதம்.
  • அவனின் சகோதர பாசத்தின் தொடர்ச்சியே பாரதம்
  • அவனின் அரச நீதியின் தொடர்ச்சியே சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம்.
  • ஸ்ரீராமன் கதையினை முழுக்க வாசிக்கும் ஒருவனுக்கு அவனின் ஏதாவது ஒரு குணம் வரகூடும், அவன் அதனை பின்பற்ற வேண்டும்.
  • தான் வீரன் எனும் வாலியின் அகங்காரம் அவனால் ஒழிக்கபட்டது, அழகி எனும் கர்வம் கொண்ட சூர்ப்பநகையின் அகங்காரம் அவனாலே ஒழிக்கபட்டது, தாடகை அவனிடமே அடங்கி வீழ்ந்தாள்.
  • மூவுலகை வென்ற ராவணின் அகங்காரம் அவனிடமே ஒழிந்தது. தன்னை வெல்ல சத்திரியன் எவனுமில்லை எனும் பரசுராமனின் அகங்காரமும் அவனிடமே ஒழிந்தது.
  • ஸ்ரீராமனின் ஒரே குறை, குறை காணமுடியா வாழ்வினை அவன் வாழ்ந்தான் என்பதன்றி வேறல்ல‌.
    -சுந்தரி காந்தி.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com