இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே!– கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல், கரும்பு, வயக்காடுகளின் ஊடே நான் கேட்ட அந்தப்பாட்டுதான் "சுத்த சம்பா பச்ச நெல்லு!" நாட்டுப்புறப் பாட்டுக்கு, வேகமான வெஸ்டர்ன் 'பீட்'டு அந்த நிமிடம் ஏற்பட்ட இசை மயக்கம் இன்னும் தீரவில்லை… 'எம்பி 3'க்களில் அவரது இசை கேட்டே வளர்ந்திருக்கிறோம். அவர் இப்போது 'எம்.பி' ஆகிவிட்டார். இது இசைஞானிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! எதையும் அரசியலாக்கிப் பேசுபவர்கள், பேசினால் பேசட்டும்! வாய்தான் வலிக்கும்..நமக்கெல்லாம் தெரியும், இளையராஜா ஓர் இன்டென்ஸிவ் மியூஸிசியன்! 80 வயதெல்லாம் ஒரு விஷயமே அல்ல! இசைத் துறைக்கு நல்ல விஷயங்கள் செய்யும் துடிப்பும், ஞானமும் உள்ளவர். 'இசை' பட வாழுங்கள் 'இசை'யே!.************************.விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ 2000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதே!– பவானி பரமசிவம், மதுரை.ஜஸ்ட் 9000 கோடி ரூபாய் திருப்பிக் கட்டலை! அவ்வளவுதானே! அது ஒரு குத்தமாய்யா? ஏழைப்பட்ட குடும்பம்! இம்புட்டு பணத்துக்கு அவர் எங்கய்யா போவாரு…? நீதிபதி அய்யா, கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி! திடீர்னு இவ்வளவு பெரிய தண்டனை விதிச்சா… பச்சை மண்ணு… அந்த அப்பாவி… எப்படித் தாங்குவாரோ…? நினைச்சாலே கண்ணு கலங்குது!.************************.மேடம், 'மிமி' ஹிந்திப்படம் பார்த்தீங்களா? அதில் வரும் டாக்ஸி டிரைவரின் பொறுப்பு, பொறுமை, உதவும் உள்ளம் எனக்குப் பிடித்தது… உங்களைக் கவர்ந்த கேரக்டர் யார் மேடம்?-என். கோமதி, நெல்லை.நானும் 'மிமி' பார்த்து மெல்ட் ஆயிட்டேன் கோமதி. டாக்ஸி டிரைவர் கதாபாத்திரம் வித்யாசமான குணச்சித்திரம் என்றாலும் பணத்துக்கு ஆசைப்பட்டுதானே என்ட்ரி ஆனார்? 'மிமி'யும் தன்னுடைய சிறப்பான எதிர்காலத்துக்காகதானே அந்த டீலுக்கே சம்மதித்தாள்? அப்படி பார்க்கும்போது, எல்லாரையும்விட டாக்ஸி டிரைவரின் மனைவிதான் சூப்பர் கேரக்டர்!.பணத்தாசையால், சம்பந்தமேயில்லாத ஒரு பிள்ளைக்கு கணவன் அப்பாவானது தெரிந்து சண்டை போட்டாலும், விஷயம் புரிந்தவுடன் அவரும் குடும்பத்துடன் சேர்ந்து குழந்தையைக் கொண்டாடுவதும், க்ளைமேக்ஸில் கண்ணீருடன் வழியனுப்புவதும் மெர்ஸல் மொமன்ட்ஸ்! இப்படித்தான், நடைமுறையிலும் சில எளிய பெண்கள் செய்யும் மாபெரும் தியாகங்கள் கண்ணுக்குத் தெரியாமலே போய்விடுகிறது!! ஹும்!(ப்ளிஸ்… add one பெருமூச்சு ஹியர்!).************************.மொபைல் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன?– சி. கார்த்திகேயன், சாத்தூர்.சாவி கொடுத்துக் கொடுத்து, காது வெச்சு கேட்டு 'அலாரம்' டைம் பீஸை தினமும் 'செட்' பண்ணி வைப்போமே?.அப்புறம் அந்த 'லிஃப்கோ' டிக்ஷனரி', 'அட்லஸ்' எல்லாம் எங்க போச்சோ?.பழைய டப்பா கேமிராவைத் தொட்டாலே, வீட்லே திட்டு விழுமே! இப்ப பேம்பர்ஸ் போட்ட ஃபீடிங்பாட்டில் பேபீஸே வீடியோ எடுத்து அனுப்புதுங்க!.ஹிந்தி, சமையல், எல்லாம் பணம் கட்டி படிச்சோமே? தேவுடா! இப்ப எல்லாமே யூ ட்யூப்ல படிச்சுக்கலாம்!.ட்ரங்க்கால், ஐ.எஸ்.டி போன்ற வார்த்தைகள் புழக்கத்திலே இல்லை! அன்டாா்ட்டிகாவுல இருக்குற அத்திம்பேரோட வீடியோகால் பேசலாம் அரை நொடியில!.பணப் பரிமாற்றம் ஸோ ஈஸியா! மாதாந்திர பில்கள் எல்லாம் ஒரே கிளிக்கில்! முப்பது ரூபாய்க்கு பேல்பூரி சாப்பிட்டு, பேடிஎம் கரோ!.கற்றல், ஆராய்ச்சி எல்லாத்துக்கும் நண்பேன்டா! சலிப்பே இல்லாத பொழுது போக்குசாதனம்! கைக்கு அடக்கமான டிஜிட்டல் தேவதை! என்டர்டெயின்மென்ட் ஏஞ்சல்! இன்னும் என்னென்னவோ லொட்டு லொசுக்கு… எல்லாமே சொகுசு!.மைனஸ்களும் இல்லாமல் இல்லை! அது ஒரு போதை வஸ்து. அடிக்ட் ஆகிவிட்டால் மனநோயாளிதான். காது, கண் மக்கர் ஆகும் அபாயம் உண்டு! குறிப்பா, தூக்கம் கெட்டுப் போகும்! 'Cyber bullying' 'Cyber crime' பிரச்னைகள் பிராண்டும்..எதிலும் மிதமான போக்கு இருந்தால் நன்மை. எல்லை மீறினால் இம்சைதான்! செல்ஃபோனிலும் அப்படியே!