சவாலே சமாளி!.தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.சென்னை ராயப்பேட்டையில் கிட்ஸ் கேர் ரீஹேப் சென்டர் (Kids Care Rehab Centre) என்ற பெயரில் ஆட்டிசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்காக ஒரு புனர் வாழ்வு சிகிச்சை மையம் நடத்தி வருபவர். டாக்டர் ராதா. ஆட்டிசம், கற்றல் குறைபாடு, கவனச் சிதறல், வளர்ச்சி மற்றும் பேச்சு தாமதம் இருக்கும் குழந்தைகளுக்கு கடந்த 20 வருட காலமாக பல விதமான தெரபிகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார் ராதா பாலசந்தர்.."எங்களிடம் வரும் ஒவ்வொரு குழந்தையுமே எங்களுக்கு ஸ்பெஷல்தான். அவர்களுக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து, அவர்களுக்குள் மறைந்திருக்கும் தனித்திறமையை வெளிக் கொணர்ந்து, அவர்களுக்கு மறு வாழ்வு தருவதோடு மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கிறோம். ஒவ்வொரு குழந்தையின் சிகிச்சையுமே ஒரு சவாலான விஷயம்தான். ஆனால், அந்தக் குழந்தைகள் தங்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ளும்போது ஏற்படும் மன நிறைவுக்கு ஈடு எதுவும் இல்லை" என்று கூறும் டாக்டர் ராதா பாலசந்தர், அண்மையில் தான் எதிர்கொண்ட ஒரு ஆப்பிரிக்கக் குழந்தையின் சிகிச்சை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.."கொஞ்ச நாள் முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு ஆப்பிரிக்கப் பெற்றோர் ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தையை அழைத்து வந்தனர். அக் குழந்தைக்கு நிற்கவோ, நடக்கவோ முடியாது. தவிர, கையை ஆட்டிக் கொண்டே இருக்கும். உணவை மென்று உண்ணாமல் ஸ்பூனில் கூழ் மாதிரி ஆக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நடத்தை குறைபாடுகளும் நிறைய இருந்தன. ஆட்டிசம் வேறு இருந்ததால் எப்போதும் படுத்துக் கொண்டு காலை ஆட்டிய வண்ணம் இருக்கும்..முதலில் அவளை சரியாக நிற்க வைக்க கடும் பயிற்சி தர வேண்டிய திருந்தது. 'என்னால் நிற்க, நடக்க முடியும்' என்று உளவியல் ரீதியாக மீண்டும் மீண்டும் சொல்லி நிற்க நடக்க வைத்தேன்..அதே மாதிரி சாப்பாடு கொடுத்தால் வாயருகே கையைக் கொண்டு போனாலே தட்டிவிடுவாள். மிக முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுவாள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வைத்து, இப்போது திட உணவு உட்கொள்ளுகிறாள். நடக்கிறாள், கைகளை கிராஸ் ஆக வைத்துக் கொள்ளப் பழக்கியதில் கையை ஆட்டுவதை கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது நாம் பேசுவதை திருப்பி சொல்கிறாள், பேச்சும் வருகிறது. அந்தக் குழந்தைக்கு வயிற்றிலும் கோளாறு இருந்தது. ஒவ்வொரு பிரச்னையாக சரி செய்து இன்று ஓரளவு குணப்படுத்தியுள்ளோம்.".எத்தகைய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு என்னென்ன தெரபிகள் தரப்படுகின்றன? என்று டாக்டர் ராதாவிடம் கேட்டோம்.."ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு, Occupational Therapy எனப்படும் ஒரு பணியில் ஈடுபடவைக்கும் சிறப்பு பயிற்சி தருகிறோம். இவர்களுக்கு தனி கல்வி முறை மற்றும் Applied Behavioural Analysis எனப்படும் பண்பாடு நடத்தைப் பகுப்பாய்வு எல்லாம் கற்பிக்கப்படுகின்றன..சமூக திறன்பாடு, (Social Skill Development), உணர்ச்சிகளை ஒருங்கிணைத்தல், சுய கட்டுப்பாடு இவற்றுக்கான பயிற்சிகளும் தரப்படுகின்றன..மூளையின் திறனை அதிகரிக்க, ஞாபகசக்தி அதிகரிப்பிற்கான பயிற்சிகள், ஒருமுக கவனம், கூர்ந்து எதையும் கவனித்தல், கண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல்படுதல் இவற்றுக்கான சிகிச்சைகள் அளிக்கிறோம்..தவிர கையெழுத்தை மேம்படுத்துதல், பயமின்றி பரீட்சைக்கு படித்து மதிப்பெண்கள் பெறுதல் என்று ஒவ்வொன்றாக தெரபிகள் தரப்படுகின்றன..மூளைக்கும், உறுப்புக்களின் செயல்பாடுகளுக்கும் தொடர்பின்மை நிலை (Perceptual Motor Integration disorder) சிலருக்கு இருக்கும். அவற்றுக்கும் தெரபி தருகிறோம்..ஒவ்வொரு குழந்தையையும், வயதுக்கேற்றபடி உடல் மன வளர்ச்சி, பேச்சுத்திறன், மற்றவருடன் பழகுதல், ஒழுங்கான நடவடிக்கை இவற்றை விரிவாக ஆய்வுகள் செய்து, தெரபிகள் தொடர்கின்றன (Comprehensive Child and Adolescents Screening).நேரடியான சிகிச்சைகள் தவிர ஆன்லைனிலும் டெலி தெரபிகள் தரப்படுகின்றன. ஆசிரியர்கள், தெரபிஸ்ட்கள், சிறப்புக் குழந்தை களுக்கான பள்ளிகள் நடத்துவோர் அனைவரையும் இணையம் வழியே இணைத்து வெபினார்கள் நடத்தப்படுகின்றன..இவை தவிர, அடல்ட் ஃபிசியோ கேரும் (Adult Physio Care) அளிக்கப் படுகிறது. தோள், மூட்டுக்கள், முதுகு, கழுத்து வலி, பார்க்கின்சன்ஸ், டிமென்ஷியா, நரம்புத் தளர்ச்சி இவற்றுக்கெல்லாம் பிசியோ தெரபி தரப்படுகிறது" என்கிறார் டாக்டர் ராதா பாலசந்தர்.