
முத்தான பத்து: நம் வாழ்க்கை கெத்து
வாழ்வின் மிக முக்கியமான திறமை என்பது மக்களுடனான உறவை எவ்வாறு நாம் கையாள்கிறோம் என்பதுதான். ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப அறிவு தெரிந்தவரை விட, தொழில்நுட்ப அறிவுடன், தலைமைப் பொறுப்புகளை ஏற்று, மக்களை உற்சாகப்படுத்தி, வழிநடத்துபவர் பெரிய பதவிகளைப் பெறுவார்.
மனிதன் ஒரு சமுதாய விலங்கு. மனித உறவுகளை எப்படி பேண வேண்டும் என்பதை குறித்த புத்தகம் இல்லாமல் இருந்தது. 1912ம் ஆண்டு பேச்சுக்கலை குறித்த பயிற்சிகளை எடுத்துவந்த டேல் கார்னகி, இத்தகையதொரு புத்தகத்தின் அவசியத்தை உணர்ந்தார். இதனைக் குறித்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, பல்வேறு வெற்றியாளர்களின் சரித்திரங்கள் படித்து, பல்வேறு வெற்றியாளர்களை பேட்டி கண்டு, 1936ம் ஆண்டு 'நண்பர்களை எளிதாக பெறுவதும், மக்களிடம் செல்வாக்கு பெறுவதும் எப்படி' (How to win friends and influence people) என்ற புத்தகத்தை எழுதினார். அது கோடிக்கணக்கில் இன்று வரை விற்கப்பட்டு வருகிறது. உலகின் எல்லா காலங்களுக்குமான சிறந்த விற்பனை புத்தகம் (All time best seller) என்று அழைக்கப்படுகிறது.
அந்த புத்தகத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அவற்றிலிருந்து, மக்களுடான நமது உறவை ஆரோக்கியமாக, இணக்கமாக, நேர்மறையாக வைத்திருக்க கெத்தான பத்து விஷயங்களைப் பார்ப்போம்.
உங்களது உறவுகள் மேம்பட வாழ்த்துகள்.